சென்ற வாரம் திருமணம் பற்றிய பிரச்னத்தின்போது எவ்வாறு விடையளிக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். இன்று நோய்கள் குறித்த கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
- பிரச்ன லக்னத்துக்கு 3, 11 இந்த இடங்களில் பாபக்கிரகங்கள் இருந்தாலும், 3, 6, 8, 11 இந்த இடங்கள் தவிர்த்த மீதமுள்ள இடங்களில் சுபர்கள் இருந்தாலும், பிரச்னம் கேட்பவருக்கு நோய்கள் இல்லையென்றும், இருந்தாலும், அது விரைவில் குணமாகிவிடும் என்றும் சொல்ல வேண்டும்.
- 1, 5, 9, 8 இந்த பாவங்களில் குளிகன் இருந்தால், கடுமையான நோய் உள்ளது என்று சொல்ல வேண்டும்.
- 6, 8, 12ல் உள்ள சுபக்கிரகங்களும், 1, 5, 9, 4, 7 இந்த இடங்களில்உள்ள பலமற்ற பாபக்கிரகங்களும் , நோயைக் கொடுக்கின்றன. நோய்களைத் தருகின்ற கிரகங்களே, லக்னாதிபதிக்கு அதிசத்துருவாக இருந்தால், கடுமையான நோயையும், சில சமயங்களில் மரணத்தையும் கொடுக்கின்றன.
- சூர்யனால் வயிற்று நோயையும், சந்திரனால் இருதய சம்பந்தமான நோயையும், செவ்வாயால் தலை சம்பந்தப்பட்ட நோய்களையும் அறிய வேண்டும்.
- புதனுக்கு மார்பு, குருவுக்குத் தொடைகள், சுக்கிரனுக்கு முகம், சனிக்குக் கால்கள் என்று நோய் பீடிக்கும் இடங்கள் சொல்லப்பட்டுள்ளன.
- கோபம், பயம், துக்கம் இவைகளினால் வரும் நோய்கள் மானஸ நோய்கள் என்றழைக்கப்படுகின்றன. ஐந்து மற்றும் எட்டாம் இடங்களால் இவற்றைச் சொல்ல வேண்டும்.
- பிரச்ன லக்னத்திலிருந்து சந்திரன் எவ்வளவு தூரத்தில் முன்னால் உள்ளதோ, அவ்வளவு தூரத்திற்கு லக்னத்துக்குப் பின்னால் சந்திரனிருந்தபோது, நோய் ஆரம்பமானது என்று அறிந்து கொள்ள வேண்டும். (பிரச்ன லக்னம் கடகம் என்றும், சந்திரன் விருச்சிகத்தில் உள்ளது என்றும் வைத்துக்கொண்டால், பிரச்ன லக்னத்திலிருந்து சந்திரன் 5ம் ராசியில் உள்ளது. எனவே கடகத்திலிருந்து பின்னால் உள்ள 5வது ராசியான மீனத்தில் சந்திரன் இருந்தபோது வியாதி ஆரம்பமாயிற்று என்று சொல்லலாம்)
- 6க்குடையவன் இருக்கும் ராசியில், சந்திரன் இருக்கும் போது நோய் ஆரம்பித்தது என்றும், 4க்குடையவன் இருக்கும் ராசிக்குச் சந்திரன் வரும் போது நோய் குணமாகும் என்றும் சொல்ல வேண்டும்.
- லக்னம், லக்னாதிபதி, சந்திரன் இவர்களுக்குப் பாபக் கிரகங்களின் சேர்க்கை, பார்வை இவை ஏற்பட்டபோது நோய் ஆரம்பித்தது என்றும், இம்மூன்றுக்கும் சுபர்களின் பார்வை சேர்க்கை ஏற்படும் போது நோய் குணமாகும் என்றும் கண்டு கொள்க.
- பிரச்ன லக்னம் வைத்தியரையும், ஏழாமிடம் நோயையும், பத்தாமிடம் நோயாளியையும், நான்காமிடம் மருந்தையும் குறிக்கின்றன.
வியாதிகள் குறித்த கேள்விகளின்போது நோய்வாய்ப்பட்டவரின் ஜன்ம ஜாதகம் இல்லாதபட்சத்தில், மேற்கண்டவாறு விடையளிக்கலாம். ஆனால் ஜன்ம ஜாதகம் இருக்கும்போது அதை மிகவும் நுட்பமாகப் பரிசீலித்து தற்போது நடக்கின்ற தசா, அந்தர்த்தசா, தற்போதைய கிரக நிலைகள் இவற்றையும், அஷ்டவர்க்கத்தையும் சேர்த்துத்தான் விடையளிக்க வேண்டும்.
அதிகமான ஜாதகங்களைப் பார்க்காத ஒரு சோதிடர், பிரச்னத்தின் மூலமாகவே எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிடலாம் என்பது இயலாத காரியம். பிரச்னம் என்பது மிகவும் அனுபவம் பெற்ற சோதிடர்களுக்கு மட்டுமே எளிதாகப் பிடிபடும். மற்றவர்கள் இதே வழியில் முயன்று பார்த்தால் நூறு சதவீதம் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.
This Week’s Quote:
Where all is but dream, reasoning and arguments are of no use, truth and knowledge nothing.
- John Locke
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
