சென்ற வாரம் நாம் எழுதிய இரகசியக் கதவுகள் என்ற கட்டுரையில் நாம் இரண்டு ஜாதகங்களைக் கொடுத்திருந்தோம். இரண்டு ஜாதகத்திலும் சந்திரனுக்கு குரு பார்வை இருந்தும், ஜாதகர்களின் அன்னையர் மூன்று மாதங்களுக்குள் மரணம் அடைந்ததைக் குறிப்பிட்டிருந்தோம். இன்று இன்னுமொரு ஜாதகத்தைத் தருகின்றோம்.




இந்த ஜாதகத்தில் வியாழனின் பார்வையைக் கணக்கிட்டால் லக்னத்துக்கு 83.87 சதவீதம் பார்வையும்,, சந்திரனுக்கு 87.86 சதவீதம் பார்வையும் சனிக்கு 94.34 சதவீதம் பார்வையும் விழுகின்றன. சந்திரனுக்கும், சந்திரனின் ராசி நாதனாகிய சனிக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக மீன லக்னத்துக்கு லக்னாதிபதி குருவின் பார்வையும் பரிபூரணமாகக் கிடைத்துள்ளன. இந்தக் குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது இக்குழந்தையின் தாயார் தானும் விஷம் குடித்து இக்குழந்தைக்கும் கொடுத்துத் தற்கொலை செய்து கொண்டார். இக்குழந்தையின் மரணத்தைத் தற்கொலை எனச் சொல்ல முடியாது. கொலை என்றுதான் சொல்ல வேண்டும்.
சென்ற வாரம் நாம் கொடுத்த ஒரு ஜாதகத்திலும் நான்காமிடத்ததிபதி நான்கில் இருந்தது. இந்த ஜாதகத்திலும் நான்காமிடத்ததிபதி நான்கில் இருக்கிறது. இருந்தும் தாயின் மரணம் மூன்று வருடங்களுக்குள் நிகழ்ந்திருக்கின்றது. இந்த மூன்று ஜாதகங்களையும் நன்கு பரிசீலனை செய்து முதல் இரண்டில் தாயின் மரணத்துக்கும், மூன்றாவது ஜாதகத்தில் தாயோடு சேர்ந்து ஜாதகியும் இறந்த போனதற்கும் காரணம் கண்டுபிடிப்பவர்கள் தாங்கள்தான் உண்மையான சோதிடர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் சோதிடச் சக்ரவர்த்திகளும் இதைப் போன்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொள்பவர்களும் போலிகள் என்று தான் அர்த்தம்
This Week’s Quote:
Perfect numbers like perfect men are very rare.
- Rene Descartes
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.