சென்ற கட்டுரையில் 28.10.66 முதல் 28.06.68 முடிய உள்ள தனுசு ராசி, சுக்கிர தசாவில் கடக ராசியின் அந்தர்த்தசாவில் இந்த ஜாதகிக்குத் திருமணம் நடந்தது என்று குறிப்பிட்டோம். தனுசு ராசியாதிபதி குருவும், லக்னத்துக்கு ஏழுக்குடைய புதனும் எவ்வாறேனும் சம்பந்தப்பட்டிருந்தால் அது திருமணத்தைக் கொண்டு வரவேண்டும். இங்கே ஏழுக்குடைய புதன் துவாதசாம்சச் சக்கரத்தில் கடகத்தில் இருக்கிறது. கடகத்தின் அதிபதி சந்திரன் ராசியில் வியாழனோடு சேர்க்கையில் உள்ளது. துவாதசாம்சச் சக்கரத்தில் வியாழனின் நேரெதிர்க் கேந்திரத்தில் புதன் உள்ளது. புதனின் துவாதசாம்ச அதிபதி சந்திரனின் திரிகோணத்தில் உள்ள தனுசு ராசி திருமணத்தைக் கொண்டு வந்தது.
கேந்திர திரிகோணங்களுக்குச் சோதிடச் சாத்திரத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இப்படித்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். கடக அந்தர்த்தசா திருமணத்தைக் கொண்டு வந்ததற்கான காரணமும் இங்கே வெளிப்படையாகத் தெரிகின்றது. புதன்,வியாழன், சந்திரன் இவை ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் உள்ளன.


28.10.1971 முதல் 28.06.1973 முடிய சுக்கிரனின் மீன ராசி தசா நடந்தது. 25.10.1972-ல் விருச்சிக ராசியின் அந்தர்த்தசா நடந்த போது இந்த ஜாதகி காலமானார். எட்டாமிடத்ததிபதி சுக்கிரனின் துவாதசாம்சபதி புதன் கடகத்தில் உள்ளது. கடகத்தின் திரிகோண ராசியான மீன ராசி தசாவில் இன்னொரு திரிகோணராசியான விருச்சிகராசியின் அந்தர்த்தசாவில் மரணம் நிகழ்ந்தது.
திருமண நாளான 27.11.1967ல் ஜன்ம லக்னத்துக்கு ஏழாமிடத்ததிபதி புதன் கடக துவாதசாம்சத்தில் இருந்தது. (கடக ராசி அந்தர்த்தசாவில் திருமணம்) மரணம் நேர்ந்த நாளான 25.12.1972ல் ஜன்மலக்னத்துக்கு அட்டமாதிபதி சுக்கிரன் விருச்சிகராசியில் இருந்தது. (விருச்சிகராசி அந்தர்த்தசாவில் இறப்பு)
எனவே பாவாதிபதிகள் இருக்கும் ராசி, த்வாதசாம்சம் இவற்றின் கேந்திர திரிகோண ராசிகளின் தசா, அந்தர்த்தசாவில், அந்தந்த பாவ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று தெரிகின்றது. எனவே நைசர்ச்சிக முறைப்படியான கிரக தசைகளில் துவாதசாம்சச் சக்கர முறைப்படியான ராசியின் தசா அந்தர்தசாவையும், அந்தந்த வருசப்ரவேச லக்ன சக்கரத்தையும், சேர்த்து வைத்து ஆராய்ந்து பார்த்தால், ஒரு சம்பவம் எப்போது நடக்கும் என்பது துல்லியமாகக் கணக்கிட முடியும் என்பதே எமது நம்பிக்கை. சோதிட ஆர்வலர்கள் இம்முறையைப் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இங்கே நாம்,பாவாதிபதிகளை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டோம். பாவங்களின் ஸ்புடத்தையும் எடுத்துக்கொண்டு சோதித்துப் பார்க்குமாறு சோதிட ஆர்வலர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
This Week’s Quote:
Life is the continuous adjustment of internal relations to external relations.
- Herbert Spencer
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
