ஜாதகத்தில் லக்னத்துக்கு ஒன்பதாமிடம், அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் இடமாகச் சொல்லப்படுகின்றது. எல்லாப் பூர்வாசிரியர்களும், ஒன்பதாமிடத்துக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்திருக்கின்றார்கள். ஒன்பதாமிடத்தில் ஏதேனும் உச்சக்கிரகம் இருக்கமானால், அது ராஜயோகமாகவே கருதப்படுகிறது. நாம் எமது அனுபவத்தில் ஒன்பதாமிடத்தைப் பற்றிச் சேகரித்து வைத்திருக்கும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றோம். இவை எமது சொந்தக் கருத்துக்கள்தாம். இவற்றை ஏற்பதும், புறக்கணித்துப் போவதும் வாசகர்களின் உரிமை.

  • ஆணின் ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தில் சனி இருப்பது, அதிர்ஷ்டத்தைக் குறைக்கின்றது. சூர்யன், செவ்வாய் இருப்பது சனி போலக் கெடுதலைச் செய்வதில்லை.
  • பெண்களின் ஜாதகத்தில் ஒன்பதாமிடப் பாபிகள் கெடுதலைச் செய்வதில்லை.
  • ஒன்பதுக்குடையவன் பத்தில் இருப்பதைவிடப் பதினொன்றில் இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் அந்த ஜாதகர்கள் நிறையச் சம்பாதித்து, நிறையச் செலவழிக்கின்றார்கள். 
  • ஒன்பதுக்குடையவன் பத்தில் இருப்பவர்கள் சிக்கனமாக இருக்கின்றார்கள்.
  • ஒன்பதுக்குடையவன் ஏழில் இருக்கும் ஜாதகர்களில் பெரும்பாலோர், தந்தையை இளமையில் இழந்துவிடுகின்றார்கள். அல்லது ஒன்பதுக்குடையவன் கோசாரரீதியாக ஏழில் வரும் போது தந்தையின் மரணம் நிகழ்கின்றது.
  • ஏழுக்குடையவன் ஒன்பதில் இருக்கும் ஜாதகர்கள், திருமணத்திற்குப் பிறகு ஏற்றமான வாழ்க்கையைப் பெறுகின்றார்கள். 
  • ஒன்பதாமிடம் பெண்களின் ஜாதகத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அவர்களது சுகமான இல்லற வாழ்க்கையை ஒன்பதாமிடமே தீர்மானிக்கின்றது என்று சொல்லலாம்.
  • எல்லோரும் நினைப்பது போல ஒன்பதாமிடத்து வியாழன் பெரிய பலன்களைத் தருவதில்லை.
  • ஒன்பதாமிடத்தில் சுபர்கள் இருக்கப் பிறந்த ஆண்களுக்கு, அவர்களது சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்காது.
  • ஒன்பதாமிடத்து அதிபதி சர ராசி, சர நவாம்சத்தில் இருப்பவர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்கின்றார்கள். அல்லது அந்த மாதிரி வேலையில் இருக்கின்றார்கள்.
  • ஒன்பதாமிடத்து அதிபதி ஸ்திர ராசியில் இருப்பது, தந்தையின் ஆயுளை அதிகப்படுத்துகின்றது.
  • லக்னாதிபதி ஒன்பதில் உச்சமாக இருக்கப் பிறந்தவர்கள் (சிம்ம, கும்ப லக்னங்களுக்கே இந்த அமைப்பு கிடைக்கும்) சோதிட சாத்திரங்கள் வியந்து போற்றுவது போல மிக அதிர்ஷ்டமுள்ள வாழ்க்கை வாழ்வதில்லை.
  • ஒன்பதுக்குடையவன் நவாம்சச் சக்கரத்தில் எந்த ராசியில் இருக்கின்றானோ அந்த ராசியே லக்னமாக இருக்கப் பிறந்தவர்கள் தந்தையுடன் நல்ல உறவில் இருக்கின்றார்கள் அல்லது முன்னோர்களின் சொத்து அவர்களுக்கு அதிகமாகக் கிடைக்கின்றது.
  • இரண்டுக்குடையவன் ஒன்பதில் இருக்கும்போது, அந்த ஜாதகரின் லக்னம், மூன்று, நான்கு, ஐந்து, பன்னிரண்டாமிடங்களிலும் கிரகங்கள் இருக்குமானால் அவர் பெரும் பொருளைச் சேர்க்கின்றார் அல்லது நேர்மாறாகப் பெரும் பொருளை இழக்கின்றார்.
  •  

இவை எமது அனுபவத்தில் நாம் கண்ட சில சோதிடக் குறிப்புக்கள். சோதிட ஆர்வலர்கள் இக்குறிப்புகளைச் சோதித்துப் பார்த்து ஏற்கவோ, மறுக்கவோ உரிமையுள்ளவர்கள்.

 

This Week’s Quote:

What Youth deemed crystal, Age finds out was dew.

-  Robert Browning

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 56 guests and no members online