சந்திரன் மேஷம் முதல் மீனம் வரையுள்ள பன்னிரண்டு இராசிகளிலும் நிற்கும் போது பிறந்தவர்களின் குணம், தோற்றம் பற்றி முன்னால் இரண்டு கட்டுரைகள் எழுதப்பட்டன. இந்தக் கட்டுரையில் அவ்வாறு ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் நிற்கும் போது மற்ற கிரகங்களால் பார்க்கப்பட்டால் அவை என்ன பலனைத் தருகின்றன என்பதைப் பார்ப்போம்.

 

மேஷ ராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  அரசன்
புதனால் பார்க்கப்பட்டால்  உயர்படிப்பு படித்தவர்
வியாழனால் பார்க்கப்பட்டால்  அரசனுக்குச் சமமானவர்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  நற்குணங்களை உடையவர்
சனியால் பார்க்கப்பட்டால்  திருடன்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  தனம் அற்றவர்

 

ரிசப ராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  தனமற்றவர்
புதனால் பார்க்கப்பட்டால்  திருடன்
வியாழனால் பார்க்கப்பட்டால்  மரியாதைக்குரியவர்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  அரசன்
சனியால் பார்க்கப்பட்டால்  செல்வந்தர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  பிறர்க்கு அடிமையானவர்

 

மிதுன ராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்
புதனால் பார்க்கப்பட்டால்  அரசன்
வியாழனால் பார்க்கப்பட்டால்  கல்விமான்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  எதற்கும் அஞ்சாதவர்
சனியால் பார்க்கப்பட்டால்  நெசவுத் தொழில் செய்பவர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  தனமற்றவர்

 

கடக ராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  சண்டையிடுபவர்
புதனால் பார்க்கப்பட்டால்  கவிதை எழுதுபவர்
வியாழனால் பார்க்கப்பட்டால்  கல்விமான்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  அரசன்
சனியால் பார்க்கப்பட்டால்  இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  கண்ணில் வியாதியுள்ளவர்
     

 

சிம்ம ராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  அரசன்
புதனால் பார்க்கப்பட்டால் சோதிட சாஸ்திரமறிந்தவர்
வியாழனால் பார்க்கப்பட்டால்  செல்வந்தர்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  அரசன்
சனியால் பார்க்கப்பட்டால்  ஒப்பனைக் கலைஞர் (Makeupman)
சூர்யனால் பார்க்கப்பட்டால்  அரசன்
     

 

கன்னிராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  பெண்கள் உதவியால் வாழ்க்கையில் முன்னேறுபவர்
புதனால் பார்க்கப்பட்டால்  அரசன்
வியாழனால் பார்க்கப்பட்டால்  சேனாதிபதி
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  கூர்மையான புத்திசாலி
சனியால் பார்க்கப்பட்டால்  பெண்கள் உதவியால் வாழ்க்கையில் முன்னேறுபவர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  பெண்கள் உதவியால் வாழ்க்கையில் முன்னேறுபவர்
     

 

துலாம் இராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  கொடூரமானவர்
புதனால் பார்க்கப்பட்டால்  அரசன்
வியாழனால் பார்க்கப்பட்டால்  தங்கம் சம்பந்தமான தொழில் செய்பவர்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  வியாபாரி
சனியால் பார்க்கப்பட்டால்  கொடூரமானவர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  கொடூரமானவர்
     

 

விருச்சிக இராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  அரசன்
புதனால் பார்க்கப்பட்டால்  இரட்டைக் குழந்தைகளின் தந்தையாகும் வாய்ப்புள்ளவர்
வியாழனால் பார்க்கப்பட்டால்  பூஜிக்கத் தகுந்தவர்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  நெசவுத் தொழில், சாயப்பட்டறைத் தொழில் செய்பவர்
சனியால் பார்க்கப்பட்டால்  அங்கக் குறைவு உள்ளவர் (மாற்றுத் திறனாளி)
சூர்யனால் பார்க்கப்பட்டால்  தனமற்றவர்
     

 

தனுசு இராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  ஏமாற்றுபவர்
புதனால் பார்க்கப்பட்டால்  உறவினர்களுக்கு உதவி செய்பவர்
வியாழனால் பார்க்கப்பட்டால்  அரசனுக்குச் சிநேகிதர்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  அதிகமான பேருக்கு வேலையளிக்கும் செல்வந்தர்
சனியால் பார்க்கப்பட்டால்  ஏமாற்றுபவர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  ஏமாற்றுபவர்
     

 

மகர  இராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  அரசன்
புதனால் பார்க்கப்பட்டால்  அரசர்க்கரசன்
வியாழனால் பார்க்கப்பட்டால்  அரசன்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  உயர் கல்வி கற்றவர்
சனியால் பார்க்கப்பட்டால்  செல்வந்தர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  ஏழை
     

 

கும்ப இராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  அன்னியப் பெண்கள் மீது ஆசையுள்ளவர்
புதனால் பார்க்கப்பட்டால்  அரசர்க்கரசன்
வியாழனால் பார்க்கப்பட்டால்  அரசன்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  அன்னியப் பெண்கள் மீது ஆசையுள்ளவர்
சனியால் பார்க்கப்பட்டால்  அன்னியப் பெண்கள் மீது ஆசையுள்ளவர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  அன்னியப் பெண்கள் மீது ஆசையுள்ளவர்
     

 

மீன இராசியில் உள்ள சந்திரன்:

செவ்வாயால் பார்க்கப்பட்டால்  சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்பவர்
புதனால் பார்க்கப்பட்டால்  நகைச்சுவை நடிகர்
வியாழனால் பார்க்கப்பட்டால்  அரசன்
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்  கல்விமான்
சனியால் பார்க்கப்பட்டால்  சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்பவர்
சூர்யனால் பார்க்கப்பட்டால்  சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்பவர்
     

 

ஜாதகத்துக்குச் சொல்லப்பட்ட பலன்கள் யாவுமே பிரஸ்ன நேரத்தின் போதும் பொருந்தும் என்று வராகமிகிரர் குறிப்பிடுவதால் இந்தப் பலன்களை பிரஸ்ன நேரத்திலும் பொருத்திப் பார்க்கலாம். தசாப்ரவேச காலத்திலும் கூட இவை பொருந்தக் கூடும். சில ஜாதகங்களில் சந்திரனுக்கு வேறு கிரகங்களின் பார்வையே இல்லாமல் இருக்கக் கூடும். அவர்களுக்கு எப்படிப் பலன் சொல்வது? ஒருவர் மேஷ ராசியில் சந்திரன் இருக்கும் போது பிறந்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். சந்திரனை வேறு கிரகங்கள் பார்க்கவில்லை என்றும் வைத்துக்கொள்வோம். மேஷத்திலுள்ள சந்திரன் சூர்யனால் பார்க்கப்பட்டால் தனமற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே துலா ராசியில் சூர்யன் வரும் ஐப்பசி மாதத்தில் சூர்யன் சந்திரனைப் பார்க்க முடியும் என்பதால் அம்மாதம் அவருக்குப் பணக்கஷ்டம் ஏற்படலாம். மேலும் அரசன் என்றிருக்கும் இடத்தில் செல்வாக்கு மிக்கவர் செல்வந்தர் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். காலத்துக்கேற்ப பொருள் கொண்டால்தான் ஜாதகம் பார்க்க முடியும்.

கும்பராசியில் உள்ள சந்திரன், சுக்கிரன், சனி, சூர்யன், செவ்வாய் இவர்களால் பார்க்கப்பட்டால் பிற பெண்டிர் மீது ஆசைப்படுபவர் என்பதைக் கும்ப ராசியில் உள்ள சந்திரனைக் கோசார ரீதியாக மேற்சொன்ன கிரகங்கள் பார்க்கும் போதோ அல்லது அவ்வாறு பார்க்கப்படும் போது சந்திர தசை நடந்து கொண்டிருந்தாலோ பிற பெண்டிர் மீது கொள்ளும் ஆசையால் சிக்கல்களும் பழியும் வரும் என்றுதான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கும் ஒரு நாளில் ஒருவர் வந்து இன்னும் இரண்டு நாட்களில் என் மனைவி பிரசவிக்க இருக்கிறாள். என்ன குழந்தை பிறக்கும்? என்று கேட்பாரானால் அந்தச் சந்திரனுக்கும் பதன் பார்வை தவிர வேறு பார்வை இல்லை என்றால் உமக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்று துணிந்து கூறலாம்.

இவ்வாறு நமக்கு வழங்கப்பட்ட சிறு குறிப்புகளைக் கொண்டு கால தேச வர்த்தமானத்தை அனுசரித்தும் கேட்பவர்களின் சமூகப் பொருளாதார நிலைகளை அனுசரித்தும் பிரஸ்ன மற்றும் தசாப்ரவேச லக்னங்களைக் கணித்தும் சொன்னால் அவை நிச்சயம் சரியாக இருக்கும்.

பார்வைகள் பற்றித் தெரியாத வாசகர்களுக்கு:

சூர்யன் முதல் சனி வரையுள்ள ஏழு கிரகங்களும் தாமிருக்கும் ராசியிலிருந்து ஏழாம் ராசியைப் பார்க்கும். செவ்வாய் கூடுதலாக நான்கு எட்டாமிடங்களையும், குரு கூடுதலாக ஐந்து, ஒன்பதாமிடங்களையும், சனி கூடுதலாக மூன்று, பத்தாமிடங்களையும் பார்க்கும்.

சூர்யன், சந்திரன், புதன், சுக்கிரன் இவர்களுக்கு ஏழாமிடப் பார்வை மட்டுமே.

 

09.03.2016-ல் வந்த 'சூரிய கிரகணத்தின்' பலன் பற்றிய கட்டுரை 20.03.2016-ல் வெளிவரும்.


 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 52 guests and no members online