பொருத்தம் பார்ப்போம்’ என்ற எமது கட்டுரையில் ஒரு பெண்ணின் ஜாதகமும், அப்பெண் இறந்த தேதியின் கிரக நிலைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஆராய்ச்சி மனப்பான்மையுள்ளவர்களுக்காக நாம்  அதைக் கொடுத்திருந்தோம். அதில் அன்றைய தேதியில் சுக்கிரனும் சந்திரனும் கேந்திரப்பார்வையில் இருந்ததையும் (சுக்கிரன் எட்டுக்குடையவன், சந்திரன் ஐந்துக்குடையவன்) குறிப்பிட்டிருந்தோம். ஒரு வாசகர் இந்தக் கேந்திர பார்வை பல்வேறு சந்தர்ப்பங்களில் வந்திருக்கக் கூடும் என்றும், இன்னொரு வாசகர் ஐந்துக்கும், எட்டுக்கும் ஒருவரே அதிபதியாக வந்தால் என்ன பலன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஜாதகத்தில் விதிக்கப்பட்டிருப்பதே நடக்கும் என்று நம்புவதுதான் சோதிடம். தன்னை மாய்த்துக் கொள்ள விரும்பும் ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனும், ஐந்துக்குடையவனும், எட்டுக்குடையவனும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பது எமது முடிவு. அந்த ஜாதகத்தில் இதற்கான அமைப்பு இருந்ததாலும், 25.12.72 தேதியில் அந்த  அமைப்பு கோசாரரீதியாக வந்ததாலும், அந்த சம்பவம் நடந்தேறியது என்பதை நுட்பமாகக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அந்த ஜாதகங்களையும், கோசார நிலையையும் கொடுத்திருந்தோம்.

ஐந்தும், எட்டும் முக்கியமான பாவங்களாகும். ஐந்து புத்தியையும், எட்டு புத்தி எதை நோக்கிப் போகின்றது என்பதையும் குறிக்கின்றன. அறிவியலாளர்கள், தத்துவமேதைகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் எல்லோருக்குமே அவர்களது ஜாதகத்தில் ஐந்தாம் பாவாதிபதியும், எட்டாம்பாவாதிபதியும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். அப்படியானால் சிம்ம லக்னத்துக்கும், கும்ப லக்னத்துக்கும் விசேசமான பலன் ஏதும் உண்டா என்பது ஒரு வாசகரின் கேள்வி. நிச்சயமாக உண்டு. ஏனெனில் ஆன்மீக நாட்டமுடைய நிஜமான சந்நியாசியும், போலி வேதாந்தம் பேசும் கபட சந்நியாசிகளும் அதிகமாகப் பிறந்திருப்பது சிம்ம, கும்ப லக்னங்களில்தான். 

சூதாட்டங்கள்,குதிரைப் பந்தயம், பங்குச் சந்தை முதலீடு போன்றவை மூலம் பணம் சேர்ப்பவர்கள், வாழ்க்கை முழுவதுமே மோசடிகளில் ஈடுபட்டுப் பணம் சேர்ப்பவர்கள் எல்லோருக்குமே ஐந்தும், எட்டும் சம்பந்தப்பட்டிருக்கும்.

இன்னொரு தடவை அந்தக் குறிப்பிட்ட ஜாதகத்தைப் பார்க்கலாம்.

sample horoscope

sample horosope

  • எட்டாம் பாவத்தின் அம்சம் மீன ராசியில் உள்ளது. அங்கே ஐந்தாம் பாவாதிபதி சந்திரனும், எட்டுக்குடைய சுக்கிரனும் சேர்க்கை.
  • த்வாதசாம்ச லக்னம் சிம்மம். சிம்மத்துக்கு ஐந்து, எட்டுக்குடைய வியாழன், சிம்மத்துக்கு ஆறாமிடத்தில் உள்ளது. த்வாதசாம்ச லக்னத்துக்கு இரண்டுக்குடைய புதன், பன்னிரண்டாம் இடமான கடகத்தில் இருந்து வியாழனின் பார்வையைப் பெறுகின்றது. புதன்,குரு இருவருமே சந்திர கேந்திரத்தில் உள்ளனர்.
  • த்வாதசாம்ச லக்னத்துக்கு நான்கில் செவ்வாய், ஏழில் சூரியன், பத்தில் சனி எனக் கேந்திரங்களில் பாபர் இருப்பது அகால மரணத்தைக் குறிக்கும்.

நாம் சொல்லியிருக்கும் சிலவற்றைக் கொண்டு, நாம் சொல்லாமல் தவிர்ப்பதையும் வாசகர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எமது ஆசை

 

This Week’s Quote:

Read much, but not many books.

-  Gustave Flaubert

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 88 guests and no members online