“உங்களது கட்டுரைகள் கொஞ்சம் கடினமாக உள்ளன. எளிமைப்படுத்துங்கள்” என்பது நமக்கு வரும் விண்ணப்பங்களில் முதன்மையாக உள்ளது. அப்படியானால் நாமும் ராசி பலன்கள்தான் எழுத வேண்டும். கணக்கு என்பதே கடினமானதுதான். அதிலும் எந்த வகையிலும் சோதித்துப் பார்க்கமுடியாத சோதிட சாத்திரத்தின் கணக்குகள் எளிமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறுதான். எமது தந்தையார் சோதிடக் கணக்குகளைக் கற்க வேண்டி வாங்கிய ஒரு புத்தகத்திலிருந்து சில வரிகளைத் தருகின்றோம்

மத்தியானத்திற்கு முந்தி ஜனனமாகில், மத்தியான நாழிகையில் ஜனன நாழிகையைக் கழித்தும், ஜனனமானது மத்தியானத்திற்குப் பிந்தியாகில், ஜனன நாழிகையில் மத்தியானத்தைக் கழித்தும், அர்த்தராத்திரிக்கு முந்தியானால் ராத்திரியில் சென்ற நாழிகையைப் பாதிப்பகலுடன் சேர்த்தும், அர்த்தராத்திரிக்குப் பிந்தியானால் சூரியோதயத்திற்கு இருக்கப்பட்ட நாழிகையுடன் பாதிப்பகலின் நாழிகையையும் சேர்த்துக் கொண்டால் ‘நத’ நாழிகை வரும்.

முதல்முறை படிக்கும்போதே இதைப் புரிந்து கொள்பவர் தேர்ந்த சோதிடராகிவிடலாம். இதையெல்லாம் திரும்பத் திரும்ப படித்துத்தான் நாம் கணக்குகள் செய்து பார்த்தோம். இவற்றுடன் ஒப்பிடும்போது நாம் மிகவும் எளிமைப் படுத்தித்தான் எழுதி வருகின்றோம். நவாம்சபதி, த்வாதசாம்சபதி என்ற சொற்கள் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். மற்றபடி கிரகங்களுக்கோ, இராசிகளுக்கோ நாம் புதிதாகவா பெயர் சூட்டியுள்ளோம்? நாம் பின்பற்றும் தசா விம்சோத்தரி அல்ல என்பது மட்டுமே புதிய விசயம். சோதிட ஆர்வலர்களின் ஆய்வுக்காக இன்று நாம் இரண்டு ஜாதகங்கள் தருகின்றோம்.

sample horoscope

sample horoscope

sample horoscope

sample horoscope

இரு சகோதரர்களில் மூத்தவருக்கு 04.09.1979-ல் பெண் குழந்தையும், இளையவருக்கு 05.09.1979-ல் ஆண் குழந்தையும் பிறந்தன. சந்திரன் மட்டும் மகரத்திலிருந்து, கும்பத்துக்கு வந்துள்ளது. புதன் நவாம்சத்தில் மிதுனத்திலிருந்து, கடகத்துக்கு வந்துள்ளது. வேறு மாற்றங்களில்லை. இரண்டு குழந்தைகளுக்குமே லக்னாதிபதி செவ்வாய்தான். முதல் குழந்தைக்குச் செவ்வாய் மூன்றில். இரண்டாவது குழந்தைக்கு செவ்வாய் எட்டில். முதல் குழந்தைக்குச் சந்திரதசை. இரண்டாவது குழந்தைக்குச் செவ்வாய்தசை. சந்திரன் பத்திலிருந்து தசை நடத்தியது. செவ்வாய் எட்டிலிருந்து தசை நடத்தியது. பெண் குழந்தை 3-வது மாதத்தில் இறந்து போனது. ஆண் குழந்தை வளர்ந்து திருமணம் செய்து இனிதே வாழ்கின்றார். ஆனால் இவரது தாயார் இவர் கைக்குழந்தையாக இருக்கும்போதே தற்கொலை செய்து கொண்டார்.

பெண் குழந்தையின் மரணத்திற்கும், ஆண்குழந்தையின் தாயாரின் மரணத்திற்கும் காரணங்களைத் தேடிக் கண்டுபிடிப்பவர்கள் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை. எல்லோரும் பின்பற்றி வரும் விம்சோத்தரி தசை முறைப்படி, ஆய்வு செய்து விடை காண்பவர்களிடம் நாம் பாடம் கற்கத் தயாராக உள்ளோம்.

 

This Week’s Quote:

Judge a man by his questions rather than his answers.

-  Voltaire

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.