தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளுள் ஒன்று பெருங்குளம். மிக அழகான இச்சிற்றூரில் இசை மேதைகளும், சோதிட நிபுணர்களும், எழுத்தாளர்களும் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். கூட்டுறவுத் துறையிலும் மிகமுன்னோடியான சங்கங்கள் சிறப்பாகச் செயல்பட்டதும் இந்த ஊரில்தான். ஜாதகப்ரகாசிகை என்ற நூலை 1915ல் எழுதி வெளியிட்ட திரு.ஏ.ஸ்ரீனிவாச அய்யங்கார் என்பவரும், ஜோதிர் வித்யா மர்மப் பிரகாசினி என்ற நூலை 1922ல் எழுதி வெளியிட்ட திரு.பி.எல்.சுந்தர சாஸ்திரிகள் என்பவரும் வாழ்ந்து மறைந்ததும் இந்த ஊரில்தான். என்னுடைய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவ்வூரைச் சேர்ந்தவரே. சோதிடக் கோட்டைக்குள் நுழைய நிறைய இரகசியக் கதவுகளை திறக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவது போல் அமைந்துள்ளது ஜோதிர் வித்யா மர்மப் பிரகாசினி என்ற நூலின் பெயர். நிஜமாகவே நிறைய மர்மங்கள் புதைந்து கிடப்பது இந்தச் சோதிட சாத்திரத்தில்தான். இன்று புரியாத புதிராக விளங்கும் இரண்டு ஜாதகங்களைப் பார்ப்போம்.




இந்த இரண்டு ஜாதகங்களையும் நன்கு கவனித்தால் சில ஒற்றுமைகள் தெரிகின்றன. இருவர் ஜாதகத்திலும் ராசிச்சக்கரத்தில்,
- ஜன்ம நட்சத்திரம் திருவாதிரை
- லக்னத்துக்கு ஏழில் சனி
- சந்திரனுக்கு வியாழ பார்வை
- சூரியனுக்கு ஏழாம் பாவாதிபதி சூரியனுக்கு நான்கில்
- சூரியனுக்கு ஏழாம் பாவாதிபதிக்குச் செவ்வாயின் பார்வை
அம்சச் சக்கரத்தில்
- சூரியன் சுக்கிரனின் வீட்டில்
- சந்திரன் வியாழனின் வீட்டில்
- சூர்யனுக்கு ஐந்தில் சனி
- சூர்யனுக்கு ஏழுக்குடையவன் சனியின் வீட்டில்
முதல் ஜாதகரின் தாயார் ஜாதகர் பிறந்த 60வது நாளிலும், இரண்டாவது ஜாதகரின் தாயார் ஜாதகர் பிறந்த 88வது நாளிலும் மரணமடைந்தனர். முதல் ஜாதகத்தில் நான்காமிடத்ததிபதி சூரியன் சொந்த வீட்டில். இரண்டாவது ஜாதகத்தில் நான்காமிடத்ததிபதி சனி ஏழில் மித்ரு வீட்டில் இருந்து, பத்தாம் பார்வையாக நான்காமிடத்தைப் பார்க்கின்றது. மாதுர்காரகன் சந்திரனுக்கு வியாழப்பார்வை. இவ்வளவு விரைவில் அன்னையர் காலமாவதற்குரிய காரணங்கள் ஜாதகத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். (இருந்தால் அது நமக்குத் தெரியவில்லை என்றும் சொல்லலாம்) நான்காமிடத்தை மறந்துவிட்டுச் சூரியனுக்கு ஏழாமிடம் தாயாரைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், அதற்குச் சில பாதிப்புக்கள் இருப்பது ராசி நவாம்சம் இரண்டிலும் தெரிகின்றது. ஆனால் சூரியனுக்கு ஏழாம் வீடு என்பதை எடுத்துக் கொண்டால் அன்று பிறந்தவர்கள் எல்லோருக்குமே இந்தப் பாதிப்புக்கள் உண்டு.
எனவே சூரியனுக்கு ஏழாமிடப் பாதிப்புக்கள் லக்னத்துக்கு நான்காமிடத்தோடு சம்பந்தப்பட்டால் மட்டுமே நாம் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சோதிடத்தில் ஆர்வமுள்ள ஜாதக ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு ஜாதகங்களிலும் நான்காமிடமும், சூரியனுக்கு ஏழாமிடமும் எவ்வாறு சம்பந்தப்படுகின்றன, அந்தச் சம்பந்தங்கள் தாயாருக்கு உடனே மரணத்தைக் கொண்டு வருமளவுக்கு எப்படி வலுவாக உள்ளன என்பதைக் கவனித்து நமக்கு எழுதலாம்.
நம்முடைய கருத்து என்னவெனில் தாயாரின் ஜாதகத்தையும் சேர்த்து ஆய்வு செய்தாலன்றி, இந்த ஜாதகங்கள் நமக்குப் போதுமான விவரங்களைத் தராது என்பதுதான்.
This Week’s Quote:
Philosophy will clip an angel’s wings.
- John Keats
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.