கஷ்டங்கள் வரும்போது மட்டுமே சோதிடர்களை அணுகி ஜாதகம் பார்க்கும் வழக்கம் நமது மக்களிடையே இருக்கின்றது. அல்லது திருமணப் பொருத்தம் பார்க்கவோ, சிவில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் போதோ, ஜாதகம் பார்க்கின்றார்கள். மற்றபடி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டு இருக்கும்வரை யாரும் ஜாதகம் பார்ப்பதில்லை. கோயில்களில் அர்ச்சனை செய்வதற்காக மட்டுமே, தங்களது ராசி நட்சத்திரத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களும் இங்கே இருக்கின்றார்கள். பிரச்னைகள் வரும்போது கூட அவை சனி அல்லது குருப் பெயர்ச்சியால் மட்டுமே வருகின்றன, ஏழரைச்சனி முடிந்துவிட்டால் அல்லது குரு ஐந்து, ஒன்பது இடங்களுக்கு வந்துவிட்டால் அவை நீங்கிவிடும் என்றுதான் நினைக்கின்றார்கள். சோதிடர்களிடம் நண்பர்களாகப் பழகுபவர்கள் அல்லது அடிக்கடி ஜாதகம் பார்ப்பவர்கள் பாதகஸ்தானம், மறைவுஸ்தானம் , கேந்திராதிபத்ய தோஷம் என்று சில சொற்களைக் கூடுதலாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். இதற்கு மேலும் நிறைய விசயங்கள் இருக்கின்றன என்ற சிந்தனையே இங்கு இல்லை.

எனவே தான் நமது மக்களின் சோதிட அறிவு மிக மிகச் சிறிய வட்டத்துக்குள் குறுகிக் கிடக்கின்றது. ஆறு, எட்டு, பன்னிரண்டு மறைவு ஸ்தானங்கள்; இரண்டு, ஏழு மாரக ஸ்தானங்கள் என்பதைத் தவிர வேறு விச யங்கள் அவர்கள் கண்களில் படுவதில்லை. ஐந்து, ஒன்பது, பத்து, பதினொன்று இவை மிக மிக நன்மைகளைத் தரும் இடங்கள் என்பதும் அவர்களது அசைக்கமுடியாத கருத்தாகிப் போய்விட்டது.

ஆனால் நாம் அப்படி இல்லை. ஒரு சம்பவம் நிகழும்போது அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கக் கூடும் என்று நம்புகின்றோம். அதனால்தான் மீண்டும் மீண்டும் நடந்து முடிந்த சம்பவங்களுக்கான பல்வேறு காரணங்களை ஆராய்ந்து பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கும்போது நமக்குச் சில வியப்பான விச யங்கள் தெரிய வந்தன. அதில் ஒன்றை இங்கு வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம். இங்கே பன்னிரண்டு ஜாதகக் கட்டங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. பிறந்த தேதியும், இறந்த தேதியும் கட்டத்துக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. பிறந்த லக்னமும், அந்த லக்னத்தின் அதிபதி அந்த ஜாதகர் இறந்த தேதியில் எந்த ராசியில் உள்ளது என்பதையும் கொடுத்துள்ளோம். முதல் ஜாதகர் கும்ப லக்னத்தில் பிறந்தவர் என்பதும், அவர் இறந்தபோது சனி கும்பத்தில் இருந்தது என்பதும் முதல் கட்டம் சொல்லும் விசயம். இரண்டாவது ஜாதகர் கன்னியா லக்னத்தில் பிறந்தவர் என்பதும், அவர் இறந்த நாளில் லக்னாதிபதி புதன் துலாத்தில் இருந்தது என்பதும் இரண்டாவது கட்டம் சொல்லும் விச யம். இப்படியே அனைத்துக் கட்டங்களையும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

முதல் கட்டத்தில் இறந்த தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால் அந்த ஜாதகர் 15.05.1965-க்குமேல் 15.06.1965-க்குள் (ஆனி மாதம்) இறந்ததாகக் குறிப்பு உள்ளது. இந்த ஒரு மாத இடைவெளியில் சனி கும்பத்தில் 22 பாகையிலிருந்து 23 பாகைக்கு வந்துள்ளது.

இப்போது விச யத்துக்கு வருவோம். கோசார நிலையில் லக்னாதிபதி லக்னத்தில் இருக்கும்போது முதல் ஜாதகரும், லக்னாதிபதி ஐந்தாமிடத்தில் இருக்கும்போது ஐந்தாவது ஜாதகரும், லக்னாதிபதி ஒன்பதில் இருக்கும்போது ஒன்பதாவது ஜாதகரும், பத்தில் இருக்கும்போது பத்தாவது ஜாதகரும் மரணமடைந்திருக்கின்றார்கள். எனவே லக்னாதிபதி கோசார ரீதியாக எந்த இடத்துக்கு வந்தாலும், மரணம் சம்பவிக்கின்றது என்பது அசைக்க முடியாத உண்மையாக இங்கே நிரூபணம் ஆகின்றது. ராசி மண்டலத்தில் கிரகங்கள் நிலையாக இருப்பதில்லை. ஜாதகம் என்பது பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலை. அதை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்ல முடியாது என்பதும் தொடர்ந்து அவை இடம் பெயர்ந்து செல்லும்போது ஜாதகத்தில் சுபக்கிரகமாக இருப்பது அசுபக் கிரகமாக மாறும் என்பதும், அசுபக் கிரகம் சுபக்கிரகமாக மாறும் என்பதுமே எமது கொள்கை. இப்படித்தான் தசாபுக்திகளின் பலனும் சொல்லப்பட வேண்டும். தசாப்ரவேச காலத்திலும் ஒரு கிரகம் நல்ல இடத்தில் இருக்க வேண்டுமென்பது மிக அழுத்தமாகச் சோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே ஒருவர் ஜாதக பலனை அறிய வேண்டுமென்றால் சோதிடரை அணுகுவதைவிடத் தாமே அதைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்வதே மேலானது. ஏனெனில் தொழில்முறைச் சோதிடர்கள் பழைய சித்தாந்தங்களை விட்டு விலகுவதில்லை. வாசகர்கள் நம்ப முடியாத ஒரு விச யத்தை இங்குக் குறிப்பிட விரும்புகின்றோம். எமது ஜாதகத்தைப் பற்றி நாம் என்றுமே எமது தந்தையாரிடம் விளக்கம் கேட்டதே இல்லை. கேட்டிருந்தாலும் அவர் சொல்லியிருக்கமாட்டார். ‘நீயே படித்துப் பார்த்துக்கொள்’ என்றுதான் சொல்லியிருப்பார். எமது சகோதர, சகோதரிகளின் ஜாதகம் பற்றி நாங்கள் விரிவாக அலசிப் பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒருநாள்கூட அவர் எமது ஜாதகம் பற்றிப் பேசியதில்லை.

வேறு எந்தச் சாத்திரத்தையும்விடச் சோதிடச் சாத்திரத்தைக் கற்றுக் கொள்வது எளிது. கணிதப் பகுதி கடினமானதுதான். ஆனால் நமது ஜாதகத்தை நாமே பார்க்கும்போது கிடைக்கும் விச யங்கள் அபூர்வமானவை. வேறு யாரையும் விடத் தமக்குத் தாமே குருவாகும் அபூர்வ நிகழ்வு சோதிட சாத்திரத்தில் மட்டுமே நடக்க முடியும். எமது வாசகர்கள் தாங்களே முயன்று கற்றுச் சோதிட விற்பன்னர்களாக மாறவேண்டும் என்பதே எமது ஆசை.

 

This Week’s Quote:

Any man can make mistakes, but only an idiot persists in his error.

-  Marcus Tullius Cicero

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 101 guests and no members online