லக்னாதிபதி கெடுதல் செய்யும் இடங்களில் இருந்தால்கூடக் கெடுதல் செய்யாது என்பது உண்மையா? என ஒரு வாசகி கேள்வி அனுப்பியுள்ளார். லக்னாதிபதி தான் இருக்கும் பாவத்தை விருத்தி செய்வார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. எனவேதான் லக்னாதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருக்கக்கூடாது என்ற கொள்கையும் வந்திருக்கின்றது. ஒரு மனிதன் தனக்குத்தானே தீங்கு செய்யமாட்டான் என்ற நம்பிக்கையினால்தான் இந்தக் கருத்து வந்திருக்கக்கூடும். ஆனால் தெரிந்தே மனிதர்களில் பெரும்பாலோர் தங்களுக்குக் கெடுதல் செய்வதை நாம் தினந்தோறும் கண்டு வருகின்றோமே! அப்படியிருக்க இந்தக் கூற்றை நாம் எப்படி ஒப்புக்கொள்வது? எமது தந்தையாரின் ஜாதகத் தொகுப்பிலிருந்து ஒரு ஜாதகத்தைத் தருகின்றோம்.


ராகு தசையில் இருப்பு 1 வருச ம், 11 மாதம், 23 நாட்கள். இவருக்கு 29.09.1972 முதல் சனி தசை நடப்பு. சனி தசை சூரிய புக்தியில் 05.05.1983ல் இவர் காலமானார். சனி இவருக்கு லக்னாதிபதிதான். சனி குருவின் பார்வையுடன் கூடிய ஒன்பதாமிடத்தில் சொந்த நவாம்சத்தில் இருக்கின்றது. (பாதகஸ்தானத்தில் இருப்பதால் கெடுதல் செய்தது என்றும், ராசிநாதன் சுக்கிரன் நீசமடைந்துவிட்டான் என்றும் கூறுவோர் சிலர் இருப்பர்) சுக்கிரன் நீசமானாலும் நீசபங்க ராஜயோகம் இருக்கின்றது என்று சமாதானம் கூறிக்கொள்ளலாம். ஆனால் லக்னாதிபதி கெடுதல் செய்யமாட்டார் என்ற கூற்று பொய்யாகியுள்ளது. இவர் அல்பாயுளில் காலமானதற்கான சோதிடக் காரணங்கள் பின்னர் ஒரு கட்டுரையில் விவரிக்கப்படும். லக்னாதிபதி நல்ல பலனைத்தான் செய்யும், உச்சக்கிரகம் நன்மையைத்தான் செய்யும் என்ற பொய்யான நம்பிக்கைகளை வாசகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த ஜாதகத்தைத் தந்தோம்.
This Week’s Quote:
Tradition is a guide and not a jailer.
- W. Somerset Maugham
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
