இந்த வாரம், தனது பன்னிரண்டாவது வயதில் தனது தந்தையாரை இழந்த ஒரு பெண்மணியின் ஜாதகத்தைத் தருகின்றோம். நாம் மேலைநாட்டினரைப் போலப் பத்தாம் பாவத்தையே தந்தையைக் குறிக்கும் இடமாக எடுத்துக் கொண்டுள்ளோம். வாசகர்கள் ஒன்பதாமிடத்தைத் தந்தையாரைக் குறிக்கும் இடமாக எடுத்துக்கொள்வதில் நமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.




கேது தசையில் இருப்பு வருஷம் 6 மாதம் 11 நாள் 8
இந்த ஜாதகத்தில் சனி மட்டுமே சத்துரு வீட்டில் இருக்கின்றது. சந்திரனும் செவ்வாயும் மித்துரு வீட்டில் இருக்கின்றன. மீதமுள்ள சூரியன்,புதன், சுக்கிரன்,வியாழன் ஆகிய நான்கு கிரகங்களும் தமது சொந்த வீட்டில் இருக்கின்றன. இந்த ஜாதகியின் தந்தையார் இருக்கும் வரை செல்வச் செழிப்பில் இருந்த இவரது குடும்பம் அவரது மரணத்துக்குப் பின்னர் பெரும் சரிவைச் சந்தித்தது.
கீழ்க்கண்ட காரணங்கள் தந்தையின் மரணத்தைக் குறிக்கின்றன என்பது நமது கருத்து.
- பத்தாம் பாவாதிபதி, பத்தாம் பாவத்துக்கு எட்டில், பத்தாம் பாவத்துக்கு அட்டமாதிபதியான சூரியனோடு சேர்க்கை.
- ஜாதகி இரவில் பிறந்திருப்பதால் பிதுர்காரகன் சனியாகும். பிதுர் ஸ்தானாதிபதியாக வந்த சனி, பிதுர்காரகனாகவும் வந்து மிகவும் பலமிழந்து இருப்பது.
- பிதுர்காரகனுக்கு காரகனுக்கு எட்டாமிடத்ததிபதியாய் வந்த குருவின் பரிபூரணப் பார்வை.
- நவாம்ச சக்கரத்தில் லக்னத்துக்குப் பத்தாமிடத்திலும், பத்தாம் நவாம்ச ராசியான மிதுனத்துக்கு நான்காமிடத்திலும் செவ்வாய், சனி சேர்க்கை.
‘கிரகங்களின் முன்நகர்வு’ என்ற கட்டுரையில் நாம் விளக்கியுள்ள விசயங்களில் ஆர்வமுள்ளவர்களுக்காக கீழ்க்கண்ட விவரங்களைத் தருகின்றோம். இந்த ஜாதகரின் பன்னிரண்டாவது வயதுக்கான கிரகங்களின் நிலை.

சந்திரன் பத்தாமிடத்துக்கு எட்டாமிடத்தில், பத்துக்கு அட்டமாதிபதி சூரியனின் ஜன்மகால ஸ்புடமான 24 பாகை 27 கலையோடு மிக நெருக்கமான சேர்க்கை. வருசப்ரவேச, தசாப்ரவேச காலங்களில் சூரிய, சந்திர சேர்க்கை மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது என்று நாம் 'அம்மாக்களுக்கு' என்ற கட்டுரையில் எழுதியிருப்பதைக் கவனிக்கவும்.
எல்லாவற்றுக்கும் மேலான ஒரு குறிப்பு: இந்த ஜாதகியின் தந்தையார் கும்ப லக்னத்தில் பிறந்தவர். இந்த ஜாதகக் கிரக நிலைகளை கும்பலக்னத்துக்கு வைத்துப் பார்த்தால் தந்தையின் மரணம் ஏன் இவ்வளவு விரைவில் வந்தது என்பதை அறிய முடியும்.
This Week’s Quote:
Desire is the very essence of man.
- Baruch Spinoza
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.