Right place to learn Astrology
வாசகர்களுக்கு நமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் ஒரு புதிய விஷயத்தையும் பகிர்ந்து கொள்கின்றோம். கி.பி.9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகச் சோதிடர் அபு மாஷார் (ABUMASHAR) அரபி மொழியில் எழுதியுள்ள சோதிட நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. அந்நூலில் நமது கவனத்தை ஈர்த்த ஒரு விஷயத்தை இங்கே தருகின்றோம்.
வாக்கியப் பஞ்சாங்கப்படி வரும் 19.03.2020 வியாழக்கிழமை அதிகாலை 5.15 மணிக்குச் செவ்வாயும், குருவும், சனியும் தனுசு ராசியில் உத்ராடம் 1-ம் பாதத்திலும், சந்திரன் மகர ராசியில் உத்ராடம் 2-ம் பாதத்திலும் உள்ளன. எனவே 19.03.2020 அதிகாலை சூர்யோதயத்துக்கு முந்தி நாம் வானத்தைப் பார்த்தால், அடிவானத்தில் செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரகங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தோன்ற வேண்டும். இந்த மூன்று கிரகங்களுக்கும் கொஞ்சம் கீழே சந்திரன் தெரிய வேண்டும்.
ஜனவரி 2020 கடைசி வாரத்தில் நிறைய நண்பர்களிடமிருந்து எமக்குக் கேள்விகள் வந்தன. ஐயா சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரியிலா அல்லது டிசம்பரிலா? என்று. 24.01.2020-ல் சில தொலைக்காட்சிகளில் சனிப்பெயர்ச்சிப் பலன்கள் என்று சோதிடர்கள் சிலர் கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு சேனலில் டிசம்பரில்தான் சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு தேவஸ்தானமே சொல்லிவிட்டது என்று சோதிடர் ஒருவர் முழங்கிக் கொண்டிருந்தார். பாவம் பொதுமக்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? சிலர் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்க இன்னொரு பெருங்கூட்டம் டிசம்பருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
நாம் இதுவரை 171 கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளோம். கட்டுரைக்கான தயாரிப்பு வேலைகள், தட்டச்சு செய்வது, 400 மைல்களுக்கு அப்பால் உள்ள Administrator-க்கு அனுப்புவது, பிழைகள் நீக்குவது போன்ற வேலைகளுக்காக நாம் செலவிடும் காலத்தைக் கணக்கிட்டால், இந்தக் கட்டுரைகளுக்காக 730 நாட்கள் அதாவது முழுமையாக இரண்டு வருடங்கள் செலவழித்திருக்கின்றோம். மற்றச் சோதிட வலைத்தளங்களைப் போல் அல்லாமல் நிஜமான சோதிடத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.
வருசப்ரவேச ஜாகதம் கணிப்பது எப்படி என்ற கேள்விகள் நமது மின்னஞ்சலுக்கு அடிக்கடி வருகின்றன. சிலர் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளை எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டிருக்கின்றார்கள். ஜன்ம நட்சத்திரத்துக்கும், வருசப்ரவேச ஜாதகக் கணிப்புக்கும் சம்பந்தமே இல்லை. பிறந்த நாளை நட்சத்திரப்படியும், இறந்த நாளை திதிப்படியும் ஏன் எடுத்துக்கொள்கின்றோம் என்ற கேள்வியைக் கேட்பவர்கள் யாருமில்லை. நாம் அடிக்கடி எழுதுவதுபோல் ஞானத்தைத் தேடும் கேள்விகளுக்கு இப்பொழுது இந்தியாவில் பஞ்சம்தான்.
ஒரு ராசியை நவாம்சம், த்வாதசாம்சம், திரேக்காணம் என்று பலவகையாகப் பிரித்திருப்பதைப் போலத் திரிம்சாம்சம் என்னும் ஒரு பிரிவைச் செய்திருக்கின்றார்கள். அதாவது ராசியின் 30 பாகைகளைச் சூரியன், சந்திரன் தவிர்த்த ஏனைய ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள். ஒற்றை ராசியின் முதல் 5 பாகைகளைச் செவ்வாய்க்கும், அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள். இரட்டை இராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதல் 5 பாகைகளைச் சுக்கிரனுக்கும், அடுத்த 7 பாகைகளைப் புதனுக்கும், அடுத்த 8 பாகைகளை வியாழனுக்கும் , அடுத்த 5 பாகைகளைச் சனிக்கும், எஞ்சியுள்ள 5 பாகைகளைச் செவ்வாய்க்கும் பிரித்துக் கொடுத்துள்ளார்கள்.
28.10.2018-ல் நாம் எழுதிய நீங்களே ஜாதகம் பார்க்கலாம் (தொடர்ச்சி) என்ற கட்டுரையின் விளக்கமாக இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். பன்னிரண்டாமிடத்திலிருந்து கடிகாரச் சுற்றுக்கு எதிர்த்திசையில் ஒரு ராசிக்கு 5 வருடமாகக் கணக்கிட்டுச் சென்றால் கிடைக்கும் ராசிகளைப் பொறுத்து நமது ஜாதகபலன் அமையும் என்பது அடிப்படைச் சித்தாந்தம். இன்று அதை ஒரு உதாரணம் மூலம் படித்துப் பார்க்கலாம்.
ஒரு வாசகர் தனது ஜாதகத்துக்கு வருஷப்ரவேச ஜாதகம் கணித்துப் பலன் தெரிந்து கொள்வதாகவும், இது புதிய விஷயங்களைத் தருவதாகவும் தெரிவித்துக் கொண்டு, அவரது ஜாதகத்தையும், வருசப்ரவேச ஜாதகத்தையும் தந்துள்ளார். அவரவர் ஜாதகத்தை, அவரவர் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே, எமது இவ்வலைத்தளத்தின் முதன்மை நோக்கம். சரியான நேரம் , நாள் இவற்றைத் தெரியாமல் வருசப்ரவேச ஜாதகம் கணிக்க முடியாதென்பதால் ஒரு பழைய சோதிட நூலில் கூறப்பட்டுள்ள ஒரு எளிய முறையை இங்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
கஷ்டங்கள் வரும்போது மட்டுமே சோதிடர்களை அணுகி ஜாதகம் பார்க்கும் வழக்கம் நமது மக்களிடையே இருக்கின்றது. அல்லது திருமணப் பொருத்தம் பார்க்கவோ, சிவில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் போதோ, ஜாதகம் பார்க்கின்றார்கள். மற்றபடி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டு இருக்கும்வரை யாரும் ஜாதகம் பார்ப்பதில்லை. கோயில்களில் அர்ச்சனை செய்வதற்காக மட்டுமே, தங்களது ராசி நட்சத்திரத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களும் இங்கே இருக்கின்றார்கள். பிரச்னைகள் வரும்போது கூட அவை சனி அல்லது குருப் பெயர்ச்சியால் மட்டுமே வருகின்றன, ஏழரைச்சனி முடிந்துவிட்டால் அல்லது குரு ஐந்து, ஒன்பது இடங்களுக்கு வந்துவிட்டால் அவை நீங்கிவிடும் என்றுதான் நினைக்கின்றார்கள். சோதிடர்களிடம் நண்பர்களாகப் பழகுபவர்கள் அல்லது அடிக்கடி ஜாதகம் பார்ப்பவர்கள் பாதகஸ்தானம், மறைவுஸ்தானம் , கேந்திராதிபத்ய தோஷம் என்று சில சொற்களைக் கூடுதலாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். இதற்கு மேலும் நிறைய விசயங்கள் இருக்கின்றன என்ற சிந்தனையே இங்கு இல்லை.
நமக்கு வரும் கேள்விகள் பயத்தையும், குழப்பத்தையும் சுமந்து வருகின்றன என்று நாம் அடிக்கடி எழுதுகின்றோம். தனது மகனுக்கு எட்டில் ராகு இருப்பதால் தமக்குப் பயமாக இருக்கிறது என்று ஒருவர் எழுதியுள்ளார். நாம் பரிகாரம் சொல்வதை வன்மையாகக் கண்டித்து வருகின்றோம் என்பதைத் தெரியாமலேயே, ஒருவர் எம்மிடம் பரிகாரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்வதென்றே எமக்குத் தெரியவில்லை.