வாக்கியப் பஞ்சாங்கப்படி வரும் 19.03.2020 வியாழக்கிழமை அதிகாலை 5.15 மணிக்குச் செவ்வாயும், குருவும், சனியும் தனுசு ராசியில் உத்ராடம் 1-ம் பாதத்திலும், சந்திரன் மகர ராசியில் உத்ராடம் 2-ம் பாதத்திலும் உள்ளன. எனவே 19.03.2020 அதிகாலை சூர்யோதயத்துக்கு முந்தி நாம் வானத்தைப் பார்த்தால், அடிவானத்தில் செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரகங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தோன்ற வேண்டும். இந்த மூன்று கிரகங்களுக்கும் கொஞ்சம் கீழே சந்திரன் தெரிய வேண்டும்.
திருக்கணிதப்படி 19.03.2020 அன்று காலை 5.15 மணிக்குச் செவ்வாய் தனுசில் 28-வது பாகையிலும், குரு 29 பாகையிலும் இருப்பதால் ஒன்றுக்கொன்று மிக அருகில் தென்படும். சனியும், சந்திரனும் மகரத்தில் 6 பாகையில் இருப்பதால் அவை இரண்டும் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருக்கும்.
சந்திரன் மகரத்திலும் , சனி தனுசிலும் இருப்பதாகச் சொல்லும் வாக்கியப் பஞ்சாங்கப்படி சனி, சந்திரன் சேர்க்கை இவ்வாறு இருக்கக் கூடாதே!
காட்சியைப் பாருங்கள்.
கணக்கைச் சரி செய்யுங்கள்.
கணக்கைச் சரி செய்யுங்கள்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.