வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு 14.04.2017 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி 9 நிமிடத்தில் பிறக்கின்றது. அப்போதைய கிரக நிலைகள் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன. 

sample horoscope

sample horosope

பாவஸ்புடங்கள் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன. 

   இராசி  பாகை  கலை
 லக்னம்   9  21  34
 2ம் பாவம்  10  26  33
 3ம் பாவம்  0  00  27
 4ம் பாவம்  1  00  15
 5ம் பாவம்  1  26  48
 6ம் பாவம்  2  22  48
 

மேற்கண்ட பாவங்களுடன் 180  பாகை சேர்த்தால் முறையே 7, 8, 9, 10, 11, 12ம் பாவங்கள் கிடைக்கும்.

பொதுவாக வருஷப்ரவேச ஜாதகத்தை வைத்துத் தேசத்துக்கே பலன் சொல்லும் வழக்கம் உள்ளது. சென்னையில் உதயமாகும் லக்னஸ்புட, பாவஸ்புடங்களை வைத்துத் தமிழக அரசுக்கும், புதுதில்லியில் உதயமாகும் லக்னஸ்புட, பாவஸ்புடங்களை வைத்து மத்திய அரசுக்கும் பலன் சொல்லலாம். பத்தாம் பாவத்தால் அரசையும், 4ம் பாவத்தால் மக்களவை, சட்டமன்றம் ஆகியவற்றையும், 2ம் பாவத்தால் நிதி நிலைமையையும், 5ம் பாவத்தால் கல்வியையும், 9ம் பாவத்தால் சட்டம் இயற்றுதல், நீதிமன்றங்கள் இவைகளையும் குறித்துப் பலன் சொல்வது வழக்கமாக உள்ளது.

நாம் விரிவாக இதுபற்றி எழுதப் போவதில்லை. ஆனால் புதன், குரு, சுக்கிரன், சனி என்ற நான்கு கிரகங்களும் வருஷத்தின் ஆரம்பத்தில் வக்ரமாக இருப்பது நல்ல அம்சமாக இல்லை. மகர லக்னம் உதயமாகின்றது. லக்னாதிபதி சனி வக்ரமாக இருப்பதோடு, சனியின் ராசிநாதன் குருவும், சனியின் அம்சநாதன் சுக்கிரனும் வக்ரமாக இருப்பதால் அரசு இயந்திரம் மெதுவாகவே செயல்படும். 

வருஷ ஆரம்பத்தில் உள்ள கிரகநிலைகள் உலகுக்கே பொதுவானவை. அப்படியிருக்கத் தனி மனிதனின் வாழ்க்கையில் நடைபெறப் போகும் சம்பவங்களை எப்படிக் கணிப்பது? தனிமனிதனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்ப்பது போல் இந்தப் பொதுவான ஜாதகத்தைப் பார்க்க முடியாது. ஆனாலும் இந்த ஆண்டு சிலருக்கு மட்டும் சிறப்பான ஆண்டாக அமையும், சிலருக்குக் கஷ்டமான ஆண்டாக அமையும் என்ற குறிப்புக்களை மட்டும் கொடுக்க இயலும். அந்த வகையில் நமக்குக் கிடைத்த அனுபவங்களை நாம் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்.

மகர லக்னத்தில் 21 பாகை 34 கலை உதயமாகின்றது. தற்போது திருமண வயதை எட்டியிருக்கும் ஒருவர், அவர் பிறக்கும் போது இதே மகர லக்னத்தில் 21 பாகையில் பிறந்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். ஏழுக்குடைய சந்திரன் பத்தாம் பாவத்துக்கு மிகச் சமீபத்தில் இருப்பதால் இந்த ஆண்டு அவருக்குத் திருமணம் நடக்கும் என்று கூறலாம். தற்போது மத்திய வயதை எட்டியிருக்கும் ஒருவர், அவர் பிறக்கும் போது கடக லக்னத்தில் 21 பாகையில் பிறந்திருந்தார் என்று வைத்துக்கொண்டால், ஏழுக்குடைய சனி 5ம் பாவத்துக்கு வெகு சமீபத்தில் இருந்து, செவ்வாயின் எட்டாம் பார்வையைப் பெற்று வக்ரமாக இருப்பதால் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்று கூறலாம். இப்படியே இந்தப் பாவஸ்புடங்களுக்கு வெகு சமீபத்தில் தங்களது ஜாதகத்தில் 12 பாவங்களும் அமையப் பெற்றவர்கள் தங்களது ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். இந்தக் குறிப்பிட்ட பாகைகளை விட்டு விலகித் தங்களது ஜாதகங்களில் 12 பாவங்களும் அமையப் பெற்றவர்களுக்கு, இந்த ஆண்டு, முக்கியமான சம்பவங்கள் ஏதும் நடக்காமல் வெறுமையாகக் கழியும் ஆண்டாகும். 

கிரகங்கள், பாவங்கள் இவற்றுக்கிடையே உள்ள சம்பந்தம், பார்வை இவைகளைக் கணக்கிட்டு, சில நட்சத்திர பாதங்களை முக்கியமான இடங்கள் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கின்றோம்.

 
 பரணி  1ம் பாதம்
 கார்த்திகை  1ம் பாதம்
 புனர்பூசம்  3ம் பாதம்
 பூரம்  2ம் பாதம்
 அஸ்தம்  1ம் பாதம்
 சித்திரை  2, 3 ம் பாதங்கள்
 ஸ்வாதி  3ம் பாதம்
 விசாகம்  4ம் பாதம் 
 உத்திராடம்  3ம் பாதம்
 அவிட்டம்  3, 4ம் பாதங்கள்
 உத்திரட்டாதி  2ம் பாதம்
 

ஆகிய பாதங்களில் ஜன்மலக்னமோ, சூரியனோ, ஜன்மலக்னாதிபதியோ, அல்லது சனியோ இருக்கப் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக அமையும். நன்றாகக் கவனிக்கவும், மேற்கண்ட நட்சத்திர பாதங்களில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்களுக்கு இந்தப் பலன்களை நாம் சொல்லவில்லை. மேற்கண்ட நட்சத்திர பாதங்களில் யாருடைய ஜன்மலக்னம், சூரியன், சனி, ஜன்மலக்னாதிபதி ஆகியோர் இருக்கின்றார்களோ அவர்களைத்தான் நாம் குறிக்கின்றோம். இந்த நான்கில் ஒன்றோ இரண்டோ அல்லது அனைத்துமோ மேற்கண்ட நட்சத்திர பாதங்களில் இருக்கப் பிறந்தவர்கள் நிச்சயம் முக்கியமான சம்பவங்களைச் சந்திப்பார்கள். 

இந்தப் பலன்கள் சென்னையிலும் அதன் பக்கத்தேயுள்ள ஊர்களிலும் பிறந்தவர்களுக்கு மட்டுமே. மிக விலகி இருக்கும் ஊர்களிலுள்ளவர்களுக்கு லக்ன பாவஸ்புடங்கள் மாறுவதால் இந்த நட்சத்திரப் பாதங்களும் மாறக்கூடும். பொதுவாக மேலே குறித்த நட்சத்திரப் பாதங்களுக்கு முன்னே அல்லது பின்னேயுள்ள பாதங்களில் பிறந்தவர்களும் இந்தப் பலன்களை எதிர்கொள்ளலாம்.

சில பொதுவான பலன்கள்:

Y.R.L.V.S.H என்ற ஆங்கில எழுத்துக்களில் பெயர் ஆரம்பிக்கின்றவர்களுக்கு இது நல்ல ஆண்டாக அமையும். (ஆனால் தங்களது ஜாதகத்தில் 6, 8, 12 என்ற இடங்களில் சந்திரன் அமையப் பெற்றவர்களுக்கும், மீனம், ரிசபம், விருச்சிகம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் மேற்கண்ட எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தாலும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்காது) இது எண் கணித முறைப்படி அல்ல. வராகமிகிரரின் சம்ஹிதையிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டது. 

பரணி, பூரம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த இசைக்கலைஞர்கள், மூல நட்சத்திரத்தில் பிறந்த மருத்துவர்கள், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த கண் மருத்துவர்கள், சதய நட்சத்திரத்தில் பிறந்த (கடலில் கிடைக்கும் பொருட்களை விற்கும் வியாபாரிகள்); ஆகியோர் பிரச்னைகளைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. 

 

அடுத்த கட்டுரையில் சில தேதிகள் கொடுக்கப்பட உள்ளன. அந்த நாட்களில் சில முக்கியமான சம்பவங்கள் நடக்கலாம். அவை தேசத்துக்கே பொதுவானவை. முக்கியமான சம்பவங்கள் என்று நாம் குறிப்பிடுவது அந்த நாட்களில் ஊடகங்களில் திரும்பத் திரும்ப ஒரே செய்தியே இடம் பெறும் என்பதைத்தான். அரசியல், கலை, விளையாட்டு, விபத்து என்று எதையும் இந்த நாட்கள் குறிக்கலாம்.

 

This Week’s Quote:

Life is neither good or evil, but only a place for good and evil.

Marcus Aurelius.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.