ஒரு ஜாதகரின் பிறந்த நாளன்று இருக்கக் கூடிய கிரகநிலைகளை வைத்து, அந்த ஓராண்டுக்கான சுப மற்றும் அசுப பலன்களைச் சொல்வதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான், தாஜகம் என்று அழைக்கப்படும் வருசப்ரவேச ஜாதகம். இன்று ஒரு உதாரண ஜாதகம் மூலம் சில விசயங்களைக் கற்றுக் கொள்வோம்.



லக்னத்தில் உதயமாகும் பாகை கலைகளோடு 2 பாகை 30 கலையைச் சேர்த்து வரும் பாகை கலைகள் இரண்டாவது வருசத்துக்கான பலன்களையும், 5 பாகையைச் சேர்த்து வரும் பாகை கலைகள் மூன்றாவது வருசத்துக்கான பலன்களையும், அறிய உதவுகின்றன. இதன்படி முதல் 30 பாகைகள் 12 வருசத்துக்கான பலன்களையும், இரண்டாவது 30 பாகைகள் 12 முதல் 24 வருசத்துக்கான பலன்களையும் அறிய உதவுகின்றன. இப்படிக் கிடைக்கும் புள்ளிக்கு முத்தஹா என்ற பெயர். பெங்களூர் ராமன் தனது ஆங்கிலமொழி பெயர்ப்பில் இதை முந்தா (MUNTHA) எனக் கூறுகின்றார்.
இந்த ஜாதகரின் திருமணம் இவரது 26-வது வயதில் நடைபெற்றது. 25 வருசங்களில் 25 * 2 30 = 2 இராசி 2 பாகை 30 கலைகளை முந்தா கடந்திருக்கும். எனவே இந்த ஜாதகரின் 26 வயதில், மிதுனராசியின் 18 பாகை 07 கலைகளில் முந்தா இருக்கும். எனவே இந்த ஜாதகரின் 26வது வயதில் தனுசு ராசியின் 18 பாகை 07 கலை திருமணத்தைக் குறிக்கும். தனுசு ராசியின் அதிபதியான வியாழன், ஜன்ம ஜாதகத்தில் ஏழாம் பாவத்துக்குப் பதினோராமிடத்தில் இருப்பதாலும்,தனுசின் 18 பாகை 07 கலை என்பது கன்னி நவாம்சத்தில் இருந்து அங்கே ஜன்ம லக்னத்துக்கு ஏழாம்பாவாதிபதியான சுக்கிரனோடு சம்பந்தம் ஏற்படுவதாலும், இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே நாம் 26-வது வயது பிறக்கும் நாளைக் கண்டுபிடித்து அதன் மூலமும் இதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஜாதகருக்கு 26வது வயது 11.07.1981 பகல் 11 மணி 23 நிமிடத்துக்கு ஆரம்பமாகின்றது. ஆதற்கான ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைகின்றது.



கன்னியா லக்னம் உதயமாகின்றது. ஏழாம் பாவாதிபதி வியாழன் லக்னத்திலேயே இருக்கின்றது. ஜன்ம லக்னத்துக்கு ஏழுக்குடைய சுக்கிரன், வருசப்ரவேச லக்னத்துக்குப் பதினோராமிடத்தில் இருக்கின்றது. பதினோராமிடத்து அதிபதி சந்திரன், ஜன்ம லக்னத்துக்கு ஏழாமிடத்தில் இருந்து நவாம்சத்தில் மீனத்தில் வியாழனோடு சேர்ந்துள்ளது. இக்காரணங்களால் இந்த ஜாதகரின் 26வது வயதில் திருமணம் நிச்சயம் நடக்குமென்று கூறலாம். திருமணம் நடைபெறும் காலத்தை அறிவதற்கு வருச தசா முறையைப் பயன்படுத்தலாம்.
தாஜகமுறைப்படி இந்த ஜாதகரின் 26வது வயதுக்கான தசா கீழ்க்கண்டபடி அமைகின்றது.

இவருக்கு 01.11.81ல் திருமணம் நடைபெற்றது. வியாழனுக்கு ஏழாம் பாவத்தோடு நெருங்கிய சம்பந்தம் ஏற்படுவதாலும், வியாழ தசை நடைபெறுவது வியாழனுக்குரிய ஹேமந்த ருதுவைக் குறிப்பதாலும், 24.09.81 முதல் 09.12.81 முடிய உள்ள காலத்தில் திருமணம் நடைபெறும் என நிச்சயமாகக் கூறலாம். 01.11.81 அன்று மூல நட்சத்திரம். சந்திரன் வியாழனின் வீட்டில் சுக்கிரனோடு நெருங்கிய சேர்க்கை. வியாழன் துலா ராசியில் 1 பாகையில் உள்ளது. சூரியன் துலாத்தில் 14 பாகை 52 கலையில் ஜன்ம லக்னத்துக்கு ஏழாமிடத்தில் வெகு சமீபத்தில் உள்ளது. எனவே 01.11.81 திருமண நாளாக அமைந்ததில் வியப்பில்லை. கிரகங்களின் முன் நகர்வு என்ற எமது கட்டுரையைப் பின்பற்றித் திருமண வயதைக் கண்டு பிடிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த ஜாதகர் பிறந்த 26வது நாள் கிரக நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மனம் கொண்டோருக்கு அங்கேயும் சில விசயங்கள் கிடைக்கும்.

வருச தசா எவ்வாறு கணக்கிடுவது என்பது இனி வரும் ஒரு கட்டுரை மூலம் விளக்கப்படும். எந்த ஒரு சோதிட இணையதளத்தையும் விட, அதிகமான விசயங்களையும், சரியான கணக்குகளையும், அறிவுப்பூர்வமான அணுகுமுறைகளையும் தரும் எமது இணையதளத்தை வாசகர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
This Week’s Quote:
It seems that laughter needs an echo.
- Henri Bergson
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
