27.08.2017ல் தந்தையின் மரணம் என்ற தலைப்பில் நாம் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அதைப் படித்த ஒரு வாசகர், சென்ற வாரம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ஒருவருக்கு 4 மனைவியரும், 14 குழந்தைகளும் இருந்தால் அவரது மரணம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்பதே அவரது கேள்வி. அவருக்குத் தெளிவாகக் கேள்வி கேட்கத் தெரியவில்லை என்பதே நமது கருத்து. ஒரு தந்தையின் மரணத்தின்போது, அவரது எல்லாக் குழந்தைகளின் ஜாதகத்திலும் அம்மரணத்துக்கான குறிப்புக்கள் காணக்கிடைக்குமா என்பதுதான், அவர் கேட்க நினைத்த கேள்வி. அதைத்தான் அவர் அப்படிக் கேட்டிருக்கின்றார். கிடைக்கும் என்பதே நமது விடை. அப்படிக் கிடைத்தால்தான் சோதிடச் சாத்திரம் நம்பக்கூடிய ஒன்றாக இருக்கும்.
அந்தக் கட்டுரையில் நாம் ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்திருந்தோம். இந்தக் கட்டுரையில் அப்பெண்மணியின் தம்பியின் ஜாதகத்தைத் தந்துள்ளோம். அவரது 8-வது வயதில் அவரது தந்தையின் மரணம் நிகழ்ந்தது. அவரது ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




பத்துக்குடைய சூரியன் ஆறாம் பாவத்தில் உள்ளது. எமது அனுபவத்தில் விருச்சிக லக்னத்துக்கு ஆறு எட்டில் சூரியன் இருக்கப் பெற்றவர்கள் தந்தையைப் பிரிந்தவர்களாகவும், தந்தையோடு கருத்து வேறுபாடு கொண்டவர்களாகவும், பூர்வீகச் சொத்தை இழப்பவர்களாகவும் இருக்கக் கண்டுள்ளோம். (காரகனும், ஸ்தானாதிபதியும் சூரியன்தான் என்பது கூடக் காரணமாக இருக்கலாம்). பத்தாம் பாவத்துக்கு எட்டில் புதனும், சுக்கிரனும் இருந்து, சனியின் பூரணப் பார்வை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புதன் பத்தாம்பாவ நவாம்சபதியாக வந்து, பத்துக்கு எட்டாமிடத்தில் இருப்பது, தந்தையின் ஆயுளைப் பற்றிய முக்கியமான கேள்வியை எழுப்புகின்றது.
இந்த ஜாதகரின் எட்டாவது வயதைக் குறிக்கும் எட்டாவது நாளில் (5.05.1953 அன்று) முன்நகர்ந்த சூரியன் மேச ராசியில் 21 பாகை, 36 கலையில் உள்ளது. இது ஆறாம் பாவப்புள்ளியோடு சரியான சேர்க்கையில் உள்ளது. பத்தாம் பாவத்துக்கு, எட்டாம் பாவமான ஐந்தாம் பாவம் (11 22 00) முன் நகர்ந்து 11 29 15 –ஐச் சென்றடைகின்றது. இது கன்னியில் உள்ள சனிக்கு நேர்எதிர்ப் பார்வையாக அமைகின்றது.
நைசர்க்சிக தசை முறைப்படி மூன்று வயது முதல் பன்னிரண்டு வயது முடிய புத தசை நடப்பதாகக் கொண்டால், புதன் தந்தையின் மரணத்துக்குக் காரணமாவதில் வியப்பில்லை. புதன் பத்தாம் பாவத்துக்கு எட்டில் உள்ளது. புதனது த்வாதசாம்சபதி செவ்வாய் ஆறாம் பாவத்தில் உள்ளது. இந்த ஜாதகரின் எட்டாவது வயது பிறக்கும் நாளில் புதன் மீனத்தில் 25 பாகையிலும், சனி தனுசில் 25 பாகையிலும் உள்ளன. சூரியனது த்வாசாம்ச ராசிக்குக் கேந்திரத்தில் சனி வரும்போது பிதா மரணம் என்று பிருஹஜ் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் சூரியனது த்வாதசாம்ச ராசியான கன்னிக்குக் கேந்திரத்தில் சனியும், தசாநாதனான புதனும் வரும் 8-வது வயதில் தந்தையின் மரணம் நிகழ வாய்ப்பு உண்டு.
ஜாதகர் இரவில் பிறந்திருப்பதால் சூரியஸ்புடத்தில், சனிஸ்புடத்தைக் கழித்து, லக்னஸ்புடத்தைக் கூட்டினால் கிடைக்கும் புள்ளி 2 04 10. இதுவே தந்தையைக் குறிக்கும் புள்ளி. இதன் அதிபதி புதன் பத்தாம் பாவத்துக்கு எட்டில் இருப்பதும், புத தசையே நடப்பதும் தந்தையின் மரணத்தைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். எனவே ஒருவரின் மரணத்தின்போது அவரது எல்லாக் குழந்தைகளின் ஜாதகத்திலும் அம்மரணத்தைக் குறிக்கும் கிரகநிலைகள் அமைவது நிச்சயம் என்ற முடிவுக்கு நாம் வரலாம். இதுவே, இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்த அந்த வாசகரின் கேள்விக்கு நாம் அளிக்கும் பதிலாகும்.
This Week’s Quote:
Nothing is more humiliating than to see idiots succeed in enterprises we have failed in.
- Gustave Flaubert
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
