எழுத்தாளர், கவிஞர், விமர்சகர், திரு.தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற தனது புத்தகத்தில் இருவரது கவிதைகளையும் ஒப்பிட்டு அரிய விஷயங்களைத் தந்துள்ளார். அவரது தலைப்பை நமது சோதிட ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதற்காக நாம் அவருக்கு நன்றி கூறிக் கொள்கின்றோம். 

பாரதிக்கும், ஷெல்லிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. பாரதி முப்பத்தொன்பது வயது முடிவதற்குள்ளும், ஷெல்லி முப்பது முடிவதற்குள்ளும் இயற்கை எய்தினர். இருவருமே புரட்சிக் கருத்துக்களைச் சுமந்தவர்கள். சமூக நீதிக்காகப் போராடியவர்கள். ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்ட பாரதி, ஆரம்ப காலத்தில் தன்னை ஷெல்லிதாசன் என்றே அழைத்துக் கொண்டார். இங்கே அவர்களது ஜாதகங்களில் உள்ள சில ஒற்றுமைகளை எழுத இருக்கின்றோம். சோதிட ஆராய்ச்சியாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

ஷெல்லியின் ஜாதகம்:

sample horoscope

sample horosope

sample horosope

பாரதியின் ஜாதகம்:

sample horoscope

sample horosope

sample horoscope

கவிதை, நாடகம், நாட்டியம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் வரவேண்டுமென்றால் புதனும், சுக்கிரனும் ஜாதகருக்குச் சாதகமாக இருக்க வேண்டும். உணர்ச்சிமயமான சொற்களைப் படைக்க வேண்டுமெனில் சந்திரன் ஜாதகருக்குச் சாதகமாக இருக்க வேண்டும். எழுத்தை முக்கியமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு இரண்டாம் பாவமும், மூன்றாம் பாவமும், ஐந்தாம் பாவமும் மேற்சொன்ன கிரகங்களோடு சம்பந்தப்பட வேண்டும். 

  •  பாரதியின் ஜாதகத்தில் இரண்டாம் பாவம் வர்க்கோத்தமமாக உள்ளது. அதாவது 2ம் பாவ நவாம்சமும் சிம்மராசிதான். இதுபோலவே ஷெல்லியின் ஜாதகத்திலும் இரண்டாம் பாவம் வர்க்கோத்தமமாக உள்ளது. அதாவது 2ம்பாவ நவாம்சமும் ரிஷப ராசியே.
  • பாரதியின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் பாவத்தில் சுக்கிரன் உள்ளது. ஷெல்லியின் ஜாகத்திலும் சுக்கிரன் ஐந்தாம் பாவத்தில் இருக்கிறது. (கடகம் லக்னத்துக்கு நான்காம் ராசியாக இருந்தாலும் ஷெல்லியின் பிறப்பிடம் 51N04 வடஅட்சாம்சத்தில் இருப்பதால் நான்காம் பாவம் மிதுனத்திலும், ஐந்தாம் பாவம் கடகத்திலும் உதயமாகின்றன)
  • பாரதியின் ஜாதகத்தில் இரண்டுக்குடைய சுக்கிரன் ஐந்தாம் பாவத்தில். ஷெல்லியின் ஜாதகத்திலும் இரண்டுக்குடைய சூரியன் ஐந்தாம் பாவத்தில்.
  • பாரதியின் ஜாதகத்தில் சந்திரன் வியாழனின் பார்வையைப் பெறுகின்றது. ஷெல்லியின் ஜாதகத்தில் சந்திரன் புதனின் பார்வையைப் பெறுகின்றது.
  • பாரதியின் ஜாதகத்தில் சந்திரன் புதனின் அம்சத்தில் இருக்கிறது. ஷெல்லியின் ஜாதகத்தில் சந்திரன் சுக்கிரனின் அம்சத்தில் உள்ளது.
  • பத்தாம்பாவ நவாம்சம் பாரதியின் ஜாதகத்தில் கன்னியிலும், ஷெல்லியின் ஜாதகத்தில் துலாத்திலும் இருக்கின்றன.
  • இரண்டுபேருக்குமே மூன்றுக்குடையவன் புதன்தான்.

துவாதசாம்சச் சக்கரம், பாவங்களின் ஆரூடம் இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இன்னும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. சோதிட ஆர்வலர்களுக்குச் சில குறிப்புக்களே போதும்.

1982ல் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி வெளிவந்த ஒரு வார இதழில் (பெயர் நினைவில் இல்லை) பாரதி 11.12.1882 இரவு மணி 9.30க்குப் பிறந்ததாக ஒரு குறிப்பு இருந்தது. அப்போதே குறித்து வைக்கப்பட்ட எனது பழைய நாட்குறிப்பில் இருந்து பாரதியின் ஜாதகம் கணிக்கப்பட்டது. ஷெல்லியின் ஜாதகம் ASTRO DATA BANK-ல் இருந்து எடுக்கப்பட்டது.

இருவரது ஜாதகத்திலும் லக்னாதிபதிக்கு வியாழனின் சம்பந்தம் இருந்தும், இருவருமே அற்பாயுளில் மறைந்து போனார்கள் என்பதைச் சோதிட ஆர்வலர்கள் நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.

 

This Week’s Quote:

A story of particular facts is as a mirror which obscures and distorts that which should be beautiful: poetry is a mirror which makes beautiful that which is distorted.

-  Shelley in ‘A defence of poetry’.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 80 guests and no members online