நோயுற்றவர்களை அச்சுறுத்திப் பணம் வாங்குகின்ற மருத்துவர்களைப் போலவே, ஜாதகம் பார்க்க வருகின்றவர்களை அச்சுறுத்திப் பொருள் சேர்க்கும் சோதிடர்கள் இங்கு இருக்கின்றார்கள். இதற்கென்றே பல வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். குரு இருந்த வீட்டைக் கெடுக்கும், குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும் என்றெல்லாம் ஏதேதோ கூறி பரிகாரங்களும் பலவும் சொல்லிப் பணம் பிடுங்குகின்றார்கள். நம் மக்களுக்கு கேள்வி கேட்கத் தெரியாது. மூத்தோர் சொல் அமிர்தம் என்ற பழமொழியைக் கடைப்பிடிப்பவர்கள் அல்லவா நம் மக்கள்? எனவே சோதிடர் வாக்கு தேவவாக்கு என்றெண்ணிக் கைகட்டி, வாய்பொத்தி அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்கள்.

வெளிப்பார்வைக்கு மோசமாகத் தெரியும் ஜாதகம் அப்படியே பலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதை நாம் பலமுறை வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றோம். என்றாலும் இந்தப் பயம் மக்களை இன்னும் விடவில்லை. எனவே இன்று ஒரு ஜாதகத்தைத் தருகின்றோம்.

sample horoscope

sample horosope

மிருகசீரிட  நட்சத்திரத்தில் ஜனனம். செவ்வாய் தசையில் இருப்பு வருடம் 2 மாதம் 5 நாள் 20. 17.05.1953 முடிய செவ்வாய் தசை. 17.05.1953 முதல் 17.05.1971 முடிய ராகு தசை. 17.05.1971 முதல் 17.05.1987 முடிய வியாழ தசை. 17.05.1987 முதல் 17.05.2006 முடிய சனி தசை. 17.05.2006க்கு மேல் புத தசை நடப்பு.

இவருக்கு லக்னத்துக்கு இரண்டில் சனி, கேது. எட்டில் ராகு. வியாழன் ஏழில். செவ்வாய் ஐந்தாமிடத்தில். சுபர் பார்வையில்லை. சந்திர லக்னத்துக்கு நான்கில் சனியும், கேதுவும். சந்திர லக்னத்துக்கு ஏழில், சந்திர லக்னத்துக்கு ஆறு பதினொன்றுக்குடைய செவ்வாய். சந்திரலக்னத்துக்கு ஒன்பதில் பாதகாதிபதி குரு. லக்னத்துக்கு நான்காமிடத்துக்குச் சனியின் பார்வை. சனி லக்னத்துக்கு ஆறுக்கும் ஏழுக்குடையவன். எனவே இரண்டு, ஏழு, ஐந்து, நான்கு ஆகிய பாவங்கள் கெட்டுப் போக வாய்ப்பு அதிகம்.

ராகு குருவின் நட்சத்திரத்தில். எனவே ராகு தசை மோசமான தசைதான். குரு பஞ்சம, அட்டமாதிபதியாகி ஏழில் இருப்பதால் தாரதோஷம் வரும்.  செவ்வாய் வேறு ஐந்தில். எனவே புத்திர தோச ம்உண்டு. முப்பத்தாறு வயதுக்குமேல் வரும் சனி தசையும் சிறப்பாக இருக்காது. சனி சந்திரலக்னத்துக்கு அட்டமாதிபதி. சந்திர லக்னத்துக்கு மூன்றுக்குடைய சூரியனின் நட்சத்திரத்தில்.

இப்படித்தான் சோதிடர்கள் பார்க்கின்றார்கள். ஏழில் குரு இருந்தாலே தாரதோசம் நிச்சயம் என்று அடித்துச் சொல்பவர்களும் உண்டு. ஆனால் இந்த ஜாதகர் அனைத்தையும் பொய்யாக்கி இருக்கின்றார். இவர் பிறப்பாலேயே செல்வந்தர். தந்தையார் நல்ல அரசுப் பணியில் இருந்தவர். இவரும் பட்டம் பெற்று அரசுப் பணியில் அமர்ந்தார். நிறைய சீதனத்தோடு திருமணம் செய்தார். இரண்டு பெண் குழந்தைகள். இரண்டும் பட்டப்படிப்பு பயின்று திருமணம் முடிந்து வாரிசுகளும் வந்தாயிற்று. வியாழன், சனி ஆகிய கிரகங்களின் தசையெல்லாம் முடிந்து புதன் தசை நடக்கும் தற்சமயம் இவருக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. வளமான வாழ்க்கை இனிய குடும்ப வாழ்க்கை செல்வச் செழிப்பில் மக்கள். ஏனென்று  நாமே காரணம் கூறி விளக்க விரும்பவில்லை.சோதிடத்தில் ஆர்வமுள்ள வாசகர்கள் அவர்களே கண்டு கொள்வார்கள். ஸ்புடங்கள் கணிக்க வேண்டுமென்று விரும்புபவர்களுக்காக கீழ்க்கண்ட தகவல். பிறந்த நேரம் அதிகாலை 1.00 மணி 27.11.1950. பிறந்த  இடம் திருநெல்வேலி

 

This Week’s Quote:

I can calculate the motion of heavenly bodies, but not the madness of people.

-  Issac Newton

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.