சினிமா ஒரு சக்தி மிகுந்த ஊடகம். இங்கு வெற்றி பெற்றவர்களை விடத் தோல்வியைச் சந்தித்தவர்களே அதிகம். சமீபத்தில் ஒரு வாசகர் அவரது ஜாதகத்தை நமக்கு அனுப்பியிருந்தார். தான் சினிமாவில் ஒரு நடிகராக ஆகும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்த அவர் வாய்ப்புக்கள் கிடைக்குமா என்று நம்மைக் கேட்டிருந்தார். இதில் நம்மை ஆச்சரியப்படுத்திய விசயம் என்னவென்றால், அவர் 1958ம் ஆண்டு பிறந்தவர். அவருக்குப் பத்தாமிடத்தில் சுக்கிரன் இருந்து, அந்தச் சுக்கிரதசை 32 வயது முதல் 52 வயது வரை நடந்திருக்கின்றது. சுக்கிரன் தனது சொந்த வீடான ரிசபத்தில் உள்ளது. 60 வயதைத் தொடும் அவர் ஏன் எனது ஜாதகம் பொய்த்துப் போனது என்ற தொனியில் நம்மிடம் கேள்விகள் கேட்டிருந்தார். அவர் நமக்கு அனுமதி தந்தால் அவரது ஜாதகத்தை நமது இணையதளத்தில் விரிவாக அலசலாம்.

சினிமாத் தயாரிப்பில் முக்கியமான இடம் பெறுவது ‘பூஜை போடுதல் நிகழ்ச்சி’. இந்தப் பூஜையை நாம் கீழே கொடுக்கப் போகும் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட லக்னத்தில் செய்தால் நிச்சயமாக நட்டமடைவதற்கு வாய்ப்பில்லை. எனவே படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர், இவற்றைக் கடைப்பிடிக்கலாம் என்பது எமது அபிப்ராயம். இவற்றைக் கடைப்பிடித்தால் எந்தத் தடைகளும் இன்றி படப்பிடிப்பு முடிந்து படமும் வெளியாகும்.

  • பூஜை தொடங்கும் லக்னம் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மிதுனம் ஆகிய லக்னங்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.
  • அப்படி இந்த லக்னங்கள் அமையாத நேரத்தில், பூஜை லக்னத்தின் அதிபதியாவது மேற்சொன்ன இராசிகளில் ஒன்றில் இருந்தால் நல்லது. 
  • சந்திரன் பூஜை லக்னத்துக்கு 2, 4, 8, 12 ஆகிய இடங்களில் இருத்தல் கூடாது.
  • பூஜை லக்னத்தின் அதிபதி வக்கிரமாக இருத்தல் கூடாது.
  • சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் பூஜை லக்னத்துக்குக் கேந்திரங்களில் இருத்தல் கூடாது.
  • பூஜை தொடங்கும் நாளுக்கு முன்னரேயே படத்தின் பெயர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • படத்தின் பெயர் நீளமாக இருந்தால், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக லக்னங்களிலும், படத்தின் பெயர் நீளம் சற்றுக் குறைவாக இருந்தால், மிதுனம், கடகம், தனுசு, மகர லக்னங்களிலும், படத்தின் பெயர் மிகச் சிறியதாக இருந்தால் மேசம், ரிசபம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களிலும் பூஜை செய்யப்பட வேண்டும். இந்த லக்னங்கள் இம்மாதிரி அமையாதபட்சத்தில் துவாதசாம்ச லக்னமாவது இப்படி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பூஜை நடக்கும் நேரத்தில், சூரியனுடைய ஸ்புடத்தைச் சந்திரஸ்புடத்தில் கழித்து, அத்தோடு லக்ன ஸ்புடத்தைக் கூட்டினால் கிடைக்கும் புள்ளி லக்னத்துக்குக் கேந்திரங்களான 7, 10ல் இருத்தல் நலம். 4, 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருத்தலும் நலம்.
  • லக்னமும், நவாம்ச லக்னமும் சர இராசிகளில் அமைந்து லக்னாதிபதியும் சர ராசியில் இருந்தால், காலதாமதமின்றிப் படம் தயாரித்து முடிக்கப்படும். 

இவை பொதுவான விசயங்கள். படத்தயாரிப்பாளர், இயக்குனர் இவர்களின் ஜாதகப்படியும் பூஜை லக்னம் சரியாக அமையுமானால் படம் வெற்றி பெறுவதில் தடையிருக்காது.

இவற்றைப் பரிசோதித்துப் பார்க்க நினைக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நம்மிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சினிமாக் கலைஞர்களுக்கு நமது சேவை இலவசமாகக் கிடைக்காது.

 

This Week’s Quote:

The only way to get rid of my fears is to make films about them.

-  Alfred Hitchcock

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 84 guests and no members online