இந்த ஜாதகர் எனது தந்தையாருக்குச் சோதிடம் கற்பித்த குரு. சோதிடக் கணக்குகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். மிகுந்த நினைவாற்றல் உள்ளவர். பல  இலக்க எண்களின் பெருக்கலையும், வகுத்தலையும் எளிதில் செய்யக் கூடியவர். இவரது வாக்கு அப்படியே பலிக்கும் என்பார் என் தந்தையார். கெட்டதாக ஏதும் சொல்லிவிடுவாரோ என்று அஞ்சியே இவரிடம் யாரும் ஜாதகம் பார்ப்பதில்லையாம். இவரும் கற்பித்தலையே தன் கடமையாக எண்ணிய அந்தணர். சோதிடத்தைத் தொழிலாகக் கொள்ளாதவர்.

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

வாக்கு ஸ்தானாதிபதி புதன் ஏழில் வக்ரபலத்துடன் இருப்பதும், புதனின் இராசிநாதன் சனி பன்னிரண்டில் வக்ரமாக இருப்பதும், இவரது கணிதத் திறமைக்குச் சான்றாக நிற்கின்றன. ஐந்தில் குரு பாவ மத்தியத்தில் இருந்து மூலத்ரிகோண வீட்டில் இருப்பது இவரது புத்திக் கூர்மைக்கும், அட்டமாதிபதியான குரு ஐந்தில் இருப்பது இவரது சோதிட ஞானத்துக்கும் காரணமாக அமைகின்றன. (எட்டுக்குடையவன் ஐந்தில் இருக்கும் அல்லது ஐந்துக்குடையவன் எட்டில் இருக்கும் ஜாதகர்களுக்குத் தற்கொலை எண்ணம் வருவதுண்டு. ஜனன, மரணம் பற்றிய சிந்தனைக்கும், தற்கொலை எண்ணத்துக்கும் இடையே மெல்லிய கோடுதான் உள்ளது.)

ஆனால் இங்கே இவரது ஜாதகம் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணம் வேறு. இவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்து எட்டும் கைக்குழந்தையாக இருக்கும் போதே இறந்து போயின. பிறகு ஒருவரைத் தத்து எடுத்து வளர்த்துள்ளார். அவரும் முப்பத்தைந்து வயதுக்குள் இறந்துவிட்டார். இவ்வளவு கடுமையான இழப்புகளுக்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? ஐந்தில் கேது, பாவத்தில் பாவகாரகன் என்று சொல்லிச் செல்பவர்கள் அரைகுறைச் சோதிடர்கள். அப்படிச் சொல்பவர்களுக்காகவே நாம் சர்ப்பதோஷம் என்ற கட்டுரையைக் கொடுத்துள்ளோம். இராசி, நவாம்சம், த்வாதசாம்சம், திரிம்சாம்சம் என்ற அனைத்து வர்க்கங்களையும் நன்கு கவனித்துப் பார்த்தால் இவருக்குப் பலமான தோஷம் இருப்பது தெரிய வரும். சோதிட ஆர்வலர்கள் முயன்று பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த வாரம் இந்த ஜாதகத்தைக் கொடுத்துள்ளோம்.

 

This Week’s Quote:

Charms strike the sight, but merit wins the soul.

-  Alexander Pope

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 80 guests and no members online