ஆங்கில இலக்கிய உலகில், நாடாகாசிரியர் சேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாகக் காப்பிய ஆசிரியராக மதிக்கப்படும் ஜாண் மில்டனின்  ஜாதகத்தை இந்த வாரம் தருகின்றோம். அவரது  ஜாதகத்தில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் மூன்று.

  1. கவிஞராக விளங்கியதற்கான யோகங்கள்.
  2. முதலிரண்டு மனைவியரின் இறப்பு.
  3. 44 வயதுக்கு மேல் பார்வையை இழந்ததற்கான காரணங்கள்.

19.12.1608ல் பிறந்த அவரது ஜாதகம் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.

sample horoscope

sample horosope

sample horoscope

sample horosope

கவிஞராக விளங்கியதற்கான ஜாதகக் குறிப்புக்கள்:

  • இரண்டாம் பாவத்தில் சுக்கிரனும், புதனும் சேர்க்கை.
  • இரண்டாம் பாவத்தில் வர்க்கோத்தம சுக்கிரன்.
  • இரண்டுக்குடைய வியாழன் ஐந்தாம் பாவத்தோடு சேர்க்கை.
  • லக்னத்துக்கு, உச்சம் பெற்றுப் பலமாக இருக்கும் வளர்பிறைச் சந்திரனின் பரிபூரணமான பார்வை.
  • மூன்றுக்குடைய சனி, சந்திரனுக்குத் திரிகோணத்திலும், குருவுக்குக் கேந்திரத்திலும் இருப்பது.

  • (பாரதியும், ஷெல்லியும் கட்டுரையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.)

மனைவியரின் இறப்புக்கான குறிப்புக்கள்:

  • அட்டமாதிபதி புதன் இரண்டாம் பாவத்தில் இருப்பது.
  • இல்லற வாழ்க்கையைக் குறிக்கும் புள்ளி தனுசில் 29 பாகை 23 கலையில் இருக்கிறது. இது ஏழுக்கு எட்டாமிடமான இரண்டில் இருப்பது மனைவிக்குக் கெடுதலைச் செய்யும்.
  • ஏழாம்பாவாதிபதி சுக்கிரன் உபய ராசியில், உபய  ராசி அம்சத்தில் இருக்கும் போது இல்லற வாழ்க்கையைக் கெடுக்கின்றது.
  • துவாதசாம்சச் சக்கரத்தில் ஏழுக்குடைய வியாழன், ஆறாமிடத்தில் அமைந்து, பன்னிரண்டிலுள்ள செவ்வாய், சனியால் பார்க்கப்படுவது.

கண் பார்வை இழப்புக்கான குறிப்புக்கள்:

  • ஆறாம் பாவாதிபதி சுக்கிரன் இரண்டில் இருப்பது.
  • எட்டாம் பாவாதிபதியும் இரண்டில் இருப்பது.
  • ஆறாம் பாவத்தின் நவாம்சபதி சனி, இரண்டாம் பாவத்தின் நவாம்சபதி செவ்வாயை மூன்றாம் பார்வையாகப் பார்ப்பது.
  • சனியின் பார்வையைப் பெறும் செவ்வாய், பன்னிரண்டுக்குடையவனாகவும் இருப்பது.

 

சோதிட ஆர்வலர்கள் இக்குறிப்புக்களை சோதித்துப் பார்த்துச் சரியான  குறிப்புக்களை எடுத்துக்கொள்ளவும் தவறான குறிப்புக்களைத் தள்ளிவிடவும் கடமைப்பட்டவர்கள் ஆவர்.

 

This Week’s Quote:

None can love freedom heartily, but good men; the rest love not freedom, but licence

-  Milton

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 50 guests and no members online