சென்ற வாரம் ஒரு ஜாதகரின் 26-வது வயதுக்கான வருசப்பிரவேச ஜாதகத்தை ஆய்வு செய்திருந்தோம். ஒரு வருடத்துக்கான கிரக தசைகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.



ராகு, கேது ஸ்புடங்களைத் தவிர்த்து லக்னம் மற்றும் சூரியன் முதல் சனி வரையுள்ள ஏழு கிரகங்கள் ஆக மொத்தம் 8 தசைகளே நடைபெறும். தசாநாட்களைக் கண்டுபிடிக்க முதலில் ராசியை விட்டுவிட்டுப் பாகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணிக்கையில் குறைவான பாகையைப் பெற்றிருக்கும் கிரகத்தை முதலில் எழுதிக்கொண்டு பின்னர் அதற்கு அதிகமான பாகைகளைப் பெற்றிருக்கும் கிரகத்தை எழுத வேண்டும். இப்படியே கிரகங்களை வரிசைப்படு;த்தினால் இந்த ஜாதகத்தின் தசாநாதர்கள் இப்படித்தான் அமைவார்கள்.
செவ்வாய், புதன், வியாழன், சனி, லக்னம், சந்திரன், சுக்கிரன், சூர்யன். 1 பாகை 33 கலையில் உள்ள செவ்வாய் முதலிலும், 25 பாகை 14 கலையில் உள்ள சூரியன் கடைசியிலும் இருக்கும். ஏறு வரிசையில் இந்தக் கிரகங்களை அக்கிரகங்களின் ஸ்புடங்களோடு கீழ்க்கண்டவாறு எழுதிக்கொள்ள வேண்டும்.

பின்னர் முதலில் உள்ள பாகைகளை அப்படியே வைத்துக்கொண்டு, பின்னர் இரண்டாவது உள்ள புதனின் 5 பாகை 13 கலைக்கும், முதலில் உள்ள 1 பாகை 33 கலைக்கும் உள்ள வித்தியாசத்தை எழுத வேண்டும். பின்னர் 3-வது உள்ள குருவுக்கும்,இரண்டாவது உள்ள புதனுக்கும் உள்ள வித்தியாசத்தை எழுத வேண்டும். இப்படியே குறித்துக்கொண்டு போனால் கீழ்க்கண்டவாறு இந்த அட்டவணை அமையும்.

இப்பொழுது இந்த பாகை கலைகளைக் கூட்டினால் சூரியன் பெற்றிருக்கும் 25 பாகை 14 கலை கிடைக்கும். அப்படிக் கிடைக்கவில்லையென்றால் ஏதோ ஓரிடத்தில் தவறு செய்திருக்கின்றோம் என்று அர்த்தம். (60 கலை ஒரு பாகை என்பதை நினைவில் கொள்க)
ஒரு வருடத்தின் நாட்களான 365.25 என்பதை 365 நாட்கள் 6 மணி நேரம் என எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நாட்களை மணிகளாக்கினால் 365 x 24 = 8760 மணிகள் கிடைக்கும். இத்துடன் 6 மணி நேரத்தைக் கூட்டினால் ஓர் ஆண்டுக்கு 8766 மணி நேரங்களாகின்றது. இந்த 8766 மணி நேரங்களை மேலே உள்ள விகிதப்படி கிரகங்களுக்குப் பங்கு வைக்க வேண்டும்.
மேலேயுள்ள ஜாதகத்தில் அதிகமான பாகை 25 கலை 14. இதைக்கலையாக்க 25 x 60 = 1500 +14= 1514. மொத்த மணி நேரங்களான 8766-ஐ 1514 பங்கு வைத்து ஒவ்வொரு கிரகத்துக்கும் இரண்டாம் அட்டவணையில் கிடைக்கப் பெற்ற கலைகளால் பெருக்கினால் அந்த கிரகத்துக்குரிய தசா காலம் மணிகளில் கிடைக்கும்.

பாதிக்கு மேல் வந்தால் முழு எண்ணாக்கிக் கொள்ளலாம். இப்போது கடைசி வரிசையில் உள்ள எண்களைக் கூட்டினால் 8766 வரும். வரவில்லையென்றால் கணக்கில் பிழை என்று அர்த்தம்.
இப்போது 538 மணி நேரங்களை நாட்களாக்கினால் 22 நாட்கள் 10 மணி நேரம் கிடைக்கும். 1274 மணி நேரங்களை நாட்களாக்கினால் 53 நாட்கள் 02 மணி நேரம் கிடைக்கும். எல்லாக்கிரகங்களுக்கும் கணக்கிட்டால் கீழ்க்கண்டவாறு கிடைக்கும்.

இந்த முறைப்படி கணக்கிட்டு வருசப்ரவேச நாளான 11.07.1981 பகல் மணி 11 நிமிடம் 23 உடன் கிரக தசைகளை முறைப்படி சேர்த்துக்கொண்டால் என்று, எத்தனை மணிக்கு, எந்தக் கிரகத்தின் தசை ஆரம்பித்து, என்று, எத்தனை மணிக்கு முடியும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். சென்ற வாரக் கட்டுரையில் தசைகள் ஆரம்பிக்கும் நேரம் முடியும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும்.
முதலில் கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றினாலும் பழகப்பழக மிகவும் எளிதாகும் கணக்குகள்தாம் இவை. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஜாதகத்துக்கு வருசப்ரவேச முறைப்படி ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு கணக்கிட்டுத் தங்களது ஜாதகத்தை அவர்களே பார்த்துக் கொள்ளலாம். கல்கத்தாவிலிருந்து வெளிவரும் லாஹிரியின் ‘இண்டியன் எபிமெரிஸ்’ புத்தகத்தில் வருசப்ரவேச தினம் மற்றும் மணியை எப்படிக் கண்டுபிடித்துக் கொள்வது என்ற ஒரு அட்டவணை உள்ளது. தேவைப்படுபவர்கள் ஏதாவது ஒரு வருடத்துக்கான புத்தகத்தை வாங்கி அந்த அட்டவணையைக் குறித்து வைத்துக்கொள்ளலாம்.
மேலேயுள்ள ஜாதகரின் திருமணம் 01.11.81ல் வியாழதசையின் போது நடந்தது என்று குறி;ப்பிட்டிருந்தோம். 31.12.81 முதல் 08.04.82 முடிய உள்ள காலத்தில் நடந்த சந்திர தசையில் இந்த ஜாதகரின் தந்தையார் காலமானார். ஜன்ம ஜாதகத்தையும், இந்த வருச ஜாதகத்தையும் நன்கு கவனித்து ஏன் சந்திரதசையில் தந்தையாரின் மரணம் நேர்ந்தது என்பதை ஒருவர் கண்டு கொண்டால் அவர் சோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பது சத்யம்.
This Week’s Quote:
Man alone is born crying, lives complaining, and dies disappointed.
- Samuel Johnson
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
