பிருஹஜ் ஜாதகத்தின் நான்காவது அத்தியாயத்தின் இருபதாவது சுலோகத்தில் பார்வையை முற்றிலும் இழந்தவர்களுக்கான குறிப்பும், கண்ணில் நோய் வருவதற்கான குறிப்புக்களும் உள்ளன. அதன்படி சிம்மம் லக்னமாக ஆகி அதில் சூரியன், சந்திரன் இருந்து சனி செவ்வாயால் பார்க்கப்பட்டால், ஒருவர் முற்றிலுமாகப் பார்வையை இழக்கின்றார் என்றும், சுபர்களாலும் பார்க்கப்பட்டால் முற்றிலுமாகப் பார்வையை இழக்காமல் கண்ணில் நீர்வடிதல், பூ விழுதல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றார் என்றும் கடலங்குடி திரு.நடேச சாஸ்திரிகள் உரை எழுதுகின்றார்.

சூரியனுக்குப் பாபக் கிரகங்களால் ஏற்படும் பார்வை, சேர்க்கை இவற்றால் வலக்கண்ணுக்கான பாதிப்பையும், சந்திரனுக்குப் பாபக் கிரகங்களால் ஏற்படும் பார்வை, சேர்க்கை இவற்றால் இடக்கண்ணுக்கான பாதிப்பையும் சொல்ல வேண்டும். மேலும் பன்னிரண்டாம் பாவாதிபதிக்கு நேர்கின்ற பார்வை, சேர்க்கை இவற்றால் இடக்கண்ணுக்கான பாதிப்பையும், இரண்டாம் பாவாதிபதிக்கு நேர்கின்ற பார்வை, சேர்க்கை இவற்றால் வலக்கண்ணுக்கான பாதிப்பையும் கண்டு கொள்ள வேண்டும்.

sample horoscope

sample horoscope

sample horoscope

sample horoscope

இந்த ஜாதகர் பிறப்பிலேயே பார்வையை இழந்தவர். சுமார் 300 மீட்டர் தொலைவுக்குள் மட்டுமே இவரது நடமாட்டம் உள்ளது. செவிப்புலனால் மட்டுமே அருகில் உள்ளவர்களின் அசைவுகளைக் கவனித்து, அதற்கேற்ப இவர் ஒரு சிறிய வட்டத்துக்குள் தனது வாழ்க்கைப் பரப்பைச் சுருக்கிக் கொண்டுள்ளார். சோதிட ஆர்வலர்கள் இவரது பார்வைக் குறைவுக்கான காரணத்தை இவரது ஜாதகக் குறிப்பிலிருந்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். 

‘எனது ஜாதகத்தில் ஒரு கிரகம் கூட உச்சமாக இல்லையே, நான் ஏன் பிறந்தேன்’’ என்று நொந்து கொள்பவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்களுக்காக இந்தத் தகவல். கடக லக்னத்தில் வியாழன் உச்சமாகவும், நான்கில் சனி உச்சமாகவும் இருக்க ராஜயோகத்தில் பிறந்த இந்த ஜாதகர், அன்றாடம் உழைத்தால்தான் உண்ண முடியும் என்ற சராசரி ஏழைக்குடும்பத்தில் பிறந்து 60 வருடங்களுக்கும் மேலாக அப்படியே வாழ்கின்றார். முதலில் வியாழ தசை, பின்னர் சனி தசை, அதன் பின்னர் புத தசை என்று 47 வருடங்கள் 7 மாதம் 28 நாட்கள் உச்சக் கிரக தசைகளிலேயே வாழ்ந்தவர் இவர். 

நவாம்சத்தில் சுக்கிரன், புதன், சனி நீச்சமாக உள்ளன என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். அப்படியானால் நவாம்சத்தில் சூரியன் சிம்மத்தில் வர்க்கோத்தமாக இருப்பதற்கும், சந்திரன் உச்சமாக இருப்பதற்கும், மிகச்சிறப்பான பலன்கள் சேரவேண்டுமே! நவாம்சத்தில் பலமாக உள்ள சூரியனும், சந்திரனும் இவருக்குப் பார்வையைக் கூடத் தரவில்லை. எனவே நாம் தொடர்ந்து எழுதி வருவது போல் இன்றும் எழுதுகின்றோம். மேலோட்டமான பார்வையைத் தவிர்த்துவிட்டு மிக ஆழமாகவும், நுட்பமாகவும் பரிசீலித்தால் மட்டுமே ஜாதக பலன்கள் நமக்குத் தரிசனமாகும்.

 

This Week’s Quote:

Ignorance is not innocence but sin.

-  Robert Browning

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.