சோதிடர்கள் மத்தியில் பிரபலமான சில சொற்கள் உண்டு. அவற்றில் ஒன்று நீசபங்க ராஜயோகம். கிரகம் நீச்சமாக இருந்தாலும், சில ஜாதகர்கள் செல்வச் செழிப்போடு வாழ்வதைக் கண்டால் அவர்களுக்கு நீச்ச பங்க ராஜயோகம் இருப்பதாகச் சொல்வார்கள். அதேபோல் உச்சக் கிரகங்கள் அமையப் பெற்றும் வளமான வாழ்க்கை இல்லாத ஜாதகர்களுக்கு ‘உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பான்’ என்று சொல்லிச் சமாளிப்பார்கள். நாம் ஆயுர்த்தாயக் கணக்குகளுக்கு மட்டுமே கிரகத்தின் உச்ச நீச பாகைகளைப் பயன்படுத்துவோமே தவிர பலன் சொல்வதற்கு அல்ல. இன்று எமது தந்தையாரின் ஜாதகத் தொகுப்பிலிருந்து ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.

sample horoscope

sample horoscope

sample horoscope

sample horoscope

15.05.1980ல் பிறந்த இந்த ஆண் குழந்தை 20.10.1980 மாலை 5 மணிக்கு இறந்து போனது. லக்னத்துக்கு எட்டாமிடத்தில் மூன்று பாவக்கிரகங்கள் இருப்பதை அரிஷ்டத்தைக் கொண்டு வரும் யோகமாகக் கருத முடியாது. ஆனாலும் இந்தக் குழந்தை 159-வது நாளில் இறந்து போனது. ஓராண்டுக்குள் இறந்து போனதால் நைசர்ச்சிக சந்திரதசை மரணத்தைக் கொண்டு வந்தது என்றும், வருச தசா முறைப்படி கணக்கிட்டாலும் 30.09.1980ல் வந்த சந்திர தசை மாரகத்தைச் செய்தது என்றும், கூறிவிட முடியும். விம்சோத்தரி தசா புக்திபடியும் (சந்திர தசை இருப்பு 6-9-9) எட்டில் இருந்த சந்திரன் தசையில், பாதக ஸ்தானத்தில் இருந்த மூன்றுக்கும் ஆறுக்குமுடைய குரு புக்தியில் மரணம் நேர்ந்தது என்றும் சமாதானம் கூறிக் கொள்ளலாம்.

ஆனால் சந்திரன் ராசியிலும் நவாம்சத்திலும் உச்சமாக இருப்பதால் சந்திரன் சுபமான பலனைத்தானே தரவேண்டும்? வியாழன் இயற்கை மித்துருவான சூரியனின் வீட்டில் இருந்து இன்னொரு மித்ருக் கிரகமான செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் நல்ல பலனைத்தானே செய்ய வேண்டும்? லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அதிமித்ருவான புதனின் வீட்டில் எந்தவிதப் பாப சம்பந்தமும் இன்றி இருப்பதற்குப் பலனேதும் கிடையாதா? சனியின் மூன்றாம் பார்வையை எடுத்துக்கொண்டால் துலா லக்னத்துக்கு யோக காரகன் பார்வை நல்லதுதானே? மரணம் நேர்ந்த நாளில் சந்திரன் கும்பத்திலும் வியாழன் கன்னியிலும் இருப்பதால் தசாநாதன் சந்திரனும் புக்திநாதன் குருவும் ஜன்மராசிக்குப் பத்து ,ஐந்து என்ற நல்ல இடங்களில்தானே இருக்கின்றார்கள்? சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பதால் கிடைக்கும் கஜகேசரி யோகம் என்ன ஆயிற்று? இப்படியெல்லாம் நிறையக் கேள்விகளைக் கேட்டுப் பதில்களைத் தேடுவோருக்கு மட்டுமே சோதிட சாத்திரத்தின் உண்மைகள் தெரியவருமே தவிர எட்டாமிடம், பாதகஸ்தானம் என்று சொல்லிக் கேள்விகளைக் கடந்து போவோருக்கு சோதிட ஞானம் கிட்டாது. 

சோதிட ஆர்வலர்களுக்காக 20.10.1980 தேதிய கிரகநிலைகள்

sample horoscope

 

This Week’s Quote:

The real problem is not why some pious, humble, believing people suffer, but why some do not.

-  C. S. Lewis

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.