எமது நண்பர் ஒருவர் குதிரைப் பந்தய ஈடுபாட்டால் பெருஞ்செல்வத்தை இழந்தவர். கே.பி.யின் நட்சத்திர, உபநட்சத்திர சித்தாந்தத்தால் கவரப்பட்டவர். அவருக்குச் சோதிடத்திலும் பரிச்சயமுண்டு. கே.பி.யின் நட்சத்திர, உபநட்சத்திர முறைகளைச் சோதித்துப் பார்க்கக் கிரகங்களின் துல்யமான ஸ்புடங்கள் வேண்டுமே! அதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எமது தந்தையாரைப் பற்றிக் கேள்விப்பட்டு எமக்கு அறிமுகமானார். இழந்த செல்வத்தை இழந்த இடத்திலேயே மீட்க வேண்டும் என்ற துடிப்பில், சோதிடக் கணக்குகளின் மூலம் வெற்றி பெறம் குதிரையைக் கணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு அவர் எம்மையும் அம்முயற்சிகளில் ஈடுபடச் சொன்னார். கிடைத்த சிறிய அளவு தகவல்களை வைத்து நாம் சில குறிப்புக்களைக் கண்டு பிடித்தோம். குறிப்புக்களைப் பரீட்சித்துப் பார்க்கும் முன்பே அவர் இயற்கை எய்திவிட்டார். நாம் சேகரித்த குறிப்புக்களை வாசகர்களுக்குத் தருகின்றோம்.
- ஒற்றைப்பட்ட ராசிகளில் லக்னம் உதயமாகும்போது பெயரில் அதிக எழுத்துக்களைக் கொண்ட குதிரையும், இரட்டைப்பட்ட ராசிகள் உதயமாகும்போது குறைவான எழுத்துக்களைக் கொண்ட குதிரையும் ஜெயிக்கின்றன.
- ராசிகளின் முதல் திரேக்காணம் உதயமாகும்போது குறைவான எழுத்துக்களைத் தனது பெயரில் கொண்ட குதிரையும், இரண்டாவது திரேக்காணம் உதயமாகும்போது சற்றுப் பெரிய பெயரைக் கொண்ட குதிரையும், மூன்றாவது திரேக்காணம் உதயமாகும்போது நீண்ட பெயரையுடைய குதிரையும் ஜெயிக்கின்றன.
- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக லக்னங்கள் உதயமாகும்போது பெயரின் முதலெழுத்துக்கள் நெடிலாக இருக்கும்.
- மற்ற ராசிகளில் லக்னம் உதயமாகும்போது பெயரின் முதலெழுத்துக்கள் குறிலாக இருக்கும்.
- தலையால் உதயமாகும் லக்னங்களில் ஓ, ஒள என்ற ஓசைகளை உடைய பெயரும் பின்பக்கத்தால் உதயமாகும் லக்னங்களில் உ, ஊ என்ற ஓசைகளையுடைய பெயரும் ஜெயிக்கும்.
- ஒற்றை ராசி உதயமாகும்போது ஆரம்ப எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும் பெயரையுடைய குதிரை ஜெயிக்கும். உதாரணம்: Dream Star, Clark Kent, Kremer, Glorious Lord
- இரட்டை ராசி உதயமாகும்போது கடைசி எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கும் பெயரையுடைய குதிரை ஜெயிக்கும். உதாரணம்: Perfect Prince, Stunning Grey
- பொதுவாக 4 மணி நேர இடைவெளியில் குதிரைப் பந்தயங்கள் நடந்து முடியும். எனவே இரண்டு லக்னங்களே உதயமாகும்.
ஆகையால் லக்னத்தை மட்டும் கணக்கில் எடுக்காமல் நவாம்ச, த்வாதசாம்ச லக்னங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இக்குறிப்புக்கள் பலனைத் தரும்.
This Week’s Quote:
It is beyond a doubt that all our knowledge begins with experience.
- Immanuel Kant
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.