வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டும் மூன்று குறிப்புக்கள் உள்ளன. லக்னத்தில் வியாழன் இருக்கும் போது ஏழில் செவ்வாய் இருப்பது, லக்னத்தில் சனி இருக்கும் போது ஐந்த, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் செவ்வாய் இருப்பது, தேய்பிறைச் சந்திரனுடன் சேர்ந்த சனி பன்னிரண்டாமிடத்தில் இருப்பது ஆகிய இம்மூன்று குறிப்புக்களே அவை. ஆனால் அனுபவத்தில் இந்த யோகங்கள் இல்லாதவர்களும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதை நாம் காண நேரிடுகின்றது. அப்படி ஒரு ஜாதகத்தை இந்த வாரம் பார்ப்போம்.



இந்த ஜாதகருக்கு இருபது வயதுக்கு மேல் மனநலம்குன்றிப் பெரிதும் அவதிப்பட்டார். கைகால்களில் விலங்கு பூ ட்டித்தான் இவரை குளிக்க அழைத்துச் செல்வார்கள். ஒரு ஆறு மாதங்களில் குணமாகிப் பின்னர் கொஞ்ச காலம் நல்ல மனநிலையில் வாழ்க்கை நடத்துவார். பின்னர் திரும்பவும் நோய் வந்து தாக்கும். பின்னர் மீண்டும் விலங்கால் பிணைத்து வைப்பார்கள். இதே கதை இவரது 38 வயது முடிந்த வரைக்கும் தொடர்ந்தது. கடைசியாக 12.1.1977ல் இவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இவரது ஜாதகத்தில் ஐந்துக்குடைய செவ்வாய் நான்கில் உள்ளது. ஒன்பதுக்குடைய வியாழன் எட்டில் உள்ளது. ஐந்தாம் பாவம், ஐந்தாம் பாவத்துக்கு அட்டமாதிபதியான புதனுக்கும், ஐந்தாம் பாவத்துக்கு பன்னிரண்டாமிடத்து அதிபதியான சுக்கிரனுக்கும் மத்தியில் உள்ளது. ஐந்தாம் பாவத்தின் நவாம்சம் துலாத்தில் சந்திரனோடு சேர்க்கை. ஆறாம் பாவத்தின் நவாம்சம் கடகத்தில் சுக்கிரனோடு சேர்க்கை. இரண்டாம் பாவாதிபதி சூர்யன் ஆறாமிடத்தில் இருக்கும் போது, ஆறாமிடத்ததிபதி வியாழன் எட்டாமிடத்தில் உள்ளது. அது இரண்டாம் பாவத்தை முழுமையாகப் பார்க்கின்றது. இந்தக் காரணங்களினால் புத்தியைக் குறிக்கும் ஐந்தாமிடமும், வாக்கு, குடும்பம் இவற்றைக் குறிக்கும் இரண்டாமிடமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக நோயைக் குறிக்கும் புள்ளி விருச்சிகத்தில் 8 பாகை 45 கலையில் உள்ளது. இது ஐந்தாம் பாவத்துக்கு வெகு சமீபத்தில் உள்ளது. சுக்கிரன் கட்டுண்டு இருத்தலைக் குறிக்கும், சர்ப்பத் திரேக்காணத்தில் இருக்கின்றது. எனவே 13 வயது முதல் 32 வயது வரை நடந்த சுக்கிர நைசர்க்கிக தசையில் இவர் கட்டுண்டு இருக்க நேர்ந்ததில் வியப்பில்லை. சந்திரன், சனி சேர்க்கை ஒன்பதாமிடத்தில் இருப்பதும் மனநலக் குறைவுக்கு ஒரு காரணமாக அமைகின்றது.
சுக்கிரதசை 30.12.1950 இரவு மணி 9.45க்கு ஆரம்பிக்கின்றது.

தசாநாதன் சுக்கிரன் ஜன்மலக்னத்துக்கு ஆறாமிடத்திலும், தசாப்ரவேச லக்னத்துக்கு ஐந்திலும் இருப்பதால் புத்தி சம்பந்தப்பட்ட நோய் வரக் காரணம் இருக்கின்றது. தேய்பிறைச் சந்திரன் லக்னத்திலிருந்து செவ்வாயால் பார்க்கப்படுவது, சுக்கிர தசை கெடுதலான பலன்களைச் செய்யும் என்பதைச் சொல்லும் ஒரு யோகம். தசாப்ரவேச லக்னத்துக்கு ஆறாமிடத்ததிபதி சனி வாக்கு ஸ்தானத்தில் இருந்து ஜன்ம காலச் சுக்கிரனையும் (விருச்சிகம்), ஜன்ம கால ஐந்தாமிடத்தையும் (விருச்சிகம்) மூன்றாம் பார்வையால் பார்ப்பது, சுக்கிரன் புத்திக்கு (ஐந்தாம் பாவம்) நாசத்தைத் தருவான் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஜன்மகால ஐந்தாமிடத்தின் ஆரூடாதிபதி புதன், தசாப்ரவேச லக்னத்துக்கு ஐந்திலும் (ஜன்மலக்னத்துக்கு ஆறிலும்) இருப்பது மனநோய் நிச்சயம் வரும் என்பதையும், தசாப்ரவேச காலச் சுக்கிரன் ஐந்தாமிடத்தின் ஆரூடமான கன்னிராசியின் 23 பாகை 03 கலைக்கு நான்கில் இருப்பது சுக்கிரதசை நடக்கும் போது ஜாதகர் மனநோயால் பாதிக்கப்படுவார் என்பதையும் நன்கு வலியுறுத்திச் சொல்கின்றன. துவாதசாம்சச் சக்கரங்களை ஆழமாகப் படித்தால் அதிலும் இதற்கான ஆதாரங்களை நன்கு காணலாம்
This Week’s Quote:
A woman who gives any advantage to a man may expect a lover but will sooner or later find a tyrant.
- Lord Byron
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
