பரிவர்த்தனை யோகம் என்பது சோதிடர்களுக்கிடையே பிரசித்தமான ஒன்று. சில வாசகர்கள் பரிவர்த்தனை யோகம் பற்றி அடிக்கடி கேட்பதால் இந்த வாரம் இந்த ஜாதகம் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. 

sample horoscope

sample horosope

கிரகஸ்புடங்களை விடப் பாதசாரங்களைக் கொடுத்தால் வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக அவை கீழே தரப்படுகின்றன. 

 பரணி  3ல்  லக்னம்
 பரணி  3ல்  சூர்யன்
 உத்ரட்டாதி  2ல்  சந்திரன்
 திருவோணம்  4ல்  செவ்வாய்
 ரோகிணி  1ல்  புதன்
 ஆயில்யம்  4ல்  வியாழன்
 மிருகசீரிடம்  4ல்  சுக்கிரன்
 அனுஷம்  2ல்  சனி
 அனுஷம்  4ல்  ராகு
 ரோகிணி  2ல்  கேது

சனி தசையிருப்பு 12 வருஷம் 3 மாதம் 2 நாட்கள்.

இந்த ஜாதகர்

a) காவல்துறை உயர்அதிகாரியாகப் பணியாற்றினாரா?

b) கல்வித்துறையில் உயர்அதிகாரியாகப் பணியாற்றினாரா?

c) இசை பயின்று பின் இசை பயிற்றுவித்த இசைக்கலைஞரா?

சரியான பதில் தரும் வாசகருக்குச் சன்மானம் அளிக்கப்படும். ஆனால் ஒரு வாசகர் ‘a’ஐத் தேர்ந்தெடுத்தால், a-ஐத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்களும், b மற்றும் c-ஐ நிராகரிக்கத் தலா ஒரு காரணமும் சொல்ல வேண்டும். ‘b’ ஐத் தேர்ந்தெடுப்பவர், ‘b’ஐத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்களும், a மற்றும் c-ஐ நிராகரிக்கத் தலா ஒரு காரணமும் சொல்ல வேண்டும். இப்படியே  ‘c’ஐத் தேர்ந்தெடுப்பவரும் சொல்ல வேண்டும்.

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை 
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

என்ற குறளுக்கு ஏற்ப வலுவான காரணங்களை வைத்துச் சரியான தேர்வைச் செய்யும் வாசகருக்குப் பரிசு உண்டு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியாகச் சொன்னால் முதலில் சொல்பவருக்கே பரிசு.

பிறந்தநாள், இடம் பற்றிய விவரங்கள் தகுந்த காரணங்களுக்காகத் தரப்படவில்லை

 

 

This Week’s Quote:

Facts are facts and will not disappear on account of your likes.

-  Nehru

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 64 guests and no members online