கிரேக்க வானியல் அறிஞரும், சோதிடருமாகிய தாலமியின் சில சோதிடக் குறிப்புக்கள் படிக்கக் கிடைத்தன. சோதிட ஆர்வலர்களுக்கு இவை பயன்படக் கூடும் என்பதால் அவற்றை இங்கே தருகின்றோம்.
- சந்திரன் சிம்ம ராசியைக் கடக்கும் நாட்களில் புத்தாடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
- சந்திரன் எந்த ராசியில் இருக்கின்றதோ, அந்த ராசி, கால புருசனின் எந்த அங்கத்தைக் குறிக்கின்றதோ, அந்த அங்கங்களில் அறுவைச் சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும். (சந்திரன் மேச ராசியில் இருக்கும் நாட்களில் தலையில் அறுவைச் சிகிச்சை செய்யக் கூடாது என்பது இதன் பொருளாகும்.) அந்த ராசி ஜாதகரின் எந்த அங்கங்களைக் குறிக்கின்றதோ, அந்த அங்கங்களில் அறுவைச் சிகிச்சை செய்யக் கூடாது என்பது எமது அபிப்ராயம்.
- சந்திரன், வியாழனோடு சேரும் நாட்களில், கொடுக்கப்படும் மருந்துகள் பயனளிக்காது.
- சூர்யனும், சந்திரனும் ஒரே ராசி, ஒரே பாகை, ஒரே கலையில் இருக்கும்போது (அதாவது அமாவாசை முடிவுக்கு வரும் நிமிடங்கள்) துலா, ரிசப, தனுசு, மீன லக்னங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் லக்னத்தில் பாவக் கிரகங்கள் இருக்குமானால் பயனில்லை.
- ஒரு ஜாதகரின் லக்னத்துக்குக் கேந்திரங்களில் சூர்ய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் வருடங்களில் அவர்களுக்குக் கஷ்டங்கள் உண்டாகும். (இதை நாம் நமது சூரிய கிரகண பலன் என்ற கட்டுரையில் சொல்லியிருக்கின்றோம்.)
- ஒரு அமாவாசையின் போது சந்திரனின் ராசியாதிபதி லக்னத்துக்குக் கேந்திரங்களில் இருந்தால், அந்தக் கிரகத்தோடு சம்பந்தப்பட்ட சுப, அசுப நிகழ்ச்சிகள் அடுத்த அமாவாசைக்குள் நிகழும்.
- லக்னம், சூர்யன், சந்திரன் இவை துலாம் , விருச்சிகம், தனுசு, மகரம் , கும்பம், மீனம் இந்த ராசிகளில் இருக்கப் பிறந்தவர்களிடையே அன்பும், நட்பும் அதிகமாக மலரும்.
- புதன், சனியின் ராசிகளான மகர, கும்பங்களில் வலுவாக இருக்கும் போது பிறந்தவர்களிடம் சில அபூர்வ சக்திகள் சேரும். புதன் மேசத்தில் வலுவாக இருக்கும் போது பிறந்தவர்கள், பேச்சுக் கலையில் வல்லவர்களாக இருப்பர்.
- ஒருவரின் ஜாதகத்தில் பாபக்கிரகம் இருக்கும் ராசியைச் சந்திரன் கடக்கும் நாளில் அவர் நோய்வாய்ப்படுதல் நல்லதல்ல.
This Week’s Quote:
Illusory joy is often worth more than genuine sorrow.
- Rene Descartes
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
