08.04.18ல் நாம் எழுதியிருந்த ராஜயோகப் பெண்மணி என்ற கட்டுரையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஜாதகத்திலுள்ள யோகங்களைப் பற்றி எழுதியிருந்தோம். இந்தக் கட்டுரையில் அவரது மரணம் சம்பவித்த அவரது 69-வது வயது வருசப்ரவேச ஜாதகத்தைத் தந்து, சில குறிப்புக்களையும் தருகின்றோம். அவரது 69-வது வயது 25.02.2016 அதிகாலை 1 மணி 7 நிமிடத்துக்குப் பிறக்கின்றது.




அவரது ஜன்மலக்னம் மிதுனம். மிதுனம் வருசப்ரவேச ஜாதகத்தில் எட்டாமிடமாக வருகின்றது. ஜன்ம லக்னத்தின் அட்டமாதிபதி சனி வருசப்ரவேச ஜாதகத்தில் உதயமாகும் விருச்சிக லக்னத்துக்கு, வெகு அருகே உள்ளது. லக்னத்துக்கு மூன்றுக்குடைய சனியும், பத்துக்குடைய சூர்யனும் ஒருவருக்கொருவர் கேந்திரப் பார்வையில் உள்ளனர். ( 1, 3, 8, 10 இவை ஆயுளைத் தீர்மானிக்கின்றன என்பது ஒரு சோதிடக் குறிப்பு) புண்ய ஸஹம் மேசத்தில் 24 பாகை, 42 கலையில் உள்ளது. அட்டமாதிபதி புதன் அப்புள்ளியோடு கேந்திர பார்வையில் உள்ளது. நோயைக் குறிக்கும் புள்ளி கும்பத்தில் 0 பாகை, 43 கலையில் உள்ளது. அதன் அதிபதி சனி லக்னத்தில் இருக்கின்றது.
நைசர்க்கிக தசை முறைப்படி அவருக்கு 51 வயது முதல் 70 வயது முடிய சூர்யதசை நடக்கும். சூர்யன் நவாம்சத்தில் மகரத்தில், ஜன்ம லக்னமான மிதுனத்துக்கு எட்டில். சூர்யனது த்வாதசாம்சபதி புதன் ஜன்ம ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில் உள்ளது. இந்தக் காரணங்களால் சூரியன் மரணத்தைக் கொண்டு வரலாம்.
வருச தசா முறைப்படி அவருக்கு 30.10.16 முதல் 16.12.16 முடிய புத தசை. புதன் அட்டமாதிபதியாய் வந்து, மூன்றில் இருந்து தசை நடத்துவதாலும், புத தசை ஆரம்பிக்கும்போது மிதுன லக்னமே உதயமாவதாலும் அன்று அமாவாசை நாளாக வந்து புதனும் அஸ்தமனமாகி இருப்பதாலும், புதனுக்கு மாரகம் செய்யும் சக்தி கூடுகின்றது. வருசப்ரவேச ஜாதகத்தில் மூன்றுக்கும், எட்டுக்கும் சம்பந்தம் ஏற்படுவதால் அவரது மரணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நமது அனுபவத்தில் மூன்றுக்கும் எட்டுக்கும் சம்பந்தமுள்ள ஜாதகரின் மரணம் பல சந்தேகங்களை எழுப்புவதைக் கவனித்திருக்கின்றோம்.
வருச ஜாதகத்தில் மரணத்தைக் குறிக்கும் மிருத்யுஸஹம் சிம்மத்தில் 29 பாகை 49 கலையில் உள்ளது. அதன் அதிபதி சூரியன் 5.12.2016ல் விருச்சிகத்தில் 19 பாகையில் லக்னத்துக்கு மிக அருகே இருப்பது சோதிடம் நம்பக் கூடிய ஒரு சாத்திரமே என்பதை உறுதிப்படுத்துகின்றது.
This Week’s Quote:
There are three kinds of lies: lies, damned lies, and statistics.
- Benjamin Disraeli
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
