இந்த வாரம் தான் பிறந்த நான்காவது நாளில் தனது தாயை இழந்த ஒரு பெண் குழந்தையின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்யலாம். இந்த ஜாதகம் எனது தந்தையார் எழுதி வைத்திருந்த ஜாதகக் குறிப்புக்களிலிருந்து எடுக்கப்பட்டது.




மேலோட்டமான பார்வையில், கேது நான்காம் பாவத்துக்கு எட்டில் இருந்து, அந்தத் தசை நடந்ததால் தாயின் மரணம் நேர்ந்தது என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் 16.11.1965ல் இதே மகர லக்னத்தில் பிறந்த ஒருவரின் தாய் இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்டால் மறு நிமிசம் நமது சித்தாந்தங்கள் தவிடு பொடியாக நேரிடும். எனவே நாம் இந்த மாதிரியான மேலோட்டமான பார்வையை விட்டுவிட்டு, முதல் ஓராண்டில் சந்திரதசை நடப்பதாகக் கருதிச் சந்திரனுக்கும் தாயின் மரணத்துக்குமான தொடர்புகள் ஏதாவது இருக்கின்றனவா எனப் பார்ப்போம்.
- நான்காம் பாவாதிபதி செவ்வாய் லக்னத்துக்குப் பன்னிரண்டில்.
- ஜாதகி பகலில் பிறந்திருப்பதால் மாதுர்காரகன் சுக்கிரன். சுக்கிரனும் லக்னத்துக்குப் பன்னிரண்டில்.
- பாவாதிபதி செவ்வாயும், பாவகாரகனும், சுக்கிரனும் தனுசில். தனுசு ராசியாதிபதி குரு லக்னத்துக்கு ஆறாமிடமான மிதுனத்தில், வக்ரகதியில்.
- பாவர் சம்பந்தமும், பார்வையும் பெற்ற புதன், நான்குக்கு எட்டாமிடத்தில். (புதன் செவ்வாயின் நவாம்சபதி).
- நான்காம் பாவத்தின் ஆரூடம் எட்டாமிடமான சிம்மத்தில்.
இக்காரணங்கள் தாயின் ஆயுளுக்குக் குறைவு ஏற்படுத்தும் என எடுத்துக்கொள்ளலாம்.
சந்திர நிசர்க்கிகதசை முதல் ஓராண்டு நடக்கும் என்பதால் சந்திரனுக்குத் தாயின் மரணத்தோடு சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா எனப் பார்க்கலாம்.
- நான்காம் பாவத்துக்கு அட்டமாதிபதியோடு சந்திரன் திரிகோணப் பார்வையில்.
- நான்காம் பாவத்துக்கு அட்டமராசியான விருச்சிகத்துக்குக் கேந்திரத்தில்.
- நவாம்சச் சக்கரத்தில் லக்னத்துக்கு நான்கில்.
- நான்காம் பாவத்துக்கு மூன்று ஆறுக்குடையவனும், நான்காம்பாவத்துக்கு எட்டிலிருப்பவனுமாகிய புதனுக்குக் கேந்திரத்தில். (ராசியிலும் அம்சத்திலும்)
- சந்திரன் நான்காம் பாவ த்வாதசாம்சபதியாக ஆகித் துவாதசாம்சச் சக்கரத்தில் லக்னத்துக்கு எட்டில்.
மேலேயுள்ள காரணங்கள் சந்திரனைத் தாயின் மரணத்தோடு சம்பந்தப்படுத்துகின்றன. இக்குழந்தையின் தாய் உடனே மரணமடைந்ததன் காரணம் அந்தப் பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தால் எளிதாக விளங்கும்.

This Week’s Quote:
But I do nothing upon myself, and yet I am my own executioner.
- John Donne
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.