நாம் ஆகஸ்ட் 19 தேதியில்  கட்டங்களும், கவலைகளும் (தொடர்ச்சி) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அதில் ஒரு ரிசப லக்ன ஜாதகம் கொடுத்திருந்தோம். ஏழுக்குடைய செவ்வாய் பன்னிரண்டில் சூரியனோடு நெருங்கிய சேர்க்கையில் இருந்தும், அந்த ஜாதகரின் இல்வாழ்க்கையில் எவ்விதப் பிரச்னையுமின்றி செம்மையாகக் கழிந்தது என்றும் குறிப்பிட்டிருந்தோம். இந்த வாரம் நாம் தரப்போகும் ஜாதகருக்கும் ஏழுக்குடையவன் பன்னிரண்டில்தான். ஆனால் இந்த ஜாதகர் மணம் முடித்த மூன்று வருடங்களுக்குள் அவரது மனைவி ஒரு அறுவைச் சிகிச்சையின் போது மரணமடைந்தார். இரண்டு ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சோதிட ஆர்வலர்களுக்கு நிறைய விச யங்கள் தெளிவாகும் வாய்ப்பு உள்ளது.

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

ஏழுக்குடைய சூர்யன் பன்னிரண்டாமிடத்தில் அதிசத்துருவான சனியின் வீட்டில் இருந்து, சந்திரனின் வீட்டிலுள்ள சனியால் பார்க்கப்படுகிறது. சனியும் தனக்கு அதிசத்ருவாக உள்ள சந்திரனின் வீட்டில் உள்ளது. சூர்யனுக்கு ஏழாம் பாவத்துக்கு நான்காமிடத்ததிபன் செவ்வாயின் சேர்க்கையும் கிடைத்துள்ளது. இரண்டாம்பாவாதிபதி வியாழன் விருச்சிகத்தில் உள்ளது. அந்த ராசிநாதன் அஸ்தமனமாக உள்ளபோது வியாழனின் நவாம்சபதியான சந்திரனும் பாவர் சேர்க்கை, பாவர் பார்வையுடன் ஆறாமிடத்தில் உள்ளது. இவையெல்லாம் ஏழாம் பாவத்துக்கு விரைவில் கெடுதல் வரும் என்று உணர்த்தக்கூடிய அம்சங்கள். களத்திரகாரகன் சுக்கிரனுக்கு எட்டாமிடத்தில் உள்ள சனியும், களத்திர மரணத்தை விரைவில் செய்யக்கூடியதாக உள்ளது.

இவருக்கு 32 வயதுக்கு முடியும் முன்னரே இவரது மனைவி இறந்துவிட்டார். நைசர்க்கிக சுக்கிர தசையின் கடைசிப் பகுதியில், சுக்கிரனுக்கு எட்டில் உள்ள சனி அல்லது சந்திர அந்தர்த்தசையில் இவருக்கு மனைவியின் இழப்பு ஏற்பட்டுள்ளது. (சனி, சந்திரன் இருவருமே பூரண பலத்துடன் இருக்கும்போது சுக்கிரனின் ஸ்புடத்தையும் , சனியின் ஸ்புடத்தையும் வைத்துப் பார்க்கும்போது சுக்கிரனுக்கு எட்டில் உள்ள இருவரில் சனியின் அந்தர்த்தசை ஏற்படவே அதிக வாய்ப்பு உள்ளது). ஒரே மாதிரியான அம்சங்கள் மேலோட்டமாகத் தெரிந்தாலும், நுட்பமான அலசலில் வெவ்வேறான பலன்களை நாம் காணக்கூடும் என்பதை வாசகர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தக் கட்டுரையைத் தந்தோம்.

 

This Week’s Quote:

Mere goodness can achieve little against the power of nature.

-  Georg Wilhelm Friedrich Hegel

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 213 guests and no members online