மணவாழ்க்கைக்காகக் காத்திருக்கும் பெண்கள், மணம் முடிந்தபின்னர் குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கும் கொடுமை இப்போது அதிகமாகிவிட்டது. செயற்கை முறையில் குழந்தையைத் தரும் ‘கருத்தரித்தல் மையங்கள்’ இப்போது விளம்பரங்களில் பெரும்பகுதியை ஆக்ரமித்து வருகின்றன. கருக்குழாயில் அடைப்பு, கருக்குழாயில் கட்டிகள் என்றெல்லாம் சொல்லிப் பெண்களை வேதனைக்குள்ளாக்கும் அவலங்களும் அரங்கேறுகின்றன. சோதிட சாத்திரத்தில் குழந்தைப்பேறின்மைக்குக் காரணமாக சொல்லப்படும் கிரக அமைப்புக்கள் யாவும், ஆண்களின் ஜாதகத்துக்குத்தான் சொல்லப்படுகின்றன. எனவே உண்மையிலேயே கவலைப்பட வேண்டியவர்கள் ஆண்கள்தான். ஆனால் நிஜம் வேறாக இருக்கிறது. எனவே இவ்விஷய ம் குறித்து பிருஹஜ் ஜாதகத்தில் உள்ள சில குறிப்புக்களைத் தருகின்றோம்.

தற்காலச் சந்திரன், ஒரு பெண்ணின் ஜன்ம ராசிக்கு 1, 2, 4, 5, 7, 8, 9, 12 ஆகிய இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் ரஜஸ் (மாதவிடாய்) கர்ப்பம் தரிப்பதற்குக் காரணமாகின்றது என்பது ஒரு குறிப்பு. உதாரணமாகச் சிம்ம ராசியில் பிறந்துள்ள பெண்ணுக்குச் சந்திரன் சிம்மம், கன்னி, விருச்சிகம் , தனுசு, கும்பம், மீனம் , மேச ம் , கடகம் ஆகிய ராசிகளைக் கடக்கும்போது உண்டாகும் ரஜஸ் (மாதவிடாய்) கர்ப்பம் உண்டாக்கும் சக்தி உள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும். பெண்ணின் ஜன்மராசிக்கு 3,6, 10, 11 ஆகிய இடங்களைச் சந்திரன் கடந்துபோகும் நாட்களில் உண்டாகும் ரஜஸ் குழந்தைப்பேற்றை அளிக்கும் சக்தியில்லாமல் வீணாகின்றது என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே தங்களது ஜன்மராசியை அறிந்திருக்கும் பெண்கள், இந்தக் குறிப்புக்கள் இரண்டையும் ஞாபகம் வைத்துக்கொண்டால் வீணாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலே சொன்ன நாட்களில் சந்திரன் செவ்வாயால் பார்க்கப்பட்டால், குழந்தைப்பேறு நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. இதேபோல ஒரு ஆணின் ஜன்மராசிக்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களைத் தற்காலச் சந்திரன் கடந்து போகும்போது, குருவால் பார்க்கப்பட்டால், புத்திரப்பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே மேற்சொன்ன குறிப்புக்களைக் கணவன், மனைவி இருவரும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், வீணான கவலைகளைத் தவிர்க்கலாம். குழந்தைப்பேறுக்குச் சாந்திமுகூர்த்தம் என்று அழைக்கப்படும் நிசேக லக்னம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கின்றது என்பதை வேறொரு கட்டுரையில் காண்போம்.

 

This Week’s Quote:

Curiosity is one of the most permanent and certain characteristics of a vigorous intellect.

-  Samuel Johnson

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 58 guests and no members online