ஜாதகத்தில் நிச்சயமாக இடம் பெறுவது நவாம்சச் சக்கரம். அதன் பயன் என்னவென்று கேட்டால், ஒவ்வொரு சோதிடமிருந்தும் ஒவ்வொரு பதில் வரும். ஆனால் அதன் உண்மையான காரணம், ஒருவருடைய ஆயுளை அதன் மூலம் சொல்ல முடியும் என்பது தான். அம்சச் சக்கரத்தின் மூலம் கிடைக்கும் ஆயுள் கணக்கிற்கு அம்சகாயுர்த்தாயம் என்றே பெயர். இந்த அம்சகாயுர்த்தாயத்தை எப்படி அறிவது?
நவாம்சச் சக்கரத்தில் ஒரு கிரகம், எந்த ராசியில் இருக்கின்றதோ அந்த ராசி மேஷம் முதல் எண்ணினால் எத்தனையாவதாக வருகின்றதோ அதில் ஒன்றைக் கழித்தால் என்ன எண் கிடைக்குமோ, அந்த வருடமே அந்தக் கிரகம் கொடுக்கும் ஆயுளாகும். நவாம்சச் சக்கரத்தில் துலாத்தில் ஒரு கிரகம் இருந்தால் அக்கிரகம் ஆறு வருடங்கள் ஆயுள் கொடுக்கும். ஏனெனில் மேஷம் முதல் துலாம் வரை எண்ணும் போது ஏழு கிடைக்கும். ஏழில் ஒன்றைக் கழித்தால் கிடைப்பது ஆறு. ஒரு கிரகம் மேஷத்திலேயே இருந்தால் அது கொடுக்கும் வருடம் ஒன்றுமில்லை. மீன நவாம்சத்தில் இருக்கும் கிரகம் பதினோரு வருடங்கள் கொடுக்கும். இப்படி சூரியன் முதல் சனி வரையுள்ள கிரகங்கள் கொடுக்கும் வருடங்களைக் கூட்டினால் கிடைக்கும் வருடங்களே ஒருவரின் மொத்த ஆயுளாகும்.
நாம் மேலே சொல்லியிருப்பது கிரகங்களின் ஸ்புடக் கணக்குகள் எதையும் அறியாத, மிகச் சராசரி மனிதர்களுக்காக. எந்தக் கணக்கையும் தெரிய முடியாத சாதாரண மனிதர்கள் கூடத் தங்களது ஜாதகத்தின் மூலம் தங்களது ஆயுளைக் கணக்கிட்டுக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் நவாம்சச் சக்கரம். ஆனால் அம்சகாயுர்த்தாயம் மூலம் கணக்கிடப்பட்ட வருடங்களும் ஒரு மனிதனின் ஆயுளும் சரியாக இருப்பதில்லை என்ற உண்மை புரியப்புரிய இந்த நவாம்சச் சக்கரத்தின் முக்கியத்துவம் மங்கி மறைந்து போனது என்றுதான் நாம் கருதுகின்றோம்.
வாசகர்களுக்கு எளிதில் புரிவதற்காக மூன்று ஜாதகங்கள் தரப்பட்டுள்ளன. முதல் ஜாதகம் 25 வயதில் இறந்து போன பெண்ணின் ஜாதகம். இந்த ஜாதகிக்கு அம்சகாயுர்த்தாயத்தை ஒட்டிய வயதே ஆயுளாக அமைந்துவிட்டது. இரண்டாவது ஜாதகம் 47 வயதில் இறந்து போன பெண்ணின் ஜாதகம். இவரது ஆயுள் அம்சகாயுர்த்தாயத்துக்குச் சிறிது குறைந்து போனது. மூன்றாவது ஜாதகமும் ஒரு பெண்ணின் ஜாதகமே. இவருக்கு அம்சகாயுர்த்தாயப்படி கிடைத்த வயது 22. ஆனால் இவர் இன்னமும் வாழ்கின்றார். இவ்வாறு வித்தியாசங்கள் வருகின்றன என்பதற்காகவே இந்த உதாரண ஜாதகங்கள் தரப்பட்டுள்ளன. மிகக் கவனமாகச் செய்ய வேண்டிய கணக்குகளை உள்ளடக்கிய இந்த அம்சகாயுர்த்தாயத்தின் முழுமையான விவரங்கள், இக்கட்டுரைக்கு வாசகர்களிடமிருந்து வரும் விமர்சனத்தைப் பொறுத்துப் பின்னர் தரப்படும்.






முதல் ஜாதகத்தில் சூர்யன் 6, சந்திரன் 4, புதன், சனி இரு கிரகங்களுக்கும் தலா 2, செவ்வாய், வியாழன் இரு கிரகங்களுக்கும் தலா 1, சுக்கிரன் 8 ஆக மொத்தம் 24 வருடங்கள் கிடைக்கின்றன.
இரண்டாவது ஜாதகத்தில் சனி 2, சந்திரன் 3, வியாழன் 6, புதன் 8, சூரியன் 9, செவ்வாய், சுக்கிரன் இருவருக்கும் தலா 10 ஆக மொத்தம் 48 வருடங்கள் கிடைக்கின்றன.
மூன்றாவது ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் தலா 1, வியாழன் 2, சனி 3, சுக்கிரன் 5, புதன் 10 ஆக மொத்தம் 22 வருடங்கள் கிடைக்கின்றன. இவர் தனது 60 வயதை நிறைவு செய்துவிட்டார். மூன்றாவது உதாரணம் தரப்பட்டிருப்பது தங்களுக்கு அம்சகாயுர்த்தாயப்படி வயது அதிகம் வரவில்லையே என யாரும் கவலைப்படக் கூடாது என்பதற்காகத்தான்.
This Week’s Quote:
I think the human race has no future if it doesn’t go to space.
- Stephen Hawking
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.