28.10.2018-ல் நாம் எழுதிய நீங்களே ஜாதகம் பார்க்கலாம் (தொடர்ச்சி) என்ற கட்டுரையின் விளக்கமாக இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். பன்னிரண்டாமிடத்திலிருந்து கடிகாரச் சுற்றுக்கு எதிர்த்திசையில் ஒரு ராசிக்கு 5 வருடமாகக் கணக்கிட்டுச் சென்றால் கிடைக்கும் ராசிகளைப் பொறுத்து நமது ஜாதகபலன் அமையும் என்பது அடிப்படைச் சித்தாந்தம். இன்று அதை ஒரு உதாரணம் மூலம் படித்துப் பார்க்கலாம்.

பன்னிரண்டு என்பதைப் பன்னிரண்டாவது ராசி எனப் பொருள் கொள்ளாமல் லக்னத்தில் உதயமாகும் பாகைக்கு முந்திய பாகை என்று எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் லக்னத்தில் உதயமாகும் பாகை கலைகளிலிருந்துதான் லக்னம் ஆரம்பிக்கின்றது என்பது மேலைநாட்டுச் சித்தாந்தம். எனவே சிம்மத்தில் 12 பாகை உதயமானால் 11 பாகையைப் பன்னிரண்டாவது பாவம் என்றழைப்பது அவர்களது மரபு. எனவே எந்த லக்னமாக இருந்தாலும், உதயமாகும் பாகைக்கு முந்திய பாகையைப் (அல்லது அதே பாகையை எடுத்துக்கொண்டாலும் சரி) பின்னோக்கி நகர்த்த வேண்டும் என்பது முதல் விதி. அடுத்து ஒரு ராசிக்கு 5 வருஷங்கள் எனக் கணக்கிடுவதால், ஒரு வருடத்திற்கு 6 பாகைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இது அடுத்த விதி. ஒரு ஜாதகரின் 19 வயது பலனை அறிய வேண்டுமென்றால் கடந்துவிட்ட 18 வருஷங்களுக்கான 18 * 6 = 108 பாகைகளை லக்ன பாகையிலிருந்து அல்லது அதற்கு முந்திய பாகையிலிருந்து கழித்துக் கிடைக்கும் ராசி பாகையே 19-வது வருஷத்துக்கான ஆரம்பப்புள்ளி என எடுத்துக்கொள்ளலாம்.

sample horoscope

உதாரணமாக மீன ராசியின் 14 பாகை 53 கலையில் ஒரு ஜாதகர் பிறந்திருக்கின்றார் என்றால் மீனத்தின் 14 பாகை 52 கலையைப் பன்னிரண்டு என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது 13 பாகை 53 கலையை எடுத்துக்கொள்ளலாம். நாம் ஒரு கலையைக் கழித்து எடுத்துக்கொள்கின்றோம். இப்பொழுது 19-வது வயது பலனைக் காண, 18*6= 108 பாகை அல்லது 3 ராசி 18 பாகையை லக்னஸ்புடமான 11 ராசி 14 பாகை 52 கலையில் கழிக்கக் கிடைப்பது 7 ராசி 26 பாகை 52 கலை ஆகும். அதாவது விருச்சிகத்தின் 26 பாகை 52 கலை, 19-வது வயதுக்கான ஆரம்பப்புள்ளி என எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஜாதகருக்குப் பத்தொன்பதாவது வயது பலனைக் காண்பதற்காக நாம் 3 ராசி 18 பாகையைக் கழித்து விருச்சிக ராசியின் 26 பாகை 52 கலையை அந்த வருஷத்துக்கான ஆரம்பப் புள்ளியாக எடுத்துக்கொண்டுள்ளோம். இப்போது நமது கவனத்துக்கு வரும் விஷயங்களை வரிசைப்படுத்துவோம்.

  • 19-வது வயதிற்கான லக்னப் புள்ளிக்கு வெகு சமீபத்தில் லக்னப்புள்ளியின் ஏழுக்குடைய சுக்கிரன் இருக்கின்றது.
  • ஜன்ம லக்னத்துக்கு ஏழுக்குடைய புதன் இந்த லக்னப் புள்ளிக்குப் பதினோராமிடத்துப் பாகை கலையில் உள்ளது.
  • லக்னப் புள்ளியின் துவாதசாம்சம் ஜன்ம லக்னத்துக்கு ஏழாமிடமான கன்னியில் அமைகின்றது.

இந்த விஷயங்கள் இந்த ஆண்டில் திருமணம் முடிவதற்கான காரணங்கள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. எனவே இதை உறுதிப்படுத்திக்கொள்ள 19-வது வருஷப் பிரவேச ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். 

sample horoscope

19-வது வருஷப்ரவேச லக்னாதிபதி சுக்கிரன் 19-வது வருஷலக்னப் புள்ளிக்கு ஏழாமிடத்ததிபதியாக வந்து லக்னப்புள்ளிக்குப் பத்தாமிடத்திலும், வருஷப்ரவேச லக்னத்துக்குப் பதினோராம் இடத்திலும் இருப்பது திருமணத்தை உறுதி செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

நாம் ராசிக் கட்டத்தை மட்டும் எடுத்துக்கொண்டோம். நவாம்ச, துவாதசாம்ச கட்டங்களை எடுத்துக்கொண்டு இன்னும் விரிவான முறையில் படித்துப் பார்க்கலாம். இப்போது இந்த ஜாதகரின் 24-வது வயதுக்கான ஆரம்பப்புள்ளியைத் தருகின்றோம். 24-வது வயதுக்கான வருஷப்ரவேச ஜாதகத்தையும் தருகின்றோம். அந்த ஜாதகரின் மரணத்துக்கான காரணத்தைச் சோதிட ஆர்வமுள்ள வாசகர்கள் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

11-14- 52 – 4 - 18-00 = 6 - 26 - 52 துலாம் ராசியின் 26 பாகை 52 பாகை 24-வது வருஷத்துக்கான லக்னப்புள்ளி.

sample horoscope

 

This Week’s Quote:

Progress is impossible without change, and those who cannot change their minds cannot change anything.

-  George Bernard Shaw

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 56 guests and no members online