சில நாட்களாக ஊடகங்களில் சிறை, சிறைவாசம் என்ற சொற்கள் மட்டுமே உச்சரிக்கப்படுகின்றன. ஒருவர் சிறைப்படுவதற்குச் சோதிடரீதியான காரணங்கள் ஏதாவது இருக்குமா என்ற சிந்தனையில் நாம் வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தைப் புரட்டிப் பார்த்தபோது 23-வது அத்தியாயத்தின் 16வது சுலோகம் மட்டுமே கிடைத்தது. 

ஜன்மலக்னத்துக்கு 2, 5, 9, 12 ஆகிய இடங்களில் பாவக்கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி இவர்களிருந்தால் ஜாதகன் சிறைப்படுவான் என்று அந்தச் சுலோகம் கூறுகின்றது. அதுபோலவே சர்ப்பத் திரேஷ்காணம் என்று சொல்லப்படும் கடகத்தின் 2 மற்றும் 3-வது திரேக்காணங்கள், விருச்சிகத்தின் 1 மற்றும் 2வது திரேக்காணங்கள், மீனத்தின் 3வது திரேக்காணம் ஆகியவைகளில் ஏதாவது ஒன்று லக்னமாக வந்து, அந்த லக்னம் பாபர்களால்  பார்க்கப்பட்டால் ஜாதகன் சிறைப்படுவான் என்றும் சுலோகம் கூறுகின்றது.

2, 5, 9, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் பாவக்கிரகம் இருந்து அந்தக் கிரகத்தின் தசாபுக்தி நடக்கும் போது சிறைப்படும் வாய்ப்பு உண்டு. மேலே செல்லப்பட்ட சர்ப்பத்திரேக்காணங்களில் ஏதேனும் ஒன்று லக்னமாக வந்து, அந்த லக்னத்தைப் பாவக்கிரகம் ஏதாவது பார்க்குமாயின் லக்னத்தின் தசா, புக்தி அல்லது அந்தக் கிரகத்தின் தசா, புக்தி நடக்கும் போது சிறைப்படும் வாய்ப்பு உண்டு.

தசாபுக்திகள் என்பவற்றை ஆயுர்த்தாய கணிதம் செய்யப்பட்டபின்னர் ஏற்படுத்தும் மூலதசாபுக்திகள் என்றே பொருள் கொள்ள வேண்டும். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்து எல்லோரும் சொல்லும் விம்சோத்தரி தசா புக்திகள் அல்ல.

 

This Week’s Quote:

Don’t limit a child to your own learning for he was born in another time.

Tagore.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 182 guests and no members online