சோதிடத்தின் அடிப்படையே கணக்குதான். ராசி மண்டலத்தில் சுற்றி வரும் கிரகங்களின் சுழற்சிக்கும், மனித வாழ்க்கையின் பல்வேறு சம்பவங்களுக்கும், இடையே தொடர்பு ஒன்று இருப்பதாக எண்ணித்தான் பண்டைய வானசாஸ்திரிகள் இச்சாத்திரத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் எதிர்ப்படும் சந்தோஷமான, துக்ககரமான நிகழ்ச்சிகள் எப்போது வரும் என்பதைக் கண்டுபிடிக்க பலவகையான கிரகதசைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். பிண்ட தசை, நைசர்க்கிக தசை, அம்ச தசை, காலச்சக்கர தசை, ஜைமினி சூத்திரத்தின்படியான சர ராசி தசை, ஸ்திர தசை, திரிகோண தசை என்பவை பிரபலமான தசைகள்.
“பலதீபிகை” என்ற சோதிட நூலின் இருபதாவது அத்தியாயத்தின் அறுபதாவது சுலோகத்தில் அந்நூலின் ஆசிரியர் கீழ்க்கண்ட ஒரு கருத்தைச் சொல்கின்றார். ‘தசைக்குள்ள வருஷங்களைப் பன்னிருபாகங்களாக்கி, அவ்வத் தசாநாதன் இருக்கும் ராசி முதல் த்வாதச பாவங்களால் சுபஅசுப பலன்களைக் கூற வேண்டியது’ அதாவது சுக்கிரதசையின் பலனை விரிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றால் இருபது வருஷங்களைப் பன்னிரண்டு பங்கு வைத்து, முதல் பங்கைச் சுக்கிரன் இருக்கும் ராசியோடு சம்பந்தப்படுத்தியும், இரண்டாவது பங்கைச் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு இரண்டாவது ராசியோடு சம்பந்தப்படுத்தியும் பலன் சொல்ல வேண்டுமென்பதே இதன் அர்த்தம். இருபது வருஷங்களைப் பன்னிரண்டு பங்கு வைத்தால் பங்கு ஒன்றுக்கு இருபது மாதங்கள் வரும். முதல் இருபது மாதங்களுக்குச் சுக்கிரன் இருக்கும் ராசி சம்பந்தப்பட்ட பலனையும், ஐந்தாவது இருபது மாதங்களுக்குச் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு ஐந்தாவது ராசி சம்பந்தப்பட்ட பலனையும் சொல்ல வேண்டும்.
நமது அனுபவத்தில் நாம் நிறையச் சோதனைகளைச் செய்து பார்த்துள்ளோம். தசா புக்திகளைவிட இவை நமக்குச் சில விஷயங்களைக் கூடுதலாகச் சொல்கின்றன என்பதே நமது கருத்து. ஒன்றிரண்டு உதாரண ஜாதகங்களோடு இதுபற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பேசலாம்.
கட்டுரைகளுக்கான விமர்சனப் பெட்டியில் ஒருவர் எமக்குப் பாதிக் குறளை அனுப்பியுள்ளார். அவருக்கு நாம் முழுமையாக ஒரு குறளைத் தருகிறோம்.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
This Week’s Quote:
If you want a quality, act as if you already had it.
- William James
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.