நமக்கு மின்னஞ்சல் அனுப்பும் வாசகிகளில் பெரும்பாலோர் குழப்பத்திலும், பயத்திலும் மூழ்கிக் கிடப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. பன்னிரண்டு கட்டங்களில் மட்டுமே நமது வாழ்க்கை இல்லை, அது நமக்குள்ளேயே இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்தக் கட்டுரை. எட்டில் ராகு இருக்கிறது, ஏழில் வியாழன் இருக்கிறது என்ற பயத்துடனேயே சிலர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் ராசிகளின் பெயரையும், கிரகங்களின் பரிகாரங்களையும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் சோதிடர்கள்தான். அவர்கள் மிகவும் அச்சுறுத்துவதால்தான் நிறையப் பெண்கள் வீணான கவலைகளில் மூழ்குகின்றனர். அவர்களின் குழப்பங்களுக்கு விடை தருவதற்கே இந்த ஜாதகம்.




இவருக்கு 5 வருட ம் , 11 மாதங்கள் முடிய ராகு தசையும், பின் 21 வருடம், 11 மாதங்கள் முடிய வியாழ தசையும், 40 வருடம், 11 மாதங்கள் முடிய சனி தசையும், 57 வருடம் , 11 மாதங்கள் முடிய புத தசையும், 64 வருடம் , 11 மாதங்கள் முடிய கேது தசையும் நடந்தது. இவரது கணவர் ஒரு முதுபெரும் எழுத்தாளரின் மகன் ஆவார். 1982-ல் நாம் இருவரையும் சந்தித்துப் பேசிய போது இந்த ஜாதகம் எமது தந்தையாரின் பரிசீலனைக்கு வந்தது. அப்போது இவருக்குச் சுக்கிர தசை ஆரம்பித்து 3 வருடங்கள் கடந்திருந்தன.
வியாழன், சனி, புதன், கேது என்று 59 வருடங்கள் நடந்த தசைகளைப் பார்ப்போமானால் கீழ்க்கண்ட பாதகமான அம்சங்கள் தெரிய வரும்.
- வியாழன் ஆறுக்கும், ஒன்பதுக்குடையவனாகவும் ஆகி, ஏழாமிடத்தில், நீசத்தில் இருப்பு.
- சனி ஏழுக்கும், எட்டுக்குடையவனாகவும் வந்து பன்னிரண்டில் மறைவு.
- புதன் மூன்றுக்கும், பன்னிரண்டுக்கும் உடையவனாக வந்து, லக்னத்தில், நீசம் பெற்ற குருவின் சாரத்தில், சத்துரு வீட்டில் இருப்பு.
- கேது பாதகாதிபதி சுக்கிரனின் சாரத்தில், மாரக ஸ்தானத்தில் இருப்பு.
ஆனால் இவரின் வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்னையுமின்றியே வாழ்ந்தார். எனவே எமது கட்டுரைகளைப் படிக்கும் வாசகிகள் தேவையற்ற அச்சவுணர்வோடும், குழப்பத்தோடும் வாழ்வதை விட்டுவிட்டு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதே எமது அறிவுரை. பன்னிரண்டு கட்டங்கள் மட்டுமே வாழ்க்கையில்லை. ஒரு கிரகத்துக்கும் லக்னத்துக்கும் இடையே பன்னிரண்டு விதமான சம்பந்தங்கள் இருக்கும்போது ஏழு கிரகத்துக்கும் லக்னத்துக்கும் 7 * 12 = 84 விதமான சம்பந்தங்கள் ஏற்படுகின்றன. ஒரு லக்னத்தில் 9 நவாம்சங்கள் இருப்பதால் இந்த 84 சம்பந்தங்கள் 84 * 9 =756 ஆகப் பெருகுகின்றன. எனவே இராசியையும், நவாம்சத்தையும் மட்டும் எடுத்துக்கொண்டால் ஒரு லக்னத்துக்கு 756 விதமான பலன்கள் வரும். துவாதசாம்சத்தைக் கணக்கிட்டால் 84 * 12 = 1008 விதமான பலன்கள் வரும். இத்தனை விதமான பலன்களையும் கணித்துச் சொல்ல யாராலும் முடியாது.
எனவே சோதிடர்கள் கூறும் பலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், (கன்யாசசியையும் சேர்த்துத்தான்) எதையும் இலேசாக எடுத்துக்கொண்டு வாழப் பழகுங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமே கணக்குகளுக்குள்தான் இருக்கின்றது. அந்தக் கணக்குகளுக்கான சூத்திரங்களை விஞ்ஞானிகள் தேடட்டும். சாதாரண மனிதர்கள் தேடினால் அவை கிடைக்காது. அதைப்போலவே எல்லாக் கேள்விகளுக்கும் விடை பன்னிரண்டு கட்டங்களில் இல்லை. அவை ஆயிரக்கணக்கான கட்டங்களில் உள்ளன. இதை உணர்ந்தவர்களுக்குக் கவலையில்லை; என்றும் மகிழ்ச்சியே!
This Week’s Quote:
There are books of which the backs and covers are by far the best parts.
- Charles Dickens
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.