சென்ற வாரம் ஒன்பதாமிடம் - சில அனுபவ உண்மைகள் என்ற கட்டுரையில் நாம் சில தகவல்களைத் தந்தோம். அதற்கு முந்திய வாரம் வந்த கிரேக்கச் சோதிடக் குறிப்புக்கள் என்ற கட்டுரையை விட இதை அதிகமான வாசகர்கள் படித்திருக்கின்றார்கள். ஒருவேளை மேலைநாட்டுச் சோதிடத்தைவிட நமது நாட்டில் தொன்று தொட்டு வரும் சித்தாத்தங்கள் சிறந்தவை என்று எண்ணுகின்றார்களோ என்னவோ? நமக்கு இந்த மாதிரிச் சிந்தனைகள் கிடையாது. நமது கவனத்துக்கு வரும் அனைத்துச் சோதிடக் குறிப்புகளையும் வாசகர்களுக்குத் தர வேண்டும் என்பதே எமது எண்ணம். இந்த வாரம் கிரேக்க, எகிப்திய வானசாஸ்திரிகளிடையே நிலவிய சில கருத்துக்களைத் தருகின்றோம்.

  • பகலில் பிறந்தவர்களுக்குச் சூரியனும், இரவில் பிறந்தவர்களுக்குச் சந்திரனும் முக்கியமான கிரகங்களாக ஆகின்றன.
  • சுபமான விசயங்களைத் தருவதில் சுக்கிரனைவிட வியாழனுக்குப் பலம் அதிகம்.
  • செவ்வாய் லக்னத்தில் இருக்கும்போது, அல்லது விருச்சிக லக்னம் உதயமாகும்போது எந்தச் செயலையும் ஆரம்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • சுபக்கிரகங்கள் ஆறு, எட்டு மற்றும் பன்னிரண்டாமிடத்தில் உள்ள பாபக் கிரகங்களால் பார்க்கப்படும் போது நல்ல பலன்களைத் தருவதில்லை. 
  • பயணங்கள் ஆரம்பிக்கும்போது லக்னம், நான்கு, மற்றும் ஒன்பதாமிடத்தில் சந்திரன் இருப்பது நல்லதில்லை. 
  • வக்கிரமாக இருக்கும் கிரகத்தோடு சேர்ந்திருக்கும் சந்திரன் நல்ல பலனைத் தருவதில்லை.
  • அரசனோ அல்லது இளவரசனோ கடக லக்னம் உதயமாகும் போது பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது.
  • மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் உள்ள ராகு, கேதுக்கள் கெடுதலைச் செய்கின்றன.
  • சனியின் கெட்ட பலனை வியாழனும், செவ்வாயின் கெட்ட பலனைச் சுக்கிரனும் குறைக்கின்றன. 
  • வியாழன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனமாக இருக்கும்போது கடன் கொடுக்கவோ அல்லது பொருட்களை அடகு வைக்கவோ கூடாது.
  • தேய்பிறையில் கண் சிகிச்சை செய்யக் கூடாது.
  • இரண்டுக்குடைய கிரகம், எட்டுக்குடைய கிரகத்தைப் போலக் கெடுதல் செய்யும்.
  • நான்கு கேந்திரங்களில் லக்னம் மிக வலியது. அடுத்தது பத்தாமிடம். மூன்றாவது ஏழாமிடம். கடைசியாக நான்காமிடம்.
  • பதினோராமிடம் வலியது. அடுத்தது இரண்டாமிடம். அடுத்து வருவது ஐந்தாமிடம். அடுத்த இடம் ஒன்பதுக்கு. கடைசியாக மூன்றாமிடம். 
  • மீதமுள்ள ஆறு, எட்டு, பன்னிரண்டாமிடங்கள் வலிமை குறைந்தவை.

பலங்குன்றிய இடங்களில் உள்ள கிரகங்கள் கெட்ட பலனையும், பலமான இடங்களில் உள்ள கிரகங்கள் நல்ல பலனையும் தரும். சோதிட ஆர்வலர்கள் இந்தக் குறிப்புக்களைச் சோதித்துப் பார்த்து தங்களது சோதிட அறிவை விசாலமாக்கிக் கொள்ளலாம்.

 

This Week’s Quote:

The job of the artist is always to deepen the mystery.

-  Francis Bacon

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 54 guests and no members online