நாம் இதுவரை 171 கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளோம். கட்டுரைக்கான தயாரிப்பு வேலைகள், தட்டச்சு செய்வது, 400 மைல்களுக்கு அப்பால் உள்ள Administrator-க்கு அனுப்புவது, பிழைகள் நீக்குவது போன்ற வேலைகளுக்காக நாம் செலவிடும் காலத்தைக் கணக்கிட்டால், இந்தக் கட்டுரைகளுக்காக 730 நாட்கள் அதாவது முழுமையாக இரண்டு வருடங்கள் செலவழித்திருக்கின்றோம். மற்றச் சோதிட வலைத்தளங்களைப் போல் அல்லாமல் நிஜமான சோதிடத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.

ஆனால் தினசரி நமது வலைத்தளத்துக்கு வரும் புதிய வாசகர்களின் எண்ணிக்கை சுமாராக 100 ஆகவும், திரும்பத் திரும்ப வரும் வாசகர்களின் எண்ணிக்கை 50 ஆகவுமே இருக்கின்றன. இது எமது உழைப்புக்குக் கிடைக்கும் சரியான பலன் அல்ல. ஓரளவுக்கு எல்லா விஷயங்களையும் சொல்லியிருப்பதாகவே நாம் எண்ணுகின்றோம். இனியும் நாம் படிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று நாம் கருதுவதாலும், எமது சொந்தப் பணிகளுக்காக நாம் அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதாலும், நாம் சிறிது காலம் விடுமுறை எடுத்துக் கொள்வதாகத் தீர்மானித்துள்ளோம்.

சோதிடத்தில் ஆர்வமுள்ள வாசகர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு சமூகவலைத்தளங்கள் மூலம் இவ்வலைத்தளத்தைப் பிரபலப்படுத்தித் தினசரி 500 வாசகர்களாவது வரும் நிலை வந்தால், அப்போது நாம் புதிய கட்டுரைகள் எழுதி வெளியிடுவதைப் பற்றி யோசிப்போம். அதுவரை நாம் விடுமுறை எடுத்துக்கொள்வதாக அறிவிக்கின்றோம்.

 

This Week’s Quote:

I do not know how to teach philosophy without becoming a disturber of established religion.

-  Baruch Spinoza

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 97 guests and no members online