நாம் 17.07.2016ல் நடிகர்கள், இயக்குனர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். எந்த மாதிரியான அமைப்புக்கள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால், அவர் நடிகராக வருவார் என்பதற்கான சில குறிப்புக்களைக் கொடுத்திருந்தோம். சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் ஒரு நடிகரின் ஜாதகம் கிடைத்தது. ‘திரையுலக மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் அன்பரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகம் இது’ என்ற அறிமுகத்துடன் பிறந்த தேதி, நேரம், ஊர் இல்லாமல் ஒரு ஜாதகம் பிரசுரமாகியிருந்தது. அந்த ஜாதகக்  கட்டத்தை அப்படியே தருகிறோம். 

 

sample horoscope

 

 

sample horoscope

sample horosope

 

நடிகர்கள், இயக்குனர்கள் என்ற கட்டுரையில் நாம் ஒன்பது குறிப்புக்கள் கொடுத்திருந்தோம்.

  1. சுக்கிரன், சந்திரன் என்ற இரண்டு கிரகங்களுமோ அல்லது இவற்றில் ஒன்றோ மேஷம், ரிசபம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், மீனம் என்ற இந்த ஆறு இராசிகளில் ஒன்றில் இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் சந்திரன் மகர ராசியில் இருக்கின்றது.
  2. சுக்கிரன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் தமது சொந்த நவாம்ச ராசியான ரிஷபம், துலாம் அல்லது கடகத்தில் இருக்க வேண்டும். இங்கே சந்திரனோ, சுக்கிரனோ சொந்த நவாம்சத்தில் இல்லை.
  3. சுக்கிரனின் நவாம்சபதி மேஷம், கடகம், துலாம், மகரம், சிம்மம், தனுசு ஆகிய இராசிகளில் ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும். இங்கே சுக்கிரனின் நவாம்சபதி சூரியன் ராசியில் கடகத்திலும், நவாம்சத்தில் சிம்மத்திலும் இருக்கின்றது.
  4. சுக்கிரன் லக்னத்துக்கு 2, 5, 8, 11 ஆகிய பாவங்களில் ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும். இங்கே அப்படி இல்லை.
  5. சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ ஆறு அல்லது ஒன்பதாமிடத்துச் சம்பந்தம் இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் சந்திரன் ஒன்பதாமிடத்தில் இருக்கின்றது. சுக்கிரன் ஆறுக்குடையவனாக இருக்கின்றது.
  6. சனியின் நவாம்சபதி லக்கினத்துக்குக் கேந்திரங்களான 1, 4, 7, 10 ல் இருக்க வேண்டும். அல்லது சனி 1, 4, 7, 10 ல் இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் இந்த யோகம் இல்லை. ஆனால் சனியின் நவாம்சபதி புதன் நவாம்சத்தில் லக்னத்துக்கும், சுக்கிரனுக்கும் கேந்திரத்தில் இருக்கின்றது.
  7. ஏழாமிடத்து அதிபதியோ அந்தக் கிரகத்தின் நவாம்சபதியோ சுக்கிரனுக்குக் கேந்திரங்களான 1, 4, 7, 10 ல் இருந்தாலோ அல்லது சுக்கிரனாகவே இருந்தாலோ புகழ் பெற்ற நடிகராகும் வாய்ப்பு உண்டு. இந்த ஜாதகத்தில் ஏழாமிடத்து அதிபதி செவ்வாய் நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் இருக்கின்றது.
  8. பொதுவாக உத்தராயணத்தில் மிகச்சிறந்த நடிகைகளும், தட்சிணாயனத்தில் மிகச் சிறந்த நடிகர்களும் பிறக்கின்றார்கள். இந்த நடிகர் தட்சிணாயனத்தில் பிறந்துள்ளார்.
  9. 9. 3, 6, 9, 12-க்குடைய கிரகங்கள் சுக்கிரனுக்கோ, லக்னத்துக்கோ கேந்திரங்களில் நின்றால் புகழ் எளிதில் கிடைத்து விடுகிறது. இந்த ஜாதகத்தில் இந்த அமைப்பு இல்லை.

இந்த ஜாதகத்தில் மிகச் சிறப்பான அம்சமாக எனக்குப்படுவது சந்திரன், சுக்கிரன், வியாழன், சனி ஆகிய நான்கு கிரகங்களும் வர்க்கோத்தம அம்சத்தில் இருப்பதுதான். சந்திரன் 3-க்கும், சுக்கிரன் 6-க்கும், சனி 9-க்கும் உடைய கிரகங்கள். எனவே நமது ஒன்பதாவது குறிப்பு இங்கே பலமாகக் காணப்படுகின்றது என்பதே நமது கருத்து.

துவாதசாம்சச் சக்கரத்தில் சனி லக்னத்துக்குக் கேந்திரஸ்தானத்திலும் ஆறுக்கும், ஒன்பதுக்கும் உடைய சந்திரனும், சுக்கிரனும் பன்னிரண்டாமிடத்திலும் இருப்பதும் நடிகராகும் வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன. 

பூரண சந்திரன் மகரத்தில் வர்க்கோத்தமமாக இருந்து ராசிநாதன் சனியின் முழுமையான பார்வையைப் பெறுவது ஒருவகை ராஜயோகம் என்றே சொல்ல வேண்டும்.

  

This Week’s Quote:

In questions of science , the authority of a thousand is not worth the humble reasoning of a single individual.

Galileo.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.