பரிவர்த்தனை யோகம் என்பது சோதிடர்களுக்கிடையே பிரசித்தமான ஒன்று. சில வாசகர்கள் பரிவர்த்தனை யோகம் பற்றி அடிக்கடி கேட்பதால் இந்த வாரம் இந்த ஜாதகம் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.


கிரகஸ்புடங்களை விடப் பாதசாரங்களைக் கொடுத்தால் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக அவை கீழே தரப்படுகின்றன.
| பரணி | 3ல் | லக்னம் |
| பரணி | 3ல் | சூர்யன் |
| உத்ரட்டாதி | 2ல் | சந்திரன் |
| திருவோணம் | 4ல் | செவ்வாய் |
| ரோகிணி | 1ல் | புதன் |
| ஆயில்யம் | 4ல் | வியாழன் |
| மிருகசீரிடம் | 4ல் | சுக்கிரன் |
| அனுஷம் | 2ல் | சனி |
| அனுஷம் | 4ல் | ராகு |
| ரோகிணி | 2ல் | கேது |
சனி தசையிருப்பு 12 வருஷம் 3 மாதம் 2 நாட்கள்.
இந்த ஜாதகர்
a) காவல்துறை உயர்அதிகாரியாகப் பணியாற்றினாரா?
b) கல்வித்துறையில் உயர்அதிகாரியாகப் பணியாற்றினாரா?
c) இசை பயின்று பின் இசை பயிற்றுவித்த இசைக்கலைஞரா?
சரியான பதில் தரும் வாசகருக்குச் சன்மானம் அளிக்கப்படும். ஆனால் ஒரு வாசகர் ‘a’ஐத் தேர்ந்தெடுத்தால், a-ஐத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்களும், b மற்றும் c-ஐ நிராகரிக்கத் தலா ஒரு காரணமும் சொல்ல வேண்டும். ‘b’ ஐத் தேர்ந்தெடுப்பவர், ‘b’ஐத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்களும், a மற்றும் c-ஐ நிராகரிக்கத் தலா ஒரு காரணமும் சொல்ல வேண்டும். இப்படியே ‘c’ஐத் தேர்ந்தெடுப்பவரும் சொல்ல வேண்டும்.
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”
என்ற குறளுக்கு ஏற்ப வலுவான காரணங்களை வைத்துச் சரியான தேர்வைச் செய்யும் வாசகருக்குப் பரிசு உண்டு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியாகச் சொன்னால் முதலில் சொல்பவருக்கே பரிசு.
பிறந்தநாள், இடம் பற்றிய விவரங்கள் தகுந்த காரணங்களுக்காகத் தரப்படவில்லை
This Week’s Quote:
Facts are facts and will not disappear on account of your likes.
- Nehru
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.