02.10.2016 மற்றும் 09.10.16 தேதிகளில் பத்துப் பொருத்தங்களால் பாழாகும் மணவாழ்க்கை என்ற தலைப்பில், இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தோம். இரண்டாவது கட்டுரையில், ஒரு தம்பதியரின் ஜாதகங்களைக் கொடுத்திருந்தோம். பத்துப் பொருத்தங்களில் எட்டுப் பொருத்தங்கள் சரியாக இருந்தும், அந்தத் தம்பதியரின் மணவாழ்க்கை இடையில் சிதைந்து போனது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அதில் அதற்கான காரணங்களைப் ‘பின்னர் சமயம் வாய்க்கும்போது எழுதுவோம்’ எனவும் குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றி எழுதுகின்றோம்.

sample horoscope

sample horosope

  • மனைவியின் ஜன்ம லக்னம் மீனம். லக்னாதிபதி வியாழன். வியாழன் கணவரின் ஜாதகத்தில் விருச்சிகத்தில் இருந்து, செவ்வாயின் நான்காம் பார்வை மற்றும் சனியின் பத்தாம் பார்வையால் பார்க்கப்படுகிறது.
  • மனைவியின் திரேக்காண லக்னம் கடகம். கடகத்தின் அதிபதி சந்திரன். சந்திரன் கணவரின் ஜாதகத்தில் அஸ்தமனமாகி உள்ளது.
  • மனைவியின் ஆயுள் ஸ்தானம் துலாம். இத்துலாத்தில் கணவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் இருக்கிறது.
  • மனைவியின் ஜாதகத்தில் புண்ய சஹம் என்றழைக்கப்படும் புள்ளி கடகத்தில் 12 பாகையில் உள்ளது. இதன் அதிபதி சந்திரன் கணவரின் ஜாதகத்தில் அஸ்தமனமாகியுள்ளது. மேலும் இந்தப் புள்ளிக்கு இரண்டில் செவ்வாயும், எட்டில் சனியும் உள்ளன. இவை நான்கும், இந்தப் பெண் இந்த ஆணை மணம் புரியக் கூடாது என்பதற்கான வலுவான காரணங்களாகும். 

இனி கணவரின் ஜாதகத்தில் தாரதோசம் ஏற்படுவதற்கான காரணங்கள் இருக்கின்றனவா எனப் பார்க்கலாம். 

  • அட்டமாதிபதி வியாழன் ஏழில் பாவிகளின் பார்வையைப் பெற்றுள்ளது. 
  • இரண்டுக்குடைய புதன் பாபர்களுடனும், பாபர்களின் மத்தியிலும் உள்ளது.
  • நான்கு, பத்து ஆகிய இரண்டு கேந்திரங்களிலும் செவ்வாய், சனி இருக்கின்றன.
  • ஏழாம் பாவாதிபதி செவ்வாய், நவாம்சத்தில், கன்னியில், நவாம்ச லக்னத்துக்கு இரண்டில் உள்ளது. 
  • சனி பன்னிரண்டாம் பாவத்தையும், பன்னிரண்டாம் பாவாதிபதி செவ்வாயையும் பார்க்கின்றது. பன்னிரண்டாம் வீட்டுக்குச் சனியின் பார்வை கிடைப்பது இல்லற வாழ்வைக் குலைக்கும்.

இனி மனைவியின் ஜாதகத்தில் அற்பாயுளுக்கான காரணங்கள் உள்ளனவா எனப் பார்க்கலாம். 

  • லக்னாதிபதி மகரத்தில் வர்க்கோத்தமம். அந்த வீட்டுக்குடைய சனி லக்னத்துக்கு ஆறில் சத்ருவின் வீட்டில் உள்ளது.
  • சூர்யன் லக்னத்துக்கு எட்டில் பலஹீனமாகவும், சனியின் பார்வையோடும் உள்ளது.
  • சந்திர லக்னாதிபதி, சந்திர லக்னத்துக்கு எட்டில் இருக்கிறது.
  • லக்னத்தின் ஆரூடம், துலாத்தில் 18 பாகையில் உள்ளது. எட்டாம் பாவமும் துலாத்தில் 18 பாகையில்தான் உள்ளது. இது மிக நீண்ட, சில சமயங்களில் மிகக் குறைவான, ஆயுளைக் குறிக்கும்.
  • மரணத்தைக் குறிக்கும் புள்ளி தனுசில் 24 பாகையில் உள்ளது. லக்னாதிபதியே மரணத்தைக் குறிக்கும் கிரகமாக வந்து உபசய ஸ்தானத்தில் வர்க்கோத்தமமாக இருப்பது விரைவில் மரணத்தைக்கொண்டு வரும்.

விரிவான அலசலும், நுட்பமான பார்வையும் இல்லாமல், நட்சத்திரப் பொருத்தங்கள் மட்டுமே பார்த்துச் செய்யும் திருமணங்கள் இப்படி இடையில் முறிந்து போகக் கூடும். 

28.10.1949ல் பிறந்த இந்த ஜாதகி 25.12.72ல் காலமானார். அன்றைய கிரக நிலைகளும் தரப்படுகின்றன. சோதிட ஆர்வலர்கள் முயன்றால் அதிலும் சில விந்தைகளைக் காண்பார்கள். 

sample horosope

இவர் 25.12.1972ல் பகல் 12.00 மணியளவில் இறந்து போனார். அதற்குச் சிறிது நேரம் முந்தி அவர் விஷமருந்தியிருக்கின்றார். எனவே 11.15 மணிக்கான கட்டம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு விசயங்கள் எமக்கு மிக முக்கியமாகப்படுகின்றன. 

  1. ஜன்மலக்னாதிபதி குரு மரணப்புள்ளியின் வெகு அருகே இருப்பது.
  2. ஜன்மலக்னத்துக்கு ஐந்துக்குடைய சந்திரனும், எட்டுக்குடைய சுக்கிரனும் ஒருவருக்கொருவர் கேந்திரப்பார்வையில் இருப்பது. இது தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளத் தூண்டும் அமைப்பாகும்.

 இன்னமும் சில நுட்பமான விசயங்களைச் சோதிட ஆர்வலர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகின்றோம்

 

This Week’s Quote:

It is a mania shared by philosophers of all ages to deny what exists and to explain what does not exist.

-  Jean-Jacques Rousseau

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 213 guests and no members online