இரண்டு மூன்று நாட்களாகத் தொலைக்காட்சிகளிலும், இணையதளப் பத்திரிக்கைகளிலும் பேசப்படுவதும், எழுதப்படுவதுமாக இருப்பது குருப்பெயர்ச்சியே! அவரவர் இஷ்டத்துக்கு ஒவ்வொரு ராசிக்கும் மதிப்பெண்கள் வழங்குவதில் சோதிடர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. ரிசப, மகர, விருச்சிக ராசிக்காரர்களுக்கு 85, 90, 95 என்று தாராளமாக மதிப்பெண்கள் வழங்கி அவர்களை ரொம்பவும் குஷிப்படுத்தியிருக்கிறார்கள் சோதிடர்கள். ஒரு பத்திரிக்கை வழங்கியிருக்கும் ராசி பலன்களில் பன்னிரண்டு ராசிப் பெண்களும் புத்தாடை, ஆபரணங்கள் வாங்குவார்கள் என்றும், பிறந்த வீட்டுச் சீதனமாகப் பொருட்கள் வரும் என்றும் எழுதி அவர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளார்கள். சோதிடம் பற்றி எதுவுமறியாத பாமரர்களைச் சோதிடம் பற்றித் தெரியாத பத்திரிக்கைகளும் ஏமாற்றுகின்றன.
12 இராசிகளையும், 27 நட்சத்திரப் பெயர்களையும் மட்டுமே தெரிந்த சோதிடர்கள் இப்பலன்கள் எல்லாமும் தசாபுத்திகளைப் பொறுத்து மாறுபடும் என்றும், இவை பொதுப்பலன்களே என்றும் சொல்லிச் சில பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கொள்கின்றார்கள். யார் இவர்களைப் பொதுப்பலன்கள் கேட்டார்கள்? லக்னத்தையும் தசா புத்திகளையும் தெரியாத பாமர ஜனங்களுக்கு வெறும் ராசியை வைத்துப் பலன் சொல்ல இவர்களுக்குத் தகுதி இருக்குமானால் நமக்கும் ராசியை மட்டும் வைத்துப் பலன் சொல்லும் உரிமை இருக்கின்றது. நாமும் நம் பங்குக்கு ராசி பலன்கள் சொல்லுவோம். ஒரே வித்தியாசம் என்னவென்றால் நாம் ஆதாரபூர்வமாகப் பலன் சொல்லுவோம்.
ஒரு சம்பவம் நடக்கும்பொழுது குரு ராசிக்கு இத்தனையாவது இடத்தில்தான் இருக்க வேண்டுமென்ற சட்டம் எதுவும் இல்லை. உதாரணமாகத் தந்தையாரின் மரணத்தை எடுத்துக் கொண்டால் ஒன்பதுக்கு எட்டாமிடமான நான்கில் குரு இருந்தால் மரணம் என்று சொல்லலாம். அல்லது குரு சுபர் என்பதால் நான்கில் இருந்தால் நோய்கள் நீங்கிச் சுகம் பெறுவார் என்றும் சொல்லலாம். சோதிடர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு கிரகமும் இரண்டு வேலைகளையும் செய்யும் என்பதே நமது முடிவு. இப்போது இதை நன்கு விளக்குவதற்குக் கீழ்க்கண்ட கட்டம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மேலேயுள்ள கட்டத்தில் 6 தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தத் தேதிகள் அன்றைய ராசியைக் குறிக்கின்றன. அதாவது 01.10.1931ல் ரிசப ராசி. 21.04.1933ல் மீன ராசி. இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆறு தேதிகளும் ஆறு சகோதர, சகோதரிகளின் பிறந்த தேதிகள். அந்தத் தேதியில் அவர்கள் அந்த ராசியில் பிறந்துள்ளார்கள். 1986 ஏப்ரலில் வியாழன் கும்பராசியில் இருந்தது. அதுவும் கட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பேரின் தந்தையார் 1986 ஏப்ரலில் காலமானார். எனவே 01.10.1931ல் பிறந்தவருக்குப் பத்தில் குருவும், 14.03.1948ல் பிறந்தவருக்குப் பதினொன்றில் குருவும், 21.04.1933ல் பிறந்தவருக்குக் குரு பன்னிரண்டிலும், 08.09.1946ல் பிறந்தவருக்குக் குரு இரண்டிலும், 02.01.1935ல் பிறந்தவருக்குக் குரு நான்கிலும், 14.10.1936ல் பிறந்தவருக்குக் குரு ஆறிலும் இருக்கின்றது. அனைவரும் தந்தையை இழந்திருக்கின்றார்கள். 2, 4, 6, 10, 11, 12 என்று பல்வேறு இடங்களில் இருந்த போதும் குரு தந்தையின் மரணத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. எனவே எந்த இடத்தில் இருந்தாலும் என்ன பலன்கள் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இந்த உதாரணம் தரப்படுகின்றது.
அடுத்துச் சந்திரனுக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் குரு வரும் போது மிகுந்த சுப பலன்களையே செய்யும் என்ற பொய்யான நம்பிக்கையைச் சோதிடர்கள் மீண்டும் மீண்டும் அழுத்தமாகவும், ஆழமாகவும் பாமர ஜனங்களின் மனத்தில் விதைப்பது எவ்வளவு தவறு என்பதைக் காட்டுவோம்.

நல்ல உடல் நலத்துடன் இருந்த இவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுக் காலமானார். குரு ஜன்ம ராசிக்கு இரண்டில்.

1985 ஏப்ரலில் இவர் திடீரென நோய்வாய்ப்பட்டு காலமானார். குரு ஜன்ம ராசியான தனுசுக்கு இரண்டாமிடத்தில்.

பெருந்தலைவர் காமராஜர் 15.07.1903ல் கும்பராசியில் பிறந்தார். 02.10.1975ல் அவர் திடீரெனக் காலமான போது குரு அவரது ஜன்ம ராசிக்கு இரண்டில் இருந்தது.

மீனராசியில் பிறந்த இவர் 11.04.1988ல் குரு ஜன்ம ராசிக்கு இரண்டில் இருந்த போது ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுப் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.
எனவே இரண்டில் குரு என்பது நல்ல பலன்களை மட்டுமே கொண்டு வரும் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம். அடுத்த கட்டுரையில் 5, 7, 9, 11 ஆகிய இடங்களும் தீய பலன்களைக் கொண்டு வரும் என்பதை ஆதாரங்களுடன் விளக்கப் போகும் நாம், குருப் பெயர்ச்சி பற்றிய நமது கருத்தையும் எழுதுவோம்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.