சென்ற வாரக் கட்டுரையைப் படித்த ஒரு வாசகி முகநூலில் ஒரு சோதிடர் செய்திருந்த பதிவு ஒன்றை எமக்கு அனுப்பியிருந்தார். 2, 4, 7, 12-ம் பாவங்கள் நன்றாக இல்லையெனில் திருமணமே செய்ய வேண்டாம் என்பது அவரது அறிவுரை. அந்தக் கட்டுரையின் மீதான எமது அபிப்ராயம் என்ன என்பதே அந்த வாசகியின் கேள்வி. நாம் எந்தவித அபிப்ராயமும் சொல்லப்போவதில்லை. பதிலாக ஒரு ஜாதகத்தைத் தருகின்றோம்.




நான்காம் பாவாதிபதி சூரியன் பன்னிரண்டில் மறைவு. ஏழுக்குடைய செவ்வாய் சூரியனோடு அஸ்தமனம். இரண்டுக்குடைய புதன் பன்னிரண்டில் மறைவு. இம்மூன்று கிரகங்களும் பன்னிரண்டில் உள்ள கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பு. சந்திர லக்னத்துக்கு நான்காம் அதிபதி சனி, சந்திர லக்னத்துக்குப் பாதகாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் இருப்பு. மூன்று ஆறுக்குடைய குரு, சந்திர லக்னத்துக்கு நான்கில் இருப்பு. சந்திர லக்னத்துக்கு ஏழில், சந்திர லக்னத்துக்கு மாரகாதிபதி செவ்வாய், பாதகாதிபதி சூரியன், விரயாதிபதி புதன் மூவரும் சேர்க்கை. 20 வருடம், 9 மாதம், 24 நாட்கள் முடிய ராகு தசையும், 36 வருடம், 9 மாதம், 24 நாட்கள் முடிய குரு தசையும், 55 வருடம், 9 மாதம், 24 நாட்கள் முடிய சனி தசையும், 72 வருடம், 9 மாதம், 24 நாட்கள் முடிய புத தசையும் நடந்தன. 1977 நவம்பர் மாதம் தன்னுடைய 76-வது வயதில் இவர் காலமானார்.
இவரது பழக்க வழக்கங்கள் விசித்திரமானவை. மிகுந்த சுத்தம் பார்ப்பவர். தனது வீட்டைத் தவிர வெளியிடங்களில் தண்ணீர் கூடக் குடிக்காதவர். சுத்தமான காபிக் கொட்டையை வறுத்துப் பொடி செய்து காபி கலந்து குடிப்பவர். அதுவும் மிகவும் அதிகமாகக் காபி அருந்தும் பழக்கம் உடையவர். மிகுந்த ருசியான சைவ உணவுகளையே விரும்புபவர். அதுவும் வாழை இலையில் பரிமாறப்படும் உணவுகளை மட்டுமே உண்பவர். உண்பதும், உறங்குவதும் தவிர வேறெந்த வேலையும் செய்யாதவர். மாத விலக்குப் பெண்களை சமையலறையில் அனுமதிக்காதவர்.
இவருக்கு ஒரே மகன். இவரது மனைவி இவர் இறந்த பின்பு இருபத்திரண்டு வருடங்கள் வாழ்ந்தார். அவர் கிறிஸ்தவர். இவர் இந்து. அவரது மதப்பழக்க வழக்கங்களில் இவர் குறுக்கிடுவதில்லை. மிகுந்த அன்யோன்யமான வாழ்க்கை. இவரது ஜாதகம் ஏழாம் பாவம் மிகவும் கெட்டுப்போன ஜாதகம் என்றே சொல்ல வேண்டும். எல்லாக் கிரகங்களும் (சுக்கிரனைத்தவிர) ஆறு, ஒன்பது, பன்னிரண்டில்தான். வியாழதசையும், சனிதசையும் பாதகஸ்தானம் என்று யாவரும் அச்சப்படும் ஒன்பதில் இருந்துதான் நடந்துள்ளன. சந்திரனைத்தவிர மற்ற கிரகங்கள் ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையே இருப்பதால் காலசர்ப்ப யோகம் இருப்பதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். ஸ்புடக் கணக்குகள் அறியாத சோதிடர் இந்த ஜாதகத்தைக் கால சர்ப்ப யோகம் உள்ள ஜாதகம் என்றே கணிப்பார். எந்தப் பொறுப்பும், எந்தக் கவலையுமின்றி உண்டு, உறங்கி வாழ்ந்தவர் இவர். கட்டங்களைப் பார்த்துக் கவலைப்படுபவர்கள் இவரது ஜாதகக் கட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம்.
This Week’s Quote:
Get your facts first, then you can distort them as you please.
- Mark Twain
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.