‘பத்துப் பொருத்தங்களும் பார்த்துத்தான் செய்தோம். ஆனாலும் இப்படியாகிவிட்டது’ என்றும், ‘ஜாதகம் பார்த்துத்தான் செய்தோம், ஆனாலும் தலைவிதி இப்படித்தான் இருந்திருக்கின்றது’ என்றும், விவாகரத்துக்குப் பின்னர் பெண்களின் பெற்றோர் நொந்து கொள்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது. பெருகிவரும் விவாகரத்துக்களுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஜாதகப்படி என்ன காரணங்கள் உள்ளன என்று யாரும் சிந்திப்பதில்லை. உதாரண ஜாதகங்களோடு இந்த வாரம் விவாகரத்து பற்றி பார்க்கலாம்.




ஆணின் ஜாதகத்தில் 2க்குடைய சனிக்கும், இரண்டாமிடத்துக்கும், குருவின் பார்வை, பெண்ணின் ஜாதகத்தில் 2க்குடைய செவ்வாய் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று இரண்டைப்பார்ப்பது, லக்னத்துக்குக் குருவின் விசேசமான பார்வை என்று நல்ல குடும்ப வாழ்க்கைக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மணமான ஏழாவது வருடத்தில் பிரிவு ஏற்பட்டதற்கான காரணங்களைக் கேட்டால் ‘நாம் என்ன கடவுளா? தேவ ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்கு? கடவுளின் சித்தம் வேறு மாதிரி இருந்திருக்கின்றது’ என்று இந்த ஜாதகங்களைச் சேர்த்து வைத்த சோதிடர் சொல்லக்கூடும். ஆனால் இந்த ஜாதகங்களைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பெருமளவு சோதிட ஞானம் தேவையில்லை என்பது நமது கருத்து.
ஆணின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தனுசு லக்னம் என்பதையும் அது ஆணின் ஜாதகம் என்பதையும் மறந்துவிட்டுப் பெண்ணின் லக்னமான மீனத்தை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு பாருங்கள். லக்னத்தில் சனி, ராகு. ஏழில் குரு, செவ்வாய். ஆறில் சந்திரன். எட்டில் சூரியன், புதன். பத்தில் சுக்கிரன்.
இதேபோல் பெண்ணின் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளை ஆணின் ஜன்ம லக்னமான தனுசுக்குப் பொருத்திப் பாருங்கள். இரண்டில் செவ்வாய் ராகு. இரண்டுக்குடைய சனி ஆறில். லக்னாதிபதி குரு பன்னிரண்டில். புத, சூரிய, சுக்கிர சேர்க்கை ஒன்பதில். பதினொன்றில் அட்டமாதிபதி சந்திரன்.
இப்படிப் பார்க்கும்போது கெட்ட அம்சங்களை எல்லாம் ஒரு பக்கமும், நல்ல அம்சங்களையெல்லாம் ஒரு பக்கமும் வைத்துப் பார்த்தால், கெட்ட அம்சங்கள் உள்ள தட்டுத்தான் கீழே இழுப்பதைக் கவனிக்க முடியும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு நான்கில் சனி, பதினொன்றில் இரண்டு கிரகங்கள் ஆகியவை இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும்போது, பெண்ணின் ஜாதகத்தில் ஏழுக்குடையவன் ஆறில் அஸ்தமனமாகி இருப்பது, ஆறு, ஏழு, எட்டுக்குடையவர்களின் நெருங்கிய சேர்க்கை, இரண்டுக்குடைய செவ்வாய் நவாம்சத்தில் மிதுனத்திலும், (லக்னத்துக்கு நான்காமிடம்) துவாதசாம்சத்தில் சிம்மத்திலும், (லக்னத்துக்கு ஆறாமிடம்) இருப்பது ஆகியவை குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களைக் காண்பிக்கின்றன.
நமது ராசிச் சக்கரதசை முறைப்படி ஆணுக்கு முதலில் தனுசு, குரு தசை 1 வருடம் 9 மாதம், 20 நாள். பின்னர் விருச்சிகச் செவ்வாய் 7, துலாச் சுக்கிரன் 16, கன்யா புதன் 9, சிம்மச் சூரியன் 5 என்று 38 வருட ம், 9 மாதம், 29 நாளுக்குப் பின்னர் கடகச் சந்திரன் தசை. பெண்ணுக்கு முதலில் மீன குரு 6 வருட ம் 0 மாதம், 4 நாட்கள். பின்னர் கும்பச் சனி 4, மகரச் சனி 4, தனுசு குரு 10, விருச்சிக செவ்வாய் 7, என்று 3 வருட ம், 0 மாதம், 4 நாட்களுக்குப் பின்னர் துலாச் சுக்கிரதசை ஆணுக்கும், பெண்ணுக்கும் லக்னத்துக்கு எட்டாமிட ராசி தசை. பெண்ணின் துலாச்சுக்கிர தசையிலும், ஆணின் கடகச் சந்திர தசையிலும் விவாகரத்து கிடைத்து இருவரும் பிரிந்து போனார்கள்.
எத்தனையோ அம்சங்களை நுட்பமாகக் கவனித்துச் சேர்க்க வேண்டிய ஜாதகங்களை வெறும் நட்சத்திரப் பொருத்தம் பார்த்துச் சேர்த்துப் பின்னர் வீண் கவலைகளுக்கு ஆளாகும் அவலம் இனியும் தொடர வேண்டாம் என்பதே எமது ஆசை. எமது சோதிடக் குறிப்புக்களைப் படித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும் தேர்ந்த சோதிடரானால் மட்டுமே எமக்கு மகிழ்ச்சி.
This Week’s Quote:
Order and simplification are the first steps toward the mastery of a subject.
- Thomas Mann
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
