சுக்கிரன்  அஸ்தமனமாக இருக்கும்போது திருமணம் செய்யலாமா,கூடாதா என்பது பற்றி என்னுடைய கருத்து என்ன என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.இதே கேள்வியை ஜாதகம் பார்க்கப் போயிருக்கும்போது இவர் சோதிடரைக்கேட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான்.பஞ்சாங்கத்தில் சுக்கிராஸ்தமனம் மட்டுமல்ல,மற்றகிரகங்களின் அஸ்தமனமும்குறிக்கப்பட்டிருக்கும்.ஆனாலும் சுக்கிராஸ்தமனத்துக்குமட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது?நாம்நம்முடைய கருத்தைஇங்குப் பதிவு செய்வோம்.

ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் சிசு ஒன்று உருவாகி, வளர்ந்து வெளிவரப்பத்து மாதங்களாகின்றன.இந்தப்பத்து மாதங்களில், முதல்மாதத்துக்குச் சுக்கிரனும், இரண்டாவது மாதத்துக்குச் செவ்வாயும்,மூன்றாவதுமாதத்துக்குக்குருவும், நான்காவதுமற்றும்பத்தாவதுமாதங்களுக்குச் சூரியனும்,ஐந்தாவதுமற்றும்ஒன்பதாவதுமாதங்களுக்குச்சந்திரனும்,ஆறாவதுமாதத்துக்குச்சனியும் ஏழாவதுமாதத்துக்குப்புதனும் எட்டாவது மாதத்துக்குக்கரு உருவான ஆதானலக்னத்துக்குஅதிபதியானகிரகமும்பொறுப்பானவர்களாக ஆகின்றார்கள். எனவே திருமணம் சுக்கிராஸ்தமன காலத்தில் செய்தால் பெண் உடனேகருவுறும் பட்சத்தில் முதல் மாதத்துக்கு அதிபதியானசுக்கிரன்பலவீனம் அடைந்திருப்பதால், முதல் மாதத்திலேயே கருவுக்குச் சேதம் வரலாம்.சந்திரன் அஸ்தமனமானநாளில் கடகலக்னம் நிஷேகலக்னமாக வந்து பெண்கருவுற்றால் ஐந்து அல்லதுஒன்பதாவதுமாதத்தில் கருவுக்குக் கெடுதல் ஏற்படலாம்.எந்தெந்த கிரகங்கள் வலிமை குன்றியுள்ளனவோ அந்த கிரகங்களுக்குச் சொல்லப்பட்ட மாதத்தில் கருவுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்.

எனவே சுக்கிரன் அஸ்தமனமாக இருக்கும் காலத்தில் விவாஹம் செய்யக்கூடாது என்று சோதிடர்கள் கூறுவதற்குக் காரணம் உள்ளது.அதற்காக மற்ற கிரகங்கள் பலவீனமாக இருக்கும்போது விவாஹத்துக்குத்தடை இல்லை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டாம்.விவாஹலக்னம் நிஷேகலக்னம் இவற்றுக்கு அதிபதியான கிரகம் பலத்து வக்ரகதி இல்லாமல் இருந்தால்போதும்; திருமணம் செய்யலாம்.பலவீனமான கிரகங்கள் சம்பந்தப்பட்ட முகூர்த்தங்களைத் தவிர்த்தல் நல்லது.

 

This Week’s Quote:

Technological progress has merely provided us with more efficient means for going backwards.

-  Aldous Huxley

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.