பொதுவாகவே அனைவருக்கும் தங்களது நட்சத்திரத்துக்கும், ராசிக்கும் உள்ள பலன்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதைத் தெரிந்துகொள்ள அவர்கள் சோதிட நூல்களையோ, கற்றறிந்த சோதிடர்களையோ தேடிப் போவதில்லை. ராசிகளின் பெயரை ஒட்டிய குணங்களைக் கற்பித்துக்கொண்டு அதிலேயே திருப்தியடைந்து கொள்கின்றார்;கள். சிம்மராசியில் பிறந்தால் எதிரிகளைச் செயிக்கும் தீரனென்றும், கன்னிராசியில் பிறந்தால் பெண்களை வசீகரிப்பவன் என்றும், துலா ராசியில் பிறந்தால் துலாக்கோல் போல நீதிமான் என்றும் கற்பித்துக் கொண்டு கற்பனையிலேயே வாழ்கின்றார்கள். ஆனால் அனுபவத்தில் வேறுவிதமாக இருக்கின்றது. வராகமிரரின் பிருஹஜ் ஜாதகத்தில் அவர் பன்னிரண்டு ராசிகளிலும் சந்திரன் நிற்கும் போது பிறந்தவர்களைப் பற்றிய சித்திரங்களை எப்படித் தருகின்றார் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

மேஷ ராசியில் பிறந்தவர்

  • வட்டமாயும் சிவந்ததாயும் இருக்கும் கண்களை உடையவர்
  • சூடாகவே ஆகாரத்தை உண்பவர்.
  • விரைந்து உண்பவர்.
  • வெகு சீக்கிரத்திலேயே கோபம் குறைந்து சாந்தமாகும் குணத்தை உடையவர்
  • அதிகமான பயணங்கள் செய்பவர்
  • பெண் சுகத்தில் அதிக நாட்டமுள்ளவர்.
  • வலிமையில்லாத முழங்கால்களை உடையவர் (கால் முட்டியில் நோய் தாக்கலாம்)
  • நிலையான செல்வத்தைப் பெற்றிராதவர் (வரவுக்கும், செலவுக்கும் சரியாய் இருக்கும் வாழ்க்கை கைவரப் பெற்றவர்)
  • சண்டையில் பிரியம் காட்டுபவர்
  • பெண்களால் விரும்பப்படுபவர்
  • நல்ல ஊழியராக இருப்பவர்
  • நகங்களில் வலிமையற்றவர்
  • தலையில் வடு அல்லது மரு உள்ளவர்
  • சகோதரர்களுக்குள் முதல்வனாக இருப்பவர்
  • கைகளில் வடு மரு முதலிய அடையாளம் பெற்றவர்
  • நீர் நிலைகளைக் கண்டு பயம் கொள்பவர்.

ரிஷப ராசியில் பிறந்தவர்

  • அழகானவர்
  • அழகான நடை நடப்பவர்
  • பெரிய முகம், தொடை உடையவர்
  • முதுகு, முகம் இவற்றில் வடு உள்ளவர்
  • ஈகைக் குணம் உள்ளவர்
  • கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்பவர்
  • நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்
  • பலமான தோள்களை உடையவர்
  • பெண் குழந்தைகளையுடையவர்
  • கபம் நிறைந்த சரீரமுடையவர்
  • தனக்கு முந்திய பந்துக்கள் செல்வம் புத்திரர்களிலிருந்து விடுபட்டவராக இருப்பவர். (தற்காலம் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களாக இருக்கலாம்)
  • எல்லோராலும் விரும்பப்படுபவர்
  • பொறுமையுள்ளவர்
  • அதிகமான பசி உடையவர்
  • பெண்களிடம் மிக்கப் பிரியம் உள்ளவர்
  • நல்ல நிலையான நண்பர்களை உடையவர்
  • நடு வயதிலும் கடை வயதிலும் சௌக்கியம் உள்ளவர்

மிதுன ராசியில் பிறந்தவர்

  • பெண்கள் மீது அதிகமான ஆசையுடையவர்
  • சிவந்த கண்களை உடையவர்
  • பலவகையான நூலறிவு உடையவர்
  • தூது செல்பவர் (தற்காலத்தில் AMBASSADOR என்று பொருள் கொள்ளலாம்)
  • சுருண்ட தலைமுடியை உடையவர். (இது பெரும்பாலும் சரியாக இருக்கின்றது)
  • மிகக் கூர்மையான புத்தியுள்ளவர்
  • ஹாஸ்ய உணர்ச்சி மிக்கவர்.
  • பிறரது உள்ளக் கிடக்கையை இலகுவில் அறிந்து கொள்பவர்
  • சூதாடுவதில் தேர்ச்சி பெற்றவர்
  • இனிமையாகப் பேசுகின்றவர்
  • ருசி பார்த்து அதிகம் உண்பவர்
  • இசை நாட்டியம் போன்ற நுண்கலைகளை அறிந்தவர்
  • ஆணும் பெண்ணுமற்ற திருநங்கைகளுடன் நட்பு கொள்பவர்
  • உயர்ந்த எடுப்பான நாசியை உடையவர்.

கடக ராசியில் பிறந்தவர்

  • கோணலாயும், வேகமாகவும் நடப்பவர்
  • உயர்ந்த பெரிய இடுப்பை உடையவர்
  • பெண்களிடம் அடங்கிப் போகும் குணம் கொண்டவர்
  • நல்ல சிநேகிதர்களை உடையவர்
  • சோதிட சாஸ்திரம் அறிந்தவர்
  • ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குச் சொந்தக்காரராக இருப்பவர்
  • சந்திரன் தேய்ந்து வளர்வது போல ஏற்றமும் இறக்கமும் கொண்ட செல்வங்களை உடையவர்
  • குட்டையாகவும், பருமனாகவும் உள்ள கழுத்தை உடையவர்
  • முகஸ்துதிக்கு வசமாகுபவர்
  • சிநேகிதர்களிடத்தில் உண்மையான அன்புள்ளவர்
  • நீர்நிலைகள், தோட்டம் இவைகளில் அதிகமான பிரியம் கொண்டிருப்பவர்

சிம்ம ராசியில் பிறந்தவர்

  • கொடூர குணம் மிக்கவர்
  • பெருத்த கன்னம், தாடையை உடையவர்
  • விசாலமான முகம் பெற்றவர்
  • பொன்னிறமான கண்களையுடையவர்
  • குறைந்த ஆண் குழந்தைகளைப் பெற்றவர்
  • பெண்களை வெறுப்பவர்
  • மாமிச உணவு வகையில் விருப்பமுடையவர்
  • காடு, மலை இவைகளில் ப்ரியமுள்ளவர்.
  • சாதாரண விஷயத்துக்காக நீண்டகாலம் கோபித்துக்கொண்டு வாழ்பவர்
  • பசி, தாகம், வயிற்று வலி, பல்வலி போன்றவைகளால் பீடிக்கப்பட்டவர்.
  • சிறு விஷயங்களுக்காக அதிகமான கவலை கொள்பவர்
  • கொடைக் குணம் கொண்டவர்
  • தைரியம் மிக்கவர்
  • நிலையான புத்தியுடையவர்
  • அதிகமாகக் கர்வம் கொள்பவர்
  • தாயின் சொல்லை மீறி நடக்காதவர்

கன்னிராசியில் பிறந்தவர்

  • கூச்ச சுபாவம் உள்ளவர்
  • அழகிய பார்வை நடை இவைகளையுடையவர்
  • தளர்ந்த தோள், கை இவைகளையுடையவர்
  • எப்பொழுதும் சுகவாசி
  • மெதுவாகவும் இனிமையாகவும் பேசுபவர்
  • சத்தியத்தின் மீது பெரு விருப்பமுள்ளவர்
  • நுண்கலைகளில் (நாட்டியம், வாய்ப்பாட்டு) நிபுணர்
  • சாஸ்திரங்களின் நிஜமான அர்த்தங்களை அறிந்தவர்
  • தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்
  • பெண்ணின்பத்தில் விருப்பமுள்ளவர்
  • அடுத்தவர்களுக்குச் சொந்தமான வீடுகள் செல்வங்கள் இவற்றை அனுபவிப்பவர்
  • பிறந்த இடம் நீங்கி வேறு இடங்களில் வாழ்பவர்
  • ஆண்குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகளை அதிகம் பெறுபவர்

சந்திரனும், சந்திரன் இருக்கின்ற ராசியும் அந்த ராசியின் அதிபதியும் பலமாக இருந்தால் மேற்சொன்ன பலன்கள் முழுமையாக இருக்கும். பலவீனமாக இருந்தால் மேற்சொன்ன பலன்களில் குறைவு ஏற்படும். சந்திரன் கடக ராசியில் இருந்தால் சந்திரன் சொந்த வீட்டில் இருப்பதால் கடக ராசிக்குச் சொன்ன பலன்கள் முழுமையாக இருக்குமா என்ற கேள்வி எழலாம். சந்திரனுக்குப் பட்ச பலம் அதிகமாக இருந்தால் மட்டுமே கடகராசிக்குச் சொன்ன பலன்கள் முழுமையாக பலிதமாகும். தேய்பிறைத் தசமி திதிக்குப் பின் சந்திரனுக்குப் பட்சபலம் வெகுவாகக் குறைவதால் அப்போது கடகராசியில் பிறந்தவர்களுக்கு மேற்சொன்ன பலன்கள் முழுமையாக  இருக்காது. மீதமுள்ள ஆறு ராசிகளில் பிறந்தவர்களின் பலன் அடுத்த கட்டுரையில் வரும்.

 

ஒரு நண்பர் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ‘விவாஹ ஸஹம்’ பற்றி வினா எழுப்பியிருந்தார்.

பகலில் பிறந்தவர்களுக்குச் சுக்கிர ஸ்புடத்தில் சனி ஸ்புடத்தைக் கழித்து வரும் இராசி பாகை கலைகளோடு லக்னஸ்புடத்தைக் கூட்ட வேண்டும். சுக்கிரனுக்கும் சனிக்கும் மத்தியில் லக்னம் இல்லையென்றால் இன்னும் ஒரு ராசி கூட்ட வருவதே விவாஹ ஸஹம். சுக்கிரனுக்கும் சனிக்கும் மத்தியில் லக்னம் இருக்குமானால் ஒரு ராசி கூட்ட வேண்டிய அவசியம் இல்லை.

இரவில் பிறந்தவர்களுக்குச் சனி ஸ்புடத்தில் சுக்கிர ஸ்புடத்தைக் கழித்து கிடைக்கும் ராசி பாகை கலைகளோடு லக்ன ஸ்புடத்தைக் கூட்ட வேண்டும். சனிக்கும் சுக்கிரனுக்கும் மத்தியில் லக்னம் இல்லையென்றால் இன்னும் ஒரு ராசி கூட்ட வருவதே விவாஹ ஸஹம். சனிக்கும் சுக்கிரனுக்கும் மத்தியில் லக்னம் இருக்குமானால் ஒரு ராசி கூட்ட வேண்டிய அவசியமில்லை.

உதாரணம்:  சென்ற கட்டுரையில் உதாரணமாகக் கொடுக்கப்பட்ட முதல் ஜாதகர் பிறந்தது இரவில். எனவே சனி ஸ்புடத்தில் சுக்கிர ஸ்புடத்தைக் கழிக்க வேண்டும். சனி ஸ்புடம் 5 இராசி 29 பாகை. சுக்கிர ஸ்புடம் 11 ராசி 22 பாகை. சனி ஸ்புடத்தில் சுக்கிர ஸ்புடத்தைக் கழிக்க

 table

 

சனியிருக்கும் கன்னி ராசிக்கும் சுக்கிரனிருக்கும் மீனராசிக்கும் இடையே இலக்னம் இல்லை. எனவே இன்னொரு ராசியைக் கூட்ட 2    26    00 விவாஹ ஸஹம். அதாவது விவாஹ ஸஹம் மிதுனத்தில் 26 பாகையில் உள்ளது.
   
இரண்டாவது உதாரண ஜாதகத்தில் ஜாதகர் பிறந்தது பகலில் . எனவே சுக்கிர ஸ்புடமான 1 ராசி 12 பாகையில் சனி ஸ்புடமான 0 ராசி 16 பாகையைக் கழிக்க

tableசுக்கிரனுக்கும் சனிக்கும் மத்தியில் லக்னம் இல்லாததால் இன்னொரு ராசியைச் சேர்க்க 4    3    00    கிடைக்கும். எனவே சிம்மத்தில் 3 பாகையில் விவாஹ ஸஹம் உள்ளது.

   
ஏழாம் பாவத்தைப் போலவே இந்த விவாஹ ஸஹமும் இல்லற வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. இன்னும் ஒரு வாசகர் கரு உருவாகும் ஆதான லக்னத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டிருந்தார். பிறந்த நேரம் தெரிந்து ஜாதகம் எழுதப்பட்டவருக்கே பத்து சோதிடர்கள் பதினோரு பலன்கள் சொல்லும் காலத்தில் ஆதான லக்னத்துக்கு அவசியம் ஏது? ஆதான லக்னம் கண்டுபிடிப்பதாகச் சொல்லி ஒன்பது மாதத்துக்கு முந்திய கிரக நிலைகளை வைத்து மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை. கைவசம் இருக்கும் பிறந்த ஜாதகத்தை வைத்தே முழுமையான பலன்களை அறிய முயற்சிப்பதே சோதிடரின் கடமையாகும்.


இக்கட்டுரையின் தொடர்ச்சி 17.01.2016ல் வெளிவரும்.

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 70 guests and no members online