பொதுவாகவே அனைவருக்கும் தங்களது நட்சத்திரத்துக்கும், ராசிக்கும் உள்ள பலன்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதைத் தெரிந்துகொள்ள அவர்கள் சோதிட நூல்களையோ, கற்றறிந்த சோதிடர்களையோ தேடிப் போவதில்லை. ராசிகளின் பெயரை ஒட்டிய குணங்களைக் கற்பித்துக்கொண்டு அதிலேயே திருப்தியடைந்து கொள்கின்றார்;கள். சிம்மராசியில் பிறந்தால் எதிரிகளைச் செயிக்கும் தீரனென்றும், கன்னிராசியில் பிறந்தால் பெண்களை வசீகரிப்பவன் என்றும், துலா ராசியில் பிறந்தால் துலாக்கோல் போல நீதிமான் என்றும் கற்பித்துக் கொண்டு கற்பனையிலேயே வாழ்கின்றார்கள். ஆனால் அனுபவத்தில் வேறுவிதமாக இருக்கின்றது. வராகமிரரின் பிருஹஜ் ஜாதகத்தில் அவர் பன்னிரண்டு ராசிகளிலும் சந்திரன் நிற்கும் போது பிறந்தவர்களைப் பற்றிய சித்திரங்களை எப்படித் தருகின்றார் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
துலா ராசியில் பிறந்தவர்
- தேவர்கள், பிராம்மணர்கள், சாதுக்கள் இவர்களைப் பூஜிப்பதில் விருப்பமுள்ளவர்
- நல்லவை எவை, கெட்டவை எவை என்பதைப் பகுத்தறியும் சக்தியுள்ளவர்
- அகம், புறம் இரண்டையும் சுத்தமாக வைத்திருப்பவர்
- பெண்களுக்கு அடங்கியவர்
- உயரமானவர்
- நீண்டு உயர்ந்த நாசியையுடையவர்
- இளைத்ததும் பலமற்றதுமான சரீரத்தையுடையவர்
- வெளிநாடுகளில் சஞ்சரிப்பதில் விருப்பமுள்ளவர்
- செல்வந்தர்
- ஏதாவது ஒரு அங்கத்தில் குறையுள்ளவர்
- நல்ல வியாபாரி
- இரண்டு பெயர்களையுடையவர். (இரண்டாவது பெயர் ஒரு தெய்வத்தின் பெயராக இருக்கும்)
- ஏதாவது ஒரு நோயால் தொடர்ந்து துன்பப்படுபவர்
- உறவினர்களுக்கு உதவுபவர்
- அவ்வாறு உதவி செய்த உறவினர்களால் வெறுக்கப்படுபவர், மதிக்கப்படாதவர் அல்லது விலக்கப்படுபவர்
விருச்சிக ராசியில் பிறந்தவர்
- அகண்ட கண்கள், மார்பு இவைகளையுடையவர்
- வட்டமாக இருக்கின்ற முழங்கால், தொடை, கணுக்கால் இவைகளையுடையவர்
- தந்தை, குரு இவர்களால் விடுபட்டவர். (தந்தையோ, நல்ல விஷயங்களை உபதேசிக்கும் பெரியோர்களோ இவரது பால்ய வயதில் இருக்கமாட்டார்கள்)
- இளமையில் நோயுடையவர்
- ராஜகுடும்பத்தினரால் கௌரவிக்கப்படுபவர்
- பொன்னிறமானவர்
- குரூரமான காரியங்களைச் செய்பவர்
- மீன், வஜ்ராயுதம், பறவை போன்ற ரேகைகளை உடையவர்
- இரகசியமாகப் பாவச் செயல்களைச் செய்பவர்
தனுசு ராசியில் பிறந்தவர்
- நீண்ட முகம், கழுத்து இவைகளையுடையவர்
- தந்தையால் நல்ல செல்வஞ்சேர்க்கப்பட்டு அதனைப் பெறுபவர்
- ஈகைக் குணமுடையவர்
- கவிஞராக இருப்பவர்
- பலமுள்ளவர்
- சிறந்த பேச்சாளர்
- அளவிற்பெரிய பல், காது, உதடு, மூக்கு இவைகளையுடையவர்
- எந்தக் காரியத்தையும் செய்யும் முயற்சியுடையவர்
- சித்திரமெழுதுபவர் அல்லது சிற்பியாக இருப்பவர்
- கூனலான தோள்பட்டையையுடையவர்
- விகாரமான நகங்களையுடையவர்
- உருண்டு திரண்ட புஜங்களையுடையவர்
- சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு காரியஞ் செய்கின்ற புத்தியோடு இருப்பவர்
- நல்ல வார்த்தைகளுக்காக மட்டுமே வசப்படுபவர்
- அதிகாரம் அல்லது பலாத்காரத்துக்கு அடங்க மறுப்பவர்
மகர ராசியில் பிறந்தவர்
- மனைவி, மக்களை எப்பொழுதுமே சந்தோஷத்துடன் வைத்திருப்பவர்
- தர்மத்தின் மீது பற்றில்லாமலேயே தர்மவான் போல வேடமிடுபவர்
- இடுப்பிற்குக் கீழே இளைத்தவர்
- அழகிய கண்களையுடையவர்
- இளைத்த பிருஷ்ட பாகங்களையுடையவர்
- சொல்லப்படும் விஷயங்களைக் கேட்டவுடனேயே மனத்தில் நிறுத்தும் சக்தியுள்ளவர்
- ஐஸ்வரியம் மிக்கவர்
- சோம்பல்தனம் உள்ளவர்
- குளிர் பொறுக்காதவர்
- அதிகமான பயணங்கள் மேற்கொள்பவர்
- தன்னைவிட வயதான பெண்கள் மீது பிரியம் காட்டுபவர்
- வெட்கமற்றவர்
- தயாளகுணமற்றவர்
கும்ப ராசியில் பிறந்தவர்
- ஒட்டகத்தின் கழுத்தைப் போன்று உயரமான கழுத்தையுடையவர்
- நரம்புகள் புடைத்துத் தெரியும் சரீரமுள்ளவர்
- கரடுமுரடாகவம், உரோமங்களடர்ந்தும் இருக்கும் உடலுடையவர்
- முகம், கை, கால், இடுப்பு, தொடை, பின்பாகம் எல்லாமே பெருத்ததான சரீரமுடையவர்
- பிடிவாத குணம் கொண்டவர்
- பிறருடைய மனைவி, செல்வம் இவைகளில் ஆசை கொள்பவர்
- கெட்ட காரியங்களில் விருப்பமுள்ளவர்
- கூடிக்குறையும் அதிர்ஷ்டமுள்ளவராக இருப்பவர்
- பூக்கள் வாசனைத் திரவியங்கள் நண்பர்கள் மீது மிக்க பிரியமுள்ளவர்
- வெகு தூரம் நடக்கச் சக்தியுள்ளவர்
மீன ராசியில் பிறந்தவர்
- ஜலத்திலிருந்து கிடைக்கும் முத்து, பவளம் போன்ற பொருட்களின் மேல் விருப்பமுள்ளவர். அவற்றை வைத்திருப்பவர்.
- பிறருடைய பொருட்களை அனுபவிப்பவர்
- நல்ல ஆடைகளின் மீது ஆசை வைத்திருப்பவர்
- மனைவி மீது அதிக அன்பு செலுத்துபவர்
- சீரான அழகான உடற்கட்டுடையவர்
- பெரிய தலையை உடையவர்
- எதிரிகளை வெல்பவராக இருப்பார்
- பெண்களுக்கு அடங்கியவர் (பெண்களை அடக்கியாள்பவர் என்ற கருத்தும் உண்டு)
- அழகிய கண்களையுடையவர்
- புதையல் கிடைத்து அனுபவிப்பவர்
- நல்ல படிப்பாளியாக இருப்பவர்
மேலே சொன்ன பலன்கள் யாவும் சந்திரன், சந்திரனிருக்கும் இராசிக்கு அதிபன், அந்த ராசி இவை மூன்றின் பலத்தைப் பொறுத்து ஏற்றத் தாழ்வுகளுடன் அமையும். ஜன்ம காலத்தைப் போலவே, பிரஸ்ன காலத்திலும் சந்திரனிருக்கும் ராசியை வைத்துப் பலன்களை யூகித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ராசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட சுபாவங்கள் சொல்லப்பட்டுள்ளன. சந்திரன் சந்திரனிருந்த ராசியாதிபதி சந்திர திரேகாணாதிபதி ஆகியோரின் பலத்தைப் பொறுத்துப் பலன்கள் அமையும். இதிலே சொல்லப்பட்ட பலன்களில் எவையெவை பெண்களுக்குப் பொருந்துமோ அவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கென்றே ‘ஸ்த்ரி ஜாதகாத்யாயம்’ என்று வராகமிஹிரர் ஒரு அத்யாயம் எழுதியுள்ளார். பெண்களின் குணகர்மஸ்பாவங்கள் பற்றித் தெரிந்துகொள்ள அந்த அத்யாயத்தைக் கவனமுடன் படித்துக்கொள்ளலாம்.
எல்லோரும் வேலைக்குப் போக விரும்புகின்ற இக்காலத்தில் ஜாதக அடிப்படையில் ஒருவருக்குத் தொழில் அல்லது ஜீவனம் எப்படி அமையும் என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம். கட்டுரை 24.01.2016ல் வெளியாகும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
