சமீபத்தில் ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் ‘ஜ்யோதிஷ ஸர்வ விஷ யாம்ருதம்’ என்ற புத்தகம் கிடைத்தது. ஸ்ரீ விலாஸம் பிரஸ் ஸ்ரீரங்கம் என்ற முகவரியில் அச்சிடப்பட்ட 818 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் முதல் 346 பக்கங்கள் இல்லை. பலசோதிட நூல்களிலிருந்து விசயங்களைத் திரட்டி எளிய தமிழில் தந்துள்ள ஆசிரியரின் பெயர் மங்கிப் போயுள்ளது. ‘ஜோதிசமந்த்ர ஆயுர்வேத பண்டிதராஜ தைவக்ஜ’ என்ற அடைமொழிகள் தெரிகின்றன. பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் பத்தாமிடத்தைப் பற்றி விரிவாகச் சொல்லியிருப்பதால் நாம் அந்த விசயங்களை இங்கே தருகின்றோம். அதுவும் அவரது மொழியிலேயே தருகின்றோம். இவை சோதிட ஆர்வலர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தால், அப்பெருமை அப்பெரியவருக்கே.

ராசி நவாம்சங்களில் தசமஸ்தானமாக ஏற்படும் மேசம் முதலில் ராசிகளின் பலன். 

மேஷம்: தோட்டம் அமைத்தல், குழந்தை வளர்ப்பு, பயிர்த்தொழில், ரஸவாதம், வியாபாரம், சூர்யனை உபாசித்தல், தூதுபோதல் இவை முதலியவைகளால் ஜீவிப்பான்.

வ்ருசபம்: வண்டி, பிராணி, பட்சி, மிருகங்களின் மூலம் ஜீவிப்பான். ஜலமில்லாத இடத்தில் தான்யங்களைச் சேர்த்து அதன் மூலம் லாபத்தை அடைவான்.

மிதுனம்: கப்பல் வியாபாரி, முத்து, சங்கு, பவழம் இவைகளைப்பூரணமாக உடையவன். எழுத்து, கணக்கு வேலைகள் மூலம் ஜீவனம் செய்வான்.

கடகம்: ஆயுத வேலைகளில் சமர்த்தன். முத்து, முள் இவை மூலம் ஜீவிப்பான். வேட்டையாடுவது, ரஸவாதம் செய்தல், அன்னிய தேசத்தில் சஞ்சாரம் இவைகளையுடையவன்.

சிம்மம்: தங்கம், வெள்ளி போன்ற ரத்தினங்களைச் சேர்ப்பவன். பயிர் செய்வதில் ஆசையுள்ளவன். பசுவினால் ஜீவிப்பான். நெல் வியாபாரி. 

கன்னி: வண்டிகள் மூலம் ஜீவிப்பான். ரத்னம், தங்கம் இவைகளின் வேலைகளைச் செய்பவன். வாசனைத் திரவியங்கள், வஸ்திரம் இவைகள் சம்பந்தமான தொழில், சங்கீதம், சிற்பம், படம் வரைதல் இவைகள் மூலம் ஐஸ்வர்யம் உள்ளவன்.

துலாம்: வியாபாரம், பசு, எருமை மூலம் ஜீவனம். பலவித சாமான்கள் விற்பனை, ஜலத்திலிருந்து உண்டாகும் வஸ்துக்கள் வியாபாரம், தனம், தானியம், கிழங்கு வியாபாரம், பழம், கிழங்கு இவற்றைப் பயிர் செய்தல் இவைகளை உடையவன்.

விருச்சிகம்: ஸ்திரீ மூலம் ஐஸ்வர்யம், பயிரிடுவதில் ஆசை, எப்போதும் முயற்சித்தல், அரசனைச் சேவித்தல், சரீர வைத்தியம், உலோகங்களால் செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்தல், தானியங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை இவைகள் மூலம் ஜீவிப்பான். 

தனுசு: மந்திரி, நகரங்களைச் காப்பவன், பசு, குதிரை முதலியவைகளைப் பராமரிப்பவன், மர வியாபாரம் செய்பவன், சோதிடம் கூறுபவன். பழுதான யந்திரங்களைச் சீர்படுத்துதல், கணக்கு எழுதுதல், வைத்தியம் இவைகள் மூலம் ஜீவிப்பான். 

மகரம்: முத்து, பவழம் போன்ற ஜலத்தில் கிடைக்கும் பொருட்களின் வியாபாரம் மூலம் தனவானாவான். கட்டில் செய்தல், தோட்டம் அமைத்தல், ரசாயனம் தயாரித்தல் இவைகள் மூலம் ஜீவிப்பான். 

கும்பம்: ஆயுதங்கள், வெடிகள், குண்டுகள் இவைகளைத் தயாரித்தலாலும், திருடுவதாலும், ஸ்திரீகளுக்கு ஏவல் செய்வதாலும், சுமை தூக்கல், தோள், கை பலங்களால் செய்யக் கூடிய காரியங்கள் இவைகளாலும் ஜீவனம் செய்வான்.

மீனம்: ஆயுதங்கள், ஜலம், தோட்ட வேலை, குதிரை வியாபாரம் இவைகள் மூலம் ஜீவனம் நடக்கும்.

பத்தாமிடமோ பத்தாம் பாவ நவாம்சமோ மேச ம் முதல் மீனம் முடிய உள்ள 12 ராசிகளில் இருந்தால் அதற்குரிய தொழில்களை மேலேயுள்ள குறிப்புக்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். இவைகளுடன் பத்தாம் பாவத்தில் உள்ள கிரகங்களுக்குச் சொல்லப்பட்ட தொழில்களுடன் சேர்த்துப் பார்த்துப் பலன்களை யூகித்துக் கொண்டால், அவை பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.

 

This Week’s Quote:

There is nothing new in art except talent.

-  Anton Chekhov

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.