சோதிடத்தில் லக்னத்தை உயிர் என்றும், எட்டாமிடத்தை உடலென்றும் கூறுவதுண்டு. லக்னாதிபதியும்,அட்டமாதிபதியும் பலத்திருந்தால் தீர்க்காயுள் என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கருத்து. ஆனால் இன்று நாம் தரப்போகும் ஜாதகம் இந்தக் கருத்தைப் பொய்யாக்குகின்றது.

sample horoscope

sample horosope

sample horoscope

சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் தசையிருப்பு வருடம் 4 மாதம் 10 நாள் 18.

இந்த ஜாதகி ஒரு ஆசாரமான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எனது தந்தையாரின் நெருக்கமான நண்பர். தங்கம், வெள்ளி வியாபாரம் செய்து வந்தவர். மதுரையில் செல்வந்தரான ஒருவருக்கு மணஞ் செய்து வைக்கப்பட்ட இவர், தனது முப்பதாவது வயதில் மரணமடைந்தார். 1140ம் ஆண்டு, ஆனி மாதம் மரணமடைந்ததாக என் தந்தையார் குறித்து வைத்துள்ளார். அதாவது ஆங்கில வருடத்தில்,1965ம் வருடம், ஜூன் 15 முதல் ஜூலை 15 முடியவுள்ள காலத்தில் இவர் இயற்கை எய்தியுள்ளார். இவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சனி லக்னத்தில், தனது மூலத்ரிகோண வீட்டில், வக்ர பலத்துடன் உள்ளது. அட்டமாதிபதி புதன் தனது உச்ச  மற்றும் மூலத்ரிகோண வீடான கன்னியில், வக்ரமாக உள்ளது. சோதிடர்களின் மத்தியில் நிலவி வரும் கருத்துக்களின்படி இவர் எண்பது வயது வரையாவது வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு.

பிருஹஜ் ஜாதகத்தின் அரிஷ்டாத்தியாயத்தில், சுபர்களால் பார்க்கப்படாத சந்திரன், எந்த ராசியிலாவது கடைசி நவாம்சத்தில் இருக்கும்போது, திரிகோணங்களில் பாபிகள் இருந்தால் பன்னிரண்டு வயதுக்குள் மரணம் வரும் என்ற சுலோகம் ஒன்று உள்ளது. இங்கே சுபர்களால் பார்க்கப்படாத சந்திரன் (ஆனால் சுபரான புதனோடு சேர்க்கை) கடைசி நவாம்சத்தில் இருந்து லக்னத்திற்குத் திரிகோணத்தில் சூர்யனும் இருப்பதால், இந்த ஜாதகத்திற்குப் பாலாரிட்டதோசம் உள்ளதாகத்தான் கருதப்பட வேண்டும். பலத்திருக்கும் லக்னாதிபதியாலும் அட்டமாதிபதியாலும் பால்யப் பருவ மரணம் அற்பாயுளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.

குருப்பெயர்ச்சிப் பலன்கள், சனிப்பெயர்ச்சிப் பலன்கள் என்று நீட்டி முழக்கும் சோதிடர்களுக்கும், அதை நம்பி ஆட்டு மந்தைகள் போலத் திரியும் மக்களுக்கும் ஒரு குறிப்பு.

இந்தப் பெண்மணி மரணமடைந்த போது வியாழன் ரிசபத்தில் இருந்தது. அதாவது இந்தப் பெண்ணின் ஜன்மராசிக்கு ஒன்பதாமிடத்தில். அதேபோலச் சனி கும்பத்தில் இருந்தது. அதாவது இந்தப் பெண்ணின் ஜன்மராசிக்கு ஆறாமிடத்தில். பரணி நட்சத்திரத்தில் மேச ராசியில் பிறந்துள்ள இப்பெண்மணியின் கணவர் ஜாதகத்தில், கோசார குரு ராசிக்கு இரண்டாமிடத்திலும், கோசாரச் சனி ராசிக்குப் பதினோராமிடத்திலும் இருக்கின்றன. குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சோதிட ஆர்வலர்கள் இக்குறிப்புக்களைக் கவனிக்கவும்.

 

This Week’s Quote:

Life isn’t about finding yourself. Life is about creating yourself.

-  George Bernard Shaw

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 95 guests and no members online